சன்னங்களுடன் சனங்களும் வனங்களும்

“கஜா புயல்” மிரட்டியதால் எங்கள் வீட்டில் முப்பது வருசமாக நின்று பழம் பழமாகப் பழுத்துக் கொட்டிய பலா மரத்தை வெட்ட வேண்டியதாகி விட்டது. துக்கம்தான். ஆனால் வேறு வழியில்லை.

கிளைகள் வளர்ந்து வானமுகட்டைத் தொடுமளவுக்கு உயர்ந்து விட்டன. ஏதேனும் ஒரு கிளை ஒடிந்தாலும் கூரையில் பாதி போய் விடும்.

ஏற்கனவே ஒவ்வொரு பழச் சீசனிலும் பத்துப் பன்னிரண்டு ஓடுகள் உடையும். (“சன்னங்களுடன் சனங்களும் வனங்களும்” தொடர்ந்து வாசிக்க…)

அடுத்த தேர்தல். ( பாகம் – 1 )

ஒரு பா.உ. எவ்வாறு ஏகலைவன் ஆகின்றார். ( சுலோகம் – ஆச்சரியம் )
( சஹாப்தீன் நானா )

நமது சிறிலங்காவில் யாருக்குமே, சாதாரண பொதுமக்கள் யாருக்குமே எதுவுமே புரியல.
புரிந்தாலும், அதை விரிவாக புரிஞ்சிக்க முடியல.

அரசியலும், அரசியல் வாதிகளும் என்ற வர்ணப்படம் இன்று சிறிலங்காவையும் தாண்டி
உலகம் முழுக்க ஓடிக்கொண்டிருக்கின்றது.

யார் நல்லவர் என்பதுதான் இந்தப்படத்தின் பெயர்.

(“அடுத்த தேர்தல். ( பாகம் – 1 )” தொடர்ந்து வாசிக்க…)

ட்ரம்ப் மிரட்டலை புறக்கணித்தது இந்தியா: ரூபாய் மூலம் கச்சா எண்ணெய் வாங்க ஈரானுடன் புதிய ஒப்பந்தம்

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றபோதிலும், அதனை இந்தியா புறக்கணித்துள்ளது. இந்திய ரூபாயை செலுத்தி கச்சா எண்ணெய் வாங்குவதற்கு ஈரானுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் செய்துள்ளது.

(“ட்ரம்ப் மிரட்டலை புறக்கணித்தது இந்தியா: ரூபாய் மூலம் கச்சா எண்ணெய் வாங்க ஈரானுடன் புதிய ஒப்பந்தம்” தொடர்ந்து வாசிக்க…)

விதைகளுக்கு உயிர்கொடுத்தவர்: ‘நெல்’ ஜெயராமனுக்கு பிரபலங்கள் இரங்கல்

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் சென்னையில் வியாழன் அன்று காலை காலமானார். புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வந்த ஜெயராமன் தன் வாழ்நாள் முடியும் வரை விவசாயிகள் நலன் மீது அக்கறை கொண்டிருந்தார். அவருக்கு நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ட்விட்டரில் நெல் ஜெயராமன் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்த பிரபலங்கள் சிலரின் பதிவுகள் இதோ: (“விதைகளுக்கு உயிர்கொடுத்தவர்: ‘நெல்’ ஜெயராமனுக்கு பிரபலங்கள் இரங்கல்” தொடர்ந்து வாசிக்க…)

‘ஐ.தே.கவின் குற்றச்சாட்டை நிராகரிக்கின்றேன்’

வழக்குகளுக்கு பயந்​தே அரசாங்கத்தை பொறுப்பேற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் சுமத்தும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும், தனக்கு எதிராக சுமத்தப்படும் எந்தவொரு குற்றச்சாட்டையும் நீதிமன்றில் சந்திக்க தயாராகவிருப்பதாக மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். (“‘ஐ.தே.கவின் குற்றச்சாட்டை நிராகரிக்கின்றேன்’” தொடர்ந்து வாசிக்க…)

‘ஜனநாயகத்தை ஏற்படுத்த ரணிலுக்கு ஆற்றல் இல்லை’

நாட்டில் நிலவும் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நமது கட்சிக்குள் இல்லாத ஜனநாயகத்தை, நாட்டில் ஏற்படுத்துவதற்கான ஆற்றல் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இல்லை​யென்றார். (“‘ஜனநாயகத்தை ஏற்படுத்த ரணிலுக்கு ஆற்றல் இல்லை’” தொடர்ந்து வாசிக்க…)

மோதலே ஹெரோய்ன் கைப்பற்ற காரணம்’

போதை வர்த்தக குழுக்களிடையே ஏற்பட்டுள்ள மோதலே பேருவளை கடற்பரப்பில் 231.54 கிலோகிராம் ​ஹெரோய்னைக் கைப்பற்ற காரணமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள பொலிஸ் ​போதைபிரிவு ​அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். (“மோதலே ஹெரோய்ன் கைப்பற்ற காரணம்’” தொடர்ந்து வாசிக்க…)

நூற்றாண்டு தமிழ் சினிமாவில் கிராம சித்தரிப்புகள்

(அஜயன்பால)

70 – பதுகளில் இந்தியா முழுக்க எதிரொலித்த பேர்லல் சினிமா காலக்கட்டத்தில் இந்து வங்காளம் மலையாள மொழிப்படங்களில் கம்யூனிச கருத்துள்ள படங்களே அதிகம் வந்தன. அதே தமிழில் அந்த பேர்லல் இயக்கம் பதினாறுவயதினிலேவுக்குப் பிறகு தோன்றிய போது அது அழகியல் உறவு சிக்கல்கள் மற்றும் எதார்த்த சித்தரிப்புகளுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை முற்போக்கு கருத்தியலுக்கு அல்லது கதையாடலுக்கு வழங்க தவறியது.

(“நூற்றாண்டு தமிழ் சினிமாவில் கிராம சித்தரிப்புகள்” தொடர்ந்து வாசிக்க…)

மீ டூ: ஊடக கர்வம் உடைகிற தருணம்!

(அ. குமரேசன்)

ஊடகத் துறையில் இயங்கிக்கொண்டிருப்பதில் மனநிறைவு, பெருமை என்பதையெல்லாம் தாண்டி ஒரு கர்வம் கொண்டவன் நான். யாரையும் கேள்வி கேட்க முடிகிற வாய்ப்பால் வளர்ந்த கர்வம் அல்ல, சமுதாய மாற்றத்தில் ஒரு மையமான பாத்திரம் வகிக்கிற ஊடகத்தில் ஒரு சிறு புள்ளியாகவேனும் இருக்கிறோம் என்ற உணர்வால் ஏற்பட்ட கர்வம் அது. அந்தக் கர்வம் தகர்ந்து கூசிப்போய் நிற்கிற தருணங்களும் ஏற்படுவதுண்டு. ‘மீ டூ’ இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காகச் சென்னையில் தென்னிந்தியத் திரைப்படப் பெண்கள் சங்கம் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி அத்தகைய தருணங்களில் ஒன்று. (“மீ டூ: ஊடக கர்வம் உடைகிற தருணம்!” தொடர்ந்து வாசிக்க…)