இந்தோனேசியாவில் சுனாமி தாக்குதல்: எரிமலை வெடித்து சிதறியதால் நடந்த கோரம்; பலி எண்ணிக்கை 222 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா,ஜாவீ தீவுப்பகுதியில் உள்ள சுந்தா ஜலசந்தியில் ஏற்பட்ட சுனாமி அலையில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். (“இந்தோனேசியாவில் சுனாமி தாக்குதல்: எரிமலை வெடித்து சிதறியதால் நடந்த கோரம்; பலி எண்ணிக்கை 222 ஆக உயர்வு” தொடர்ந்து வாசிக்க…)

9 மாகாணங்களுக்கும் ஒரே நாளில் தேர்தல்

9 மாகாணங்களுக்கும், எந்தவொர காலதாமதமும் இன்றி, ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும் என, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சிமன்றங்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சிமன்றங்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அவர், நேற்று (21) தனது கடமைகளை, உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்ற பின்னரே, மேற்கண்டவாறு தெரிவித்தார். (“9 மாகாணங்களுக்கும் ஒரே நாளில் தேர்தல்” தொடர்ந்து வாசிக்க…)

‘வடக்குக்கு அபிவிருத்தி அமைச்சு உள்ளது; கிழக்குக்கு இல்லை’

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளெனத் தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன், வடக்கு மாகாணத்துக்கு என்று ஒரு தனியான அமைச்சு உள்ள போதும், கிழக்கு மாகாணத்துக்கு அவ்வாறானதோர் அமைச்சு இல்லையெனக் குற்றஞ்சாட்டினார். (“‘வடக்குக்கு அபிவிருத்தி அமைச்சு உள்ளது; கிழக்குக்கு இல்லை’” தொடர்ந்து வாசிக்க…)

கிளிநொச்சியில் வௌ்ளம்: மீட்புப் பணிகள் ஆரம்பம்

கிளிநொச்சியில் பெய்த கடும் மழையை அடுத்து ஏற்பட்ட வௌ்ளத்தில் மூழ்கிய பல கிராமங்களில், இராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று (21) இரவு பெய்த மழையால், மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியதோடு, பல கிராமங்களுக்கான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. (“கிளிநொச்சியில் வௌ்ளம்: மீட்புப் பணிகள் ஆரம்பம்” தொடர்ந்து வாசிக்க…)

ரணிலும் அரசமைப்பை மீறிவிட்டார் : அனுர

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அரசமைப்பை மீறிவிட்டார் என குற்றஞ்சாட்டிய ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எம்.பி., அமைச்சரவையில் அங்கம் வகிக்கவேண்டியவர்களின் எண்ணிக்கை 30 ஆகும் எனும், 35 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியலே ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலை அம்பலப்படுத்துமாறு கோரிநின்றார். (“ரணிலும் அரசமைப்பை மீறிவிட்டார் : அனுர” தொடர்ந்து வாசிக்க…)

மஹிந்தவுக்கு வந்துள்ள சோதனை

(கே. சஞ்சயன்)

அங்குமிங்குமாகச் சுற்றிய பிரச்சினை இப்போது, மீண்டும் மஹிந்த ராஜபக்‌ஷவிலேயே வந்து நிற்கிறது. ஒக்டோபர் 26ஆம் திகதிக்கும், டிசெம்பர் 15ஆம் திகதிக்கும் இடையில் அவர், பிரதமரா, இல்லையா என்ற கேள்வி இருந்தது. இப்போது அவர், எதிர்க்கட்சித் தலைவரா, இல்லையா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இத்தோடு மட்டும் நின்று விட்டால் அவருக்கு அதிர்ஷ்டம் தான். (“மஹிந்தவுக்கு வந்துள்ள சோதனை” தொடர்ந்து வாசிக்க…)

கஜனின் தூய்மைவாதமும் பேரவையின் தவறும்

(புருஜோத்தமன் தங்கமயில்)

விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியைப் பலப்படுத்தும் ஒற்றைச் சிந்தனையோடு, யாழ். மய்யவாத அரசியல் அரங்கு அண்மைய நாள்களில் இயங்கி வருகிறது. தொடர்ந்தும், தூய்மைவாதம் பேசிவரும் கஜேந்திரகுமாரும், அவரது விசுவாசிகளும் புதிய கூட்டணிக்குள் தம்மை இணைப்பது தொடர்பில் நிபந்தனைகளை விதித்து வருகிறார்கள். இது, கூட்டணியை உருவாக்குவதற்காக உழைக்கும் தமிழ் மக்கள் பேரவைக்கு, நெருக்கடியை வழங்கியிருக்கின்றது. (“கஜனின் தூய்மைவாதமும் பேரவையின் தவறும்” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கைபோர்குற்றங்கள்: வெளிநாட்டுநீதித்துறையின்தலையீடுஅவசியம் – சி.வி.விக்னேஸ்வரன்

இலங்கையில்நடைப்பெற்றயுத்தகுற்றங்கள்தொடர்பாகநீதிகிடைக்கவேண்டுமானால்வெளிநாட்டுநீதித்துறையின்உள்நுழைவுஅவசியம்எனமுன்னாள்நீதியரசரும், வடக்குமாகாணமுன்னாள்முதலமைச்சரும்தமிழ்மக்கள்கூட்டணியின்தலைவருமானசி.வி.விக்னேஸ்வரன்தெரிவித்துள்ளார்.
அவர்ஊடகங்களுக்குஅனுப்பிவைத்துள்ளகேள்விபதில்ஊடகஅறிக்கையில்மேற்கண்டவாறுதெரிவித்துள்ளார்.
இலங்கையின்நீதித்துறைதற்போதுசிறந்ததீர்ப்புக்களைத்தரத்தொடங்கியுள்ளன. எனவே, உள்நாட்டு நீதிபதிகள்குழாம்யுத்தக்குற்றவிசாரணைகளைநடத்தலாம்என்றும்வெளிநாட்டுஉள்ளீடல்கள்தேவையில்லைஎன்றும்கூறப்படுகிறது. ஒருநீதியரசராகஇருந்தஉங்களின்கருத்துஎன்னஎன்றகேள்விக்குபின்வருமாறுவிக்னேஸ்வரன்பதிலளித்துள்ளார். (“இலங்கைபோர்குற்றங்கள்: வெளிநாட்டுநீதித்துறையின்தலையீடுஅவசியம் – சி.வி.விக்னேஸ்வரன்” தொடர்ந்து வாசிக்க…)

‘அமைச்சுப் பதவி வேண்டாம்’

அமைச்சரவையின் எண்ணிக்கையை 30ஆக மட்டுப்படுத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்தால், தானும் ரிஷாட் பதியூதினும் எவ்வித அமைச்சுப் பதவிகளையும் பெறமாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் மனோ கணேசன் பதிவிட்டுள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஆளுங்கட்சியினரின் கூட்டத்தில் இது தொடர்பான தமது அபிப்ராயங்களை தானும், ரிஷாட்டும் தெரிவித்ததாகவும் மனோ கணேசன் பதிவிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை, நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கமைய, எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று (18), சபையில் அறிவித்துள்ளார். (“எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த” தொடர்ந்து வாசிக்க…)