சிரியாவின் இட்லிப்: வரலாற்றின் முடிவு?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

நீண்ட யுத்தமொன்று, அதன் கடைசிக் கட்டத்தை அடைந்திருக்கிறது.
பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவுகொண்டு, இலட்சக் கணக்கானோர் இடம்பெயரக் காரணமான யுத்தத்தின் முடிவு நெருங்குகிறது. இந்த யுத்தத்தை யார் முன்னெடுத்தார்களோ, யார் தொடக்கினார்களோ, நடைபெற்ற அனைத்து அவலத்துக்கும் பொறுப்புச் சொல்ல வேண்டியவர்கள் யாரோ, அவர்கள் இன்று அமைதி பற்றியும் மனிதாபிமானம் பற்றியும் பெண்கள், குழந்தைகள் பற்றியும் பேசுகிறார்கள்.

(“சிரியாவின் இட்லிப்: வரலாற்றின் முடிவு?” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும் (தொடர் _ 6)

(Thiruchchelvam Kathiravelippillai)

சிறிலங்கா 1955 ஆம் ஆண்டுவரை மாகாணங்களையே நிருவாக அலகாகக் கொண்டிருந்தது. 1955 இல் ஒன்பது மாகாணங்கள் 21 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. 1961 இல் அம்பாறை மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது. 1978 இல் கம்பஹா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இறுதியாக 1984 பெப்ரவரியில் கிளிநொச்சி 25 ஆவது நிருவாக மாவட்டமாக உருவானது.
1961 ஆம் ஆண்டு அம்பாறை உருவாக்கப்பட்ட போது பொலன்னறுவையிலிருந்து 57கி.மீற்றர்கள் தூரமும் அம்பாறையிலிருந்து 135கி.மீற்றர்கள் தூரமும் அம்பாறை மாவட்டத்திலேயே அதிகளவு சனத்தொகையைக் (முழுமையாக சிங்களவர்கள்) கொண்டிருப்பதுமான தெஹியத்தைக்கண்டிய பிரதேச செயலக பிரிவு கிழக்கு மாகாணத்தில் உள்வாங்கப்பட்டது தமிழ்பேசும் மக்களது பெரும்பான்மையை கிழக்கு மாகாணத்தில் குறைப்பதற்காகும்.

(“தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும் (தொடர் _ 6)” தொடர்ந்து வாசிக்க…)

ஊடக சந்திப்பு

பெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றியம்
වැවිලි ශ්‍රම යිති මුහය
Plantation Labour Rights Confederation
152 1/3 Hulftsdorp Street, Colombo 12
plantationlabour@gmail.com 071-6275459
10-09-2018

பிரதம ஆசிரியர்
மதிப்புக்குரிய ஐயா/அம்மணி,
ஊடக சந்திப்பு
பெருந்தோட்ட கூட்டு ஒப்பந்தமும் தொழிலாளர்களின் சம்பள உரிமையும்
திகதி: 12-09-2018
நேரம்: பி.ப. 2.00 மணிக்கு
இடம்: பிரைட்டன் ரெஸ்ட் இல. 214ஃ2, மெசஞ்சர் வீதி, கொழும்பு 12.

(“ஊடக சந்திப்பு” தொடர்ந்து வாசிக்க…)

சித்தார்த்தனும் செல்வமும் என்ன செய்யப் போகிறார்கள்?

(புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான உறவு இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. பிரிவுக்குப் பின்னர், எவ்வாறான பாதையைத் தேர்தெடுக்க வேண்டும் என்பது தொடர்பிலும் கூட்டமைப்பினரும் விக்னேஸ்வரனும் ஓரளவுக்குத் தெளிவான நிலைப்பாட்டுக்கு வந்துவிட்டார்கள். உறவை ஒட்டுமொத்தமாக முறித்துக் கொள்வதற்கு முன்னரான, சம்பிரதாயபூர்வ சந்திப்புக்கான காத்திருப்பு மட்டுமே இப்போதுள்ளது. டெல்லிப் பயணத்தை முடித்துக்கொண்டு, இரா.சம்பந்தன் நாடு திரும்பியதும், ‘கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், கூட்டமைப்பின் முதலமைச்சர் விக்னேஸ்வரன்’ என்கிற அடிப்படையிலான இறுதிச் சந்திப்பு நடைபெறும் என்று தெரிகிறது.

(“சித்தார்த்தனும் செல்வமும் என்ன செய்யப் போகிறார்கள்?” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை- வியட்நாம் நேர​டி விமான சேவை

இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கிடையில், நேரடி விமான ​சேவையினை ஆரம்பிக்க இரு நாட்டு பிரதமர்களும் அவதானம் செலுத்தியுள்ளனர். வியட்நாமில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் கலந்துக்கொள்ளச் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வியட்நாம் பிரதமர் கிரையன் சூன் புக் ஆகியோருக்கிடையில் இன்று(11) இடம்பெற்றுள்ள கலந்துரையாடலின் போதே இந்த விமான சேவைக் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

(“இலங்கை- வியட்நாம் நேர​டி விமான சேவை” தொடர்ந்து வாசிக்க…)

நீரை வெறுக்க வைத்த…? மழை வெள்ளம்…..! (பகுதி 4)

(சாகரன்)

100 வருடத்தில் ஒரு தடவை நடைபெற்ற மிகப் பெரிய வெள்ள அனர்த்தம் என்று பலராலும் சொல்லம்படும் கேரளா வெள்ள அனர்த்தம் 1 சத விகித (நூற்றிற்கு ஒன்று) வாய்பை கொண்டிருந்தைமையினால் கேரள அரசோ அல்லது இந்திய மத்திய அரசோ இதற்கான முன் எச்சரிக்கைத் தயாரிப்புகளில் அதிகம் ஈடுபட்டிருக்கவில்லை. ஆகஸ்ட் 2017 அமெரிக்காவின் கியூஸ்ரன் நகரில் இல் நிகழ்ந்த வெள்ள அனர்த்தங்களை ஒத்ததாக இது இருந்தது. வழமையான கேரளா மழைக்கால மழையை விட 47 வீதம் அதிகமாகவே இந்த மழை வெள்ளம் ஏற்பட்டது. பூமியின் வெப்பநிலை 2 பாகை செல்சியஸ்னால் அதிகரிக்கும் போது வெறும் 10 வீத மழை அதிகரிப்பை எதிர்பார்க்கும் சூழலியல் விஞ்ஞானிகள் இந்த 47 வீத அதிகரித்த மழை வீழ்ச்சியும் 100 வருடத்தில் ஒரு முறை நடைபெற்ற மழை வீழ்ச்சியையும் எதிர்பார்க்கவும் இல்லை. சிறப்பாக பொது மக்கள் இந்த மழையால் ஏற்படப் போகும் அனர்த்தங்களை தமது வாழ்வின் 100 வருடங்களில் யாரும் கண்டிருக்மாட்டார்கள் அதாவது தமது ஆயுளில் எந்தக்காலத்திலும் கண்டிருக்க மாட்டார்கள். இதுவே மக்கள் இந்த நீரை வெறுக்கும் மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டதற்கு காரணம்.

(“நீரை வெறுக்க வைத்த…? மழை வெள்ளம்…..! (பகுதி 4)” தொடர்ந்து வாசிக்க…)

எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…….(Part5)

மதங்களில்……. இது சம்மந்தமான சம்பிரதாயங்களில் நம்பிக்கையற்றவனாக நான் இருந்தாலும் வழிபாட்டு இடங்களுக்கு செல்லும் வாய்புக்கள் கிடைக்கும் போது அத் தலங்களுக்குரிய ஒழுக்க நெறிமுறைகளை நான் மிகவும் ‘பவ்வியமாக’ பின்பற்றுபவன். இதற்கு சில காரணங்கள் உண்டு. எமது மக்களின் வாழ்வுடன் இந்த வழிபாட்டுத்தலங்கள் ஒரு கலாச்சார இணைப்பாக இணைந்திருப்பதுவும் பலரின் தூய்மையான நம்பிக்கைகளை மதிப்பவன் என்ற காரணத்திலானாலும் ஆகும். இந்த வகையில் இந்து ஆலயங்களுக்கு செல்லும் போதெல்லாம் மேல் அங்கியை கழட்டி விட்டு நான் ஆலயங்களுக்குள் நுளைவேன். இதனையே நயினாதீவு ஆலயத்தினுள் செல்லும் போது பின்பற்றி ஒரு ஓரமாக பவ்வியமாக நின்றேன்.

(“எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…….(Part5)” தொடர்ந்து வாசிக்க…)

குருந்தூர் மலைக்கு செல்ல தற்காலிக தடை

முல்லைத்தீவு மாவட்டம் குமுழமுனை – தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலைக்கு, பொதுமக்கள், மதம் சார்ந்தவர்கள் எவரும் செல்வதற்கு, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் தற்காலிக தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த 04ஆம் திகதியன்று குருந்தூர் மலைப் பகுதியில் புத்தர் சிலை ஒன்றை அமைக்கும் நோக்குடன் பிக்குமார் உள்ளிட்ட 12 பேர் சென்றுள்ளார்கள். (“குருந்தூர் மலைக்கு செல்ல தற்காலிக தடை” தொடர்ந்து வாசிக்க…)

மக்கள் சேவையில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினர்

நேற்றையதினம் 07/09/2018 வெள்ளிக்கிழமை, ஆத்திமோட்டை தமிழ் வித்தியாலத்தில் பொதுமக்கள், கோட்டக்கல்வி பணிப்பாளர், அதிகாரிகள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பிரதேசசபை ஊழியர்களுடன் இணைந்து சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது. சிரமதானப்பணியின் போது அகற்றப்பட்ட கட்டிட கழிவுகளை மேடு பள்ளமாக காணப்பட்ட ஆத்திமோட்டை 7ம் வீதி குறுக்குஒழுங்கையில் கொட்டப்பட்டு நண்பர்களுடன் இணைந்து நிரவப்பட்டது. இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

போராட்டம் ஒன்றே வாழ்வை நிர்ணயிக்கும்

(ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி)
“நீரின்றி அமையாது உலகு” என்பது முதுமொழி ஆனால் இந்த நவீன உலகில் எமது நிலங்களை நீரற்ற தரிசு நிலங்களாக ஆக்குவதையே நோக்காக கொண்டு மனிதன் செயல்பட்டு வருகின்றான். தற்போது புல்லுமலையில் மினரல் வாட்டர் கம்பெனி ஒன்று உருவாகி வருகின்றது. அதை தடுத்து நிறுத்தவேண்டும் என்கின்ற குரல்கள் வெளிவருகின்றன. எமது நீர்வளத்தை உறிஞ்சி எமக்கே விற்பனை செய்கின்ற இந்த வியாபாரிகளை நிச்சயம் நமது மண்ணிலிருந்து விரட்டியடிக்க வேண்டும். எங்கோ இருந்து வரும் காப்ரேட் முதலாளிகளின் பணப்பையை நிரப்பிக்கொண்டு எமது நிலங்களை வறண்ட பூமியாக்கும் திட்டங்களை நம் ஒரு அனுமதிக்க கூடாது.

(“போராட்டம் ஒன்றே வாழ்வை நிர்ணயிக்கும்” தொடர்ந்து வாசிக்க…)