உன்னத கனவுகளின் காலத்தின் தோழர்.

மறைந்து 14 ஆண்டுகள்!!
தோழர் உமாகாந்தன் எமது ஈழமக்கள் பாரம்பரியத்தின் சர்வதேசியவாதி.
உலகளவிய பார்வையுடன் இலங்கை ஈழதேசிய வர்க்க சமூக விடுதலைப்போராட்டத்தை அணுகியவர்
1980கள் 90களின் புலம் பெயர் அரசியல் இலக்கிய சூழலில் தோழர் உமாகாந்தன் மிக முக்கிய ஆளுமை.
அவரது ஆளுமையின் தாக்கத்துடனான பிரான்சுப் பாரம்பரியம் இன்றளவில் நிலவுகிறது.
(“உன்னத கனவுகளின் காலத்தின் தோழர்.” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 09)

(Thiruchchelvam Kathiravelippillai)
எண்பதுகளின் இறுதிப்பகுதிகளில் தமிழ்பேசும் மக்களிடையே பிரிவினையை நோக்காகக் கொண்டு மொசாட் வழி நடத்தலில் பல திட்டங்கள் நடைபெற்றன. அம்பாறையில் சிறப்பு அதிரடிப்படையினரின் தலைமையிலும் திருக்கோணமலையில் இராணுவ புலானாய்வாளர்கள் தலைமையிலும் பணிகள் நடைபெற்றன.

(“தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 09)” தொடர்ந்து வாசிக்க…)

வடக்குக்கு வந்துள்ள ஆபத்து

(கே. சஞ்சயன்)

காலநிலை மாற்றங்களால், அடுத்த 30 ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரம், வாழ்க்கைத் தரம் என்பன மோசமான நிலையை எட்டும் என்று, உலக வங்கியின் அண்மைய அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. “வெப்பநிலை, மழைவீழ்ச்சி மாற்றங்கள் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படுத்தப் போகும் தாக்கங்கள்” என்ற தலைப்பில், அண்மையில் உலக வங்கி, ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது. தெற்காசியாவில், இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் குறித்து, தனித்தனியான அறிக்கைகளாக வெளியிடப்பட்டன.

(“வடக்குக்கு வந்துள்ள ஆபத்து” தொடர்ந்து வாசிக்க…)

எமது பிரச்சினையை நாமே தீர்த்துக்கொள்வோம்; எவரும் தலையிட வேண்டாம்’

இலங்கையில், நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு, இலங்கை இராணுவத்தினர், அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளனர். யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 10 வருடங்களாகியுள்ள நிலையில், இலங்கையில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவெனக் கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாற்றங்களுடன் கூடிய இலங்கையை, புதிய கண்ணோட்டத்துடனும் புதிய சிந்தனையுடனும் பார்வையிடுமாறு, சர்வதேசத்திடம் கோரினார்.

(“எமது பிரச்சினையை நாமே தீர்த்துக்கொள்வோம்; எவரும் தலையிட வேண்டாம்’” தொடர்ந்து வாசிக்க…)

சமூகநல அரசாங்கங்களின் முடிவு: ஸ்கன்டினேவிய அனுபங்கள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான உறவு, தொடர்ச்சியாக மாற்றமடைந்து வருகிறது. மக்களின் நலன்களைக் காக்கும் அரசாங்கம், ஒருபோதும் இருந்ததில்லை. ஆனால், போராட்டங்களும் புரட்சிகளும் அரசாங்கத்தை, மக்கள் நலன் பேணும் ஒன்றாக மாற்றின. இப்போது நிலைமை மாறுகிறது. அரசாங்கங்கள் சமூக நலன்களைத் தவிர்ப்பனவாக உருமாறியுள்ளன. இம்மாற்றம், சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி உள்ளது.

(“சமூகநல அரசாங்கங்களின் முடிவு: ஸ்கன்டினேவிய அனுபங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

திலீபனுக்கு மிக அமைதியாக செலுத்தப்பட்ட அஞ்சலி!

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை தடுப்பதற்கு சிறிலங்கா பொலீஸ் தரப்பிலிருந்து போடப்பட்ட வழக்கினை சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் மிக நிதானமாக கையாண்டு வெற்றிபெற்றிருக்கிறார்கள். இருந்தாலும், இந்த வழக்கை தங்களது தேசிய சதிராட்டத்துக்கு கிரீடமாக வைத்து எப்படியாவது தங்களது அணிக்காக ஒரு goal அடிக்கவேண்டும் என்று கடைசிவரை குறுக்காலும் மறுக்காலும் ஓடித்திரிந்த கோஷ்டிகள் தற்போது நீதிமன்றத்துக்கு வெளியில் வந்து நின்று வழக்கை வென்ற சுமந்திரனுக்கே வகுப்பெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

(“திலீபனுக்கு மிக அமைதியாக செலுத்தப்பட்ட அஞ்சலி!” தொடர்ந்து வாசிக்க…)

1990ம் ஆண்டு……………………

1990ம் ஆண்டு நான் ஒருவிபத்தாக வடக்குகிழக்குமாகாணசபை உறுப்பினராக இருந்த போது ஒரேநாளில் மூன்று பாடசாலைகளைத் திறந்தோம் .இதுமாவடிச்சேனை அல் இக்பால் வித்தியாலயம்…அதிபராக கணிதப்புலி அக்கரைப்பற்றைச்சேர்ந்த ஹயாத்து பாவா ஆசிரியரை நியமித்தோம் …

நண்பர் Y.அகமத் அவர்கள் கோட்டக்கல்வி அதிபராகவிருந்தார் அவரின் பங்களிப்பே அதிகம் ..நான் ஒரு டிரக்டரில் பிறைந்துரைச்சேனை அதிபரான SAS மகுமூத் அவர்களிடம் கதிரை மேசைகளை இரவலாக ஏற்றிவந்தேன் ..கோட்டக்கல்வி அதிகாரி அவர்களும் நானும் விருந்தினர் பதிவேட்டில் குறிப்புகளை எழுதி பாடசாலையை ஏழு மணிக்கெல்லாம்ஆரம்பித்து வைத்தோம்..
அன்று கற்குடா முஸ்லிம்களுக்கு ஒரேநாளில் மூன்று பாடசாலைகள் உருவாக ஒத்துழைத்த நல்ல உள்ளங்களை இந்தக்கணத்தில் நினைவுகொள்கிறேன்…
முதலமைச்சராகவும் கல்விஅமைச்சராகவுமிருந்த தோழர் வரதராஜப்பெருமாள் , செயலாளராகவிருந்த ஜனாப் மன்சூர் அவர்கள் மற்றும் மாகாண கல்விப்பணிப்பாளர் மறைந்த தியாகராசா அவர்கள்… பாடசாலைக்கான காணியைத்தந்துவிய அகமதுலெவ்வை அவர்கள் அனைவரையும் நினைவு கொள்வோம் நண்பர்களே

(Slm Hanifa)

‘தமிழர் தரப்பு நிராகரிக்கிறது’

போர்க் குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டவர்களை, அரசியல் கைதிகளுடன் இணைத்து, பொதுமன்னிப்பு என்ற யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகளில் முன்வைப்பாராயின், அந்த யோசனையை தமிழர் தரப்பு, அடியோடு நிராகரிப்பதாகத் தெரிவித்த, தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), போர்க் குற்ற விசாரணை நடைபெற்று, நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே தங்களுடையதும் கூட்டமைப்பினதும் கோரிக்கையாகும் எனவும் தெரிவித்துள்ளது.

(“‘தமிழர் தரப்பு நிராகரிக்கிறது’” தொடர்ந்து வாசிக்க…)