ராஜிவ் கொலை சதி மிக நீண்டது. அதன் முதல்பாகம் 1991 மே 21ல் நிறைவேற்றப்பட்டது. இறுதிபகுதி 2009 மே19ல் நிறைவேற்றி முடித்து வைக்கப்பட்டது.

(Rajh Selvapathi)
தனது தந்தை சிலரின் தவறான ஆலோசனைகளின்படி நடந்ததால் சிலரை பகைத்துக்கொண்டதாகவும் அதனால் அவருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதை தாங்கள் அறிந்திருந்ததாகவும் ராகுல் குறிப்பிட்டார். தாம் கொல்லப்படலாம் என ராஜிவுக்கே ஒரு வேளை தெரிந்திருக்கலாம்.

(“ராஜிவ் கொலை சதி மிக நீண்டது. அதன் முதல்பாகம் 1991 மே 21ல் நிறைவேற்றப்பட்டது. இறுதிபகுதி 2009 மே19ல் நிறைவேற்றி முடித்து வைக்கப்பட்டது.” தொடர்ந்து வாசிக்க…)

சக மனிதனைப் புரிந்துகொண்டு – அவனை ஏற்கிற சமூகமே முன்னே செல்லும்.

(Rathan Chandrasekar)

என் பெயர் குமாரசாமி எடிட்டிங்கில்
நான் பிசியாக இருந்த நேரத்தில்-
என் பத்திரிகை உலக சிஷ்யன் ஒருவன்
திடீரென்று போன் போட்டு மூச்சிரைத்தான். அவன் மனைவியின் தம்பி வீட்டிலிருக்கும்போது
புடைவை கட்டிக்கொள்கிறானாம்.
லிப்ஸ்டிக் போட்டுக்கொள்கிறானாம்.

(“சக மனிதனைப் புரிந்துகொண்டு – அவனை ஏற்கிற சமூகமே முன்னே செல்லும்.” தொடர்ந்து வாசிக்க…)

குடும்ப வன்முறைக்கு பெண்கள் பாதிக்கப் படுவதை அங்கீகரிக்கும் சமூகம், ஆண்கள் பாதிக்கப் படுவதை புறக்கணிக்கிறது.

ஒரு தடவை, நெதர்லாந்து தொலைக்காட்சி செய்தியில், “குடும்ப வன்முறைக்கு ஆண்களும் பலியாகிறார்கள்” என்று தெரிவித்து இருந்தனர். அதற்குப் பின்னர், சமூக நல தொண்டு நிறுவனங்கள் இந்த விடயத்திலும் கவனமெடுத்து வருகின்றன. பொதுவாக பாதிக்கப் பட்ட ஆண்கள் வெட்கம் காரணமாக வெளியே சொல்வதில்லை.

(“குடும்ப வன்முறைக்கு பெண்கள் பாதிக்கப் படுவதை அங்கீகரிக்கும் சமூகம், ஆண்கள் பாதிக்கப் படுவதை புறக்கணிக்கிறது.” தொடர்ந்து வாசிக்க…)

எங்கள் அப்பா இறந்துவிடுவார் என்பதும் முன்கூட்டியே தெரியும் – ராகுல்காந்தி

நான் அந்தப் பாதுகாவலர்களுடன் பேட்மின்டன்
விளையாடி இருக்கிறேன். அவர்களே என் பாட்டியைக் கொன்றதைப் பார்த்திருக்கிறேன், அவர்கள் இறந்ததையும் ரெண்டு கண்ணால் பார்த்தேன்.

எனக்கு எங்கள் பாட்டி இறந்துவிடுவார் என்றும் –
எங்கள் அப்பா இறந்துவிடுவார் என்பதும்
முன்கூட்டியே தெரியும்.
இந்த அரசியலில் ஒரு கொள்கையுடன்
தீய சக்திகளுக்கு எதிராக நிற்கும்போது
நீங்கள் கொல்லப்படுவது தானாகவே நடந்துவிடுகிறது.

(“எங்கள் அப்பா இறந்துவிடுவார் என்பதும் முன்கூட்டியே தெரியும் – ராகுல்காந்தி” தொடர்ந்து வாசிக்க…)

ஒரு ஐந்து நிமிடங்கள்ஒ துக்கி இதை_படியுங்கள்

படத்தில் இருக்கும் பெரியவரை சென்னை பள்ளிக்கரணை ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் எதிரே புதியதாக திறந்து இருக்கும் ஹோட்டலின் வாசலில் பார்த்தேன்.. தள்ளாடும் வயதில் வரும் வண்டிகளுக்கு பார்க்கிங் பார்த்து கொண்டு இருந்தார்… சாப்பிட உள்ளே நுழைந்த போது இவரிடம் பேசவில்லை.. திரும்பிய போது, இரவு பத்து மணி இருந்ததால், கூட்டம் குறைவாக இருந்தது.. வண்டி எடுக்கும் போது இவரிடம் பேச்சு கொடுத்தேன்.

(“ஒரு ஐந்து நிமிடங்கள்ஒ துக்கி இதை_படியுங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

குழந்தைகளை வைத்துப் புனைந்த கதைகள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
சொல்லப்படுவது உண்மையா, பொய்யா எனப் பிரித்தறிவது எப்படி? உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான பிரிகோடு எது? சில விடயங்கள் கவனம் பெறும் வேளை, ஏன் பிற விடயங்கள் கவனம் பெறுவதில்லை? குறித்தவொரு விடயம் நீண்டகாலமாக இருந்தபோதும் அது திடீரென்று கவனம் பெறுவது ஏன்? இவை இன்றைய சூழலில் பதிலை வேண்டும் கேள்விகள்.

(“குழந்தைகளை வைத்துப் புனைந்த கதைகள்” தொடர்ந்து வாசிக்க…)

வன்முறைக்குப் பின்னால் உள்ள அரசியல்

(கே. சஞ்சயன்)
அம்பாறையில் வேண்டுமேன்றே சீண்டிவிடப்பட்ட இனவாதம், கண்டியில் ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறது. உயிர்ப்பலியுடன் பெருமளவில் பொருளாதார அழிவுகள் மாத்திரமன்றி, இனங்களுக்கிடையில் பதற்றம், உறுதியற்ற நிலை என்று பல விளைவுகளுக்கு, இந்தச் சம்பவங்கள் காரணமாகி இருக்கின்றன.

(“வன்முறைக்குப் பின்னால் உள்ள அரசியல்” தொடர்ந்து வாசிக்க…)

வன்முறைகளும் இந்தியாவும்

இந்தியாவில் பல மதங்கள் இருந்தபோதும் கடவுளும் வழிபாட்டு முறைகளும் வேறாக இருந்தாலும் கலாச்சாரம் பழக்க வழக்கங்கள் ஏறக்குறைய சகல மதங்களுடையேயும் ஒன்றாகவே உள்ளது.அங்க மதம் வேறு என்றாலும் இந்து மதத்தின் தாக்கம் சகல மக்களிடையேயும் உண்டு. பொதுவாக இந்துக்களுடையே்களிடையே உள்ள சாதி பாகுபாடு சீக்கியர், பௌத்தர், கிறிஸ்தவ மக்களிடையேயும் உண்டு. பிற்காலங்களில் மதம் மாறிய குஜராத் இஸ்லாமியர்களும் சாதி அடையாளங்களுடன் முரண்பாடுகளுடன் வாழ்கின்றனர்.

(“வன்முறைகளும் இந்தியாவும்” தொடர்ந்து வாசிக்க…)

மும்பை என்ன ஆகப் போகிறதோ என்ற உறைபனியில்

வட மாநில ஊடகங்களின் மறைக்க முடியாத செய்தியாகி விட்டது, கம்யூனிஸ்டுகள் வீழ்ந்து விட்டதாக கொக்கரித்தவர்கள்,
ஞாயிறு மும்பை என்ன ஆகப் போகிறதோ என்ற உறைபனியில்,
நாசிக்கில் 25 ஆயிரத்தில் துவங்கிய விவசாயிகள் பேரணி தினம் 30 கி.மீ தனது நடை பயணத்தில் வழி நெடுகிலும் ஆதிவாசி மக்களும் இணைகிறார்கள், இப்போது 35 ஆயிரத்தை கடந்து விட்டதாக செய்திகள்,இரவு தேசிய நெடுஞ்சாலைகளில், கலை நிகழ்ச்சிகள், உறக்கம் என பல்லா யிரக்கணக்கான பெண்களும் செங்கொடியை கையிலேந்தி,ஊர்வலகாட்சிகள் வைரலாக எனும் ஊடக செய்தியுடன்,,,
அவர்கள் கலைந்து செல்லும் நோக்கத்தில் மும்பை செல்லவில்லை,
திங்கள் மகாராஷ்ட்ரா பட்ஜெட் கூட்டத்தொடர், பிரச்சனை தீரும் வரை சட்ட மன்ற வளாகம் முழுவதும் செங்கொடி ஆக்கிரமிக்கும்,
வெல்லட்டும் விவசாய ஆதிவாசிகள்

மகளிர் நாளில் – படித்த – பிடித்த – ஆண்கவிதை.

உருக்கொண்ட இவ்வுடலம் பெண் தந்தது.

ஊட்டியுண்ட முதலமுதம் பெண் தந்தது.

உணர்வுற்ற முதற்சூடு பெண் தந்தது.

உறங்கீஇய மடிதோளும் பெண் தந்தது.

(“மகளிர் நாளில் – படித்த – பிடித்த – ஆண்கவிதை.” தொடர்ந்து வாசிக்க…)