‘பதவி விலக்கல், சிறையை ட்ரம்ப் எதிர்கொள்ளலாம்’

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கல் கொஹனால் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை வெளிப்படுத்தாமலிருக்க பணம் வழங்கப்பட்டமை பிரசார நிதி மீறல்களென நிரூபிக்கப்பட்டால், ஜனாதிபதி ட்ரம்ப் பதவி விலக்கல், சிறைத்தண்டனையை எதிர்கொள்ளலாம் என ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரோல்ட் நட்லர் நேற்றுத் தெரிவித்துள்ளார். (“‘பதவி விலக்கல், சிறையை ட்ரம்ப் எதிர்கொள்ளலாம்’” தொடர்ந்து வாசிக்க…)

கஷொக்ஜியின் இறுதி வார்த்தை: ‘என்னால் சுவாசிக்க முடியாது’

சவூதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கஷொக்ஜி கொல்லப்படுவதற்கு முந்தைய இறுதித் தருண ஒலிப் பதிவின் எழுத்து வடிவத்தை வாசித்த தகவல் மூலமொன்றை மேற்கோள்காட்டிய சி.என்.என், ஜமால் கஷொக்ஜியின் இறுதி வார்த்தைகள் ‘என்னால் சுவாசிக்க முடியாது’ என நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

(“கஷொக்ஜியின் இறுதி வார்த்தை: ‘என்னால் சுவாசிக்க முடியாது’” தொடர்ந்து வாசிக்க…)

பரிஸில் மீண்டும் வன்முறை

பிரான்ஸ் தலைநகர் பரிஸில், அந்நாட்டு அரசாங்க -த்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டங்கள், நேற்று முன்தினம் (08), மீண்டும் வன்முறையாக மாறின. இதைத் தொடர்ந்து, பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில், மோதல் ஏற்பட்டது. (“பரிஸில் மீண்டும் வன்முறை” தொடர்ந்து வாசிக்க…)

திட்டமிடப்பட்ட பெருநகரமாக மாறுவது எப்போது ? நீண்ட நகரமான கிளிநொச்சி

(யது பாஸ்கரன்)

‘பரந்தன் கைத்தொழில் மையமாகவும், கிளிநொச்சி கைத்தொழில், வணிகசேவை மற்றும் தொழில்துறை மையமாகவும், இரணைமடுச்சந்தி சுற்றுலா மற்றும் கல்வி அபிவிருத்தி மையமாகவும், திருமுறிக்கண்டி பண்பாட்டு மையமாகவும் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.’ (“திட்டமிடப்பட்ட பெருநகரமாக மாறுவது எப்போது ? நீண்ட நகரமான கிளிநொச்சி” தொடர்ந்து வாசிக்க…)

அவர்களே அவர்களைப் பற்றி கூறுகின்றார்கள்

விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலகப் பொறுப்பாளர்களாக இருந்த KP அவர்களின் நிர்வாகத்தினர் Vs. காஸ்ரோ அவர்களின் நிர்வாகத்தினருக்கிடையில் இடம்பெறும் சொத்து மோதல் ! இரண்டு நிர்வாகங்களிலும் இருந்தவர்களின் கீழ், இருந்த தேசியத்தின் பல மில்லியன் சொத்துக்களை இரு பிரிவினரும் விரைவில் மக்கள் சொத்தாக்க வேண்டுமென்பது முன்னாள் போராளிகளினதும் மற்றும் மக்களினதும் வேண்டுகோள் ! (“அவர்களே அவர்களைப் பற்றி கூறுகின்றார்கள்” தொடர்ந்து வாசிக்க…)

ஜனாதிபதியின் தலைமையின் கீழ் புதிய கூட்டமைப்பு

எதிர்காலத்தில் நடத்தப்படும் எந்தவொரு தேர்தலுக்கும் முகங்கொடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலும் மஹிந்த ராஜபக்ஸவின் பங்குபற்றலுடன் புதிய கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க உள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.

(“ஜனாதிபதியின் தலைமையின் கீழ் புதிய கூட்டமைப்பு” தொடர்ந்து வாசிக்க…)

என்ன தியாகம் செய்தார்கள்

துரையப்பா கொலையின் பின்னால் பலர் கொல்லப்பட்டனர்.இதில் தமிழர்கள் சந்தோசப்பட்டதும் அந்தக் கொலையாளிகளைப் போற்றியதும் உண்மை.இவர்களை அடையாளம் தெரியாமல் ,தெரிந்தும் கைது செய்ய முடியாமல் தடுமாறியதும் வரலாறு. ஆனால் அதே அவர்களே தங்களை அழித்தார்கள்.காட்டிக் கொடுத்தார்கள்.இந்த வரலாற்றை மக்கள் இன்னமும் உணரவில்லை. (“என்ன தியாகம் செய்தார்கள்” தொடர்ந்து வாசிக்க…)

நன்னீர் மீனை மட்டுமே நம்பும் காலம் வெகு தொலைவிலில்லை!

(சாரதா மனோகரன்)
உலகளாவிய ரீதியிலே பல பில்லியன் மக்கள், அதிலும் மிகவும் வறிய வகுப்பைச் சேர்ந்தோர் தமது வாழ்வாதாரத்துக்காக, தொழிலுக்காக, உணவுக்காக, கடல், சமுத்திர சூழற்றொகுதிகளால் வழங்கப்படும் பண்டங்களையும் சேவைகளையும் நம்பியே வாழ்கின்றனர். உலக சனத்தொகையின் 10- -முதல் 12 சதவீதம் ஏறத்தாழ 4.3 பில்லியன் மக்கள் தமது 15 சதவீத புரதத்தேவையை நன்னீர், கடல் வாழ் மீன்கள் மூலம் பூர்த்தி செய்து கொள்வதாக உலக விவசாய ஸ்தாபனம் கண்டறிந்திருக்கிறது. ஏறத்தாழ 200 மில்லியன் மக்கள் புயலிலிருந்தும் கடலைகளிடமிருந்தும் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள பவளப்பாறைகளை நம்பியிருக்கின்றனர். ஆயினும் சமுத்திரங்களின் ஆரோக்கியம், உற்பத்தித்திறனைப் பேணுவதற்கு அத்தியாவசியமான வாழிடங்கள் சில மிக வேகமாகக் குறைவடைந்து செல்வதை ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. (“நன்னீர் மீனை மட்டுமே நம்பும் காலம் வெகு தொலைவிலில்லை!” தொடர்ந்து வாசிக்க…)

சன்னங்களுடன் சனங்களும் வனங்களும்

“கஜா புயல்” மிரட்டியதால் எங்கள் வீட்டில் முப்பது வருசமாக நின்று பழம் பழமாகப் பழுத்துக் கொட்டிய பலா மரத்தை வெட்ட வேண்டியதாகி விட்டது. துக்கம்தான். ஆனால் வேறு வழியில்லை.

கிளைகள் வளர்ந்து வானமுகட்டைத் தொடுமளவுக்கு உயர்ந்து விட்டன. ஏதேனும் ஒரு கிளை ஒடிந்தாலும் கூரையில் பாதி போய் விடும்.

ஏற்கனவே ஒவ்வொரு பழச் சீசனிலும் பத்துப் பன்னிரண்டு ஓடுகள் உடையும். (“சன்னங்களுடன் சனங்களும் வனங்களும்” தொடர்ந்து வாசிக்க…)

அடுத்த தேர்தல். ( பாகம் – 1 )

ஒரு பா.உ. எவ்வாறு ஏகலைவன் ஆகின்றார். ( சுலோகம் – ஆச்சரியம் )
( சஹாப்தீன் நானா )

நமது சிறிலங்காவில் யாருக்குமே, சாதாரண பொதுமக்கள் யாருக்குமே எதுவுமே புரியல.
புரிந்தாலும், அதை விரிவாக புரிஞ்சிக்க முடியல.

அரசியலும், அரசியல் வாதிகளும் என்ற வர்ணப்படம் இன்று சிறிலங்காவையும் தாண்டி
உலகம் முழுக்க ஓடிக்கொண்டிருக்கின்றது.

யார் நல்லவர் என்பதுதான் இந்தப்படத்தின் பெயர்.

(“அடுத்த தேர்தல். ( பாகம் – 1 )” தொடர்ந்து வாசிக்க…)