திலிபன் பற்றி தமிழ்க்கவி அம்மாவே முகநுல் பின்னூட்டத்தில் உண்மை பேசியுள்ளார்.

“உண்ணாவிரத மேடைக்குப் போகும் போதே திலீபன் இறப்பது நிச்சயம் என்பது உறுதியாகவே இருந்தது. இடையில் நடந்ததெல்லாம் நாடகத்தின் காட்சிகளே.மக்களை புலிகளின்பால் மீட்டெடுக்க இந்த நாடகம் தேவையாக இருந்தது. இந்திய அமைதிப்படையின் வருகை புலிகள் விரும்பாத விடயம். வீணாக கொடுத்த விலை திலீபன்.அவ்வளவுதான்.”
– தமிழ்கவி (Thamayanthy Ks)

5 பில்லியன் டொலர் செலவில், தலைமன்னாரையும் – இராமேஸ்வரத்தையும் இணைக்கும் பாலம்!!

5 பில்லியன் டொலர் செலவில், தலைமன்னாரையும் – இராமேஸ்வரத்தையும் இணைக்கும் பாலத்தை அமைப்பது தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இந்தியாவின் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி நேற்று முன்தினம் பேச்சு நடத்தியுள்ளார்.india இந்தியாவுக்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர்ரணில் விக்கிரமசிங்கவுடன், நேற்று முன்தினம் செவ்வாய்க் கிழமைமாலை சந்தித்துப் பேச்சு நடத்தினார். 5.19 பில்லியன் டொலர் செலவில், தலை மன்னாரையும் இராமேஸ்வரத்தையும் இணைக்கும் தரைவழிப் பாலத்தை அமைக்கும் திட்டத்தை இந்திய மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. 22 கிலோ மீற்றர் நீளமுடையதாக இந்த இணைப்புப் பாலத்தை கடலுக்கு மேலாகவும், கடலடி சுரங்கமாகவும் அமைப்பது தொடர்பாக இந்திய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துரையாடியுள்ளார். ஏற்கனவே, பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளைத் தரைவழிப் பாதைகளால் இணைக்கும் 8 பில்லியன் டொலர் திட்டத்துக்கு உதவ முன்வந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி, 5.19 பில்லியன் டொலர் செலவிலான இந்திய – இலங்கை தரைவழிப்பாதை இணைப்புத் திட்டத்துக்கு உதவ ஆர்வம் காட்டுவது குறிப்பிடத்தக்கது.

இலங்கை இறையாண்மை முற்றுகைக்குள் !

இம்மாதம் 16ந் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கை தொடர்பாக மீண்டும் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. ஐ.நா.மனித உரிமை பேரவையின் இவ்வாறான அறிக்கைகள் மற்றும் தீர்மானங்கள் 2009 இல் ஒரு தடவையும், பின்னர் தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளாகவும் (2012-2015) வெளிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் கால் நூற்றாண்டுக்கு மேலாக நீடித்த உள்நாட்டு யுத்தம் 2009 இல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும், 2011 இற்கு பின்னரே திடீரென்று ஐ.நா.ம.உ. பேரவை விழித்துக் கொண்டு, இலங்கையின் மனித உரிமைகள் பற்றி கறாராகப் பேசத் தொடங்கியுள்ளார்கள். அத்துடன் 9 ஆண்டு (2002-2011) காலப்பகுதியை மாத்திரமே தெரிந்து எடுத்து வைத்துக்கொண்டு, இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். குறிப்பாக இந்தக் காலப்பகுதியை தெரிந்தெடுத்ததின் பின்னணி என்னவாக இருக்கலாம் என்பதை உணரக்கூடியவர்களால்தான், இலங்கை தொடர்பான இவர்களது (அரசியல்) நிகழ்ச்சி நிரலையும் புரிந்து கொள்ள முடியும்.

(“இலங்கை இறையாண்மை முற்றுகைக்குள் !” தொடர்ந்து வாசிக்க…)

மறக்கடிக்கப்பட்ட முஸ்லிகளின் மனித உரிமைகள்

சுவிசர்லாந்து நாட்டின் ஜெனீவாவில், ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடர் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இது பற்றிய செய்திகள்தான் அண்மைய நாட்களில் பத்திரிகைகளையும் இணையத்தளங்களையும் நிரப்பிக் கொண்டிருக்கின்றன. புதிய ஜனாதிபதியும் புதிய அரசாங்கமும் நாட்டின் ஆட்சியைப் பாரமெடுத்த பிற்பாடு, கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இப்பின்னணியில் ஜெனீவா அமர்வு இடம்பெறுகின்றமையால் பாரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

(“மறக்கடிக்கப்பட்ட முஸ்லிகளின் மனித உரிமைகள்” தொடர்ந்து வாசிக்க…)

ஹஜ் மரணம்: சவூதி மீது கண்டம் வலுக்கிறது:

ஹஜ் யாத்திரையின் போது மேற்கொள் ளப்படும் பாதுகாப்பு செயற்பாடுகள் குறித்து மறு ஆய்வு செய்யும்படி சவூதி அரேபிய மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார். புனித மக்கா நகருக்கு அருகில் வியாழனன்று ஏற் பட்ட நெரிசலில் சிக்கி 717 யாத்திரிகர்கள் கொல்லப்பட்ட மோசமான அனர்த்தத்தை அடுத்தே மன்னர் இந்த உத்தரவை பிறப்பித் துள்ளார். மினாவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மேலும் 863 பேர் காயமடைந்தனர். இஸ்லாத்தில் ஐந்தாவது கடமையான ஹஜ் ஜpல் இம்முறை இரண்டு மில்லியன் யாத்திரிகர் கள் பங்கேற்றுள்ளனர்.ஹஜ் யாத்திரையில் கடந்த 25 ஆண்டுக ளில் இடம்பெற்ற அதிக உயிர்ப்பலி கொண்ட அனர்த்தமாக இது பதிவானது.

(“ஹஜ் மரணம்: சவூதி மீது கண்டம் வலுக்கிறது:” தொடர்ந்து வாசிக்க…)

எம்மவர் பயணம் எவடம் எவடம் ? பு(லி)ளியடி பு(லி)ளியடி தானா ? (2)

(மாதவன் சஞ்சயன்)

ஒன்றுபட்ட நாட்டுக்குள் நியாயமான தீர்வு எட்டப்பட வேண்டும் என சம்மந்தர் கூறினாலும், கொண்டைச் சேவல் போல் கொக்கரிக்கும் சிவாஜிலிங்கம் சிங்களத்துடன் சண்டித்தனம் பண்ணுவதே, கதிரமலை சிங்களவரின் மனதில் சந்தேகத்தை விதைத்துள்ளது. சம்மந்தரின் பொறுப்பான பேச்சை அவர் வரவேற்றாலும் மற்றவர்களின் பொங்கி எழச்செய்யும் பேச்சுக்கள் அவர்களை சந்தேகிக்க வைக்கிறது. பிரபாகரனும் சிவாஜிலிங்கமும் ஒரே ஊரவர் என்பதால் உறவினர் என நினைக்கும் அவர்கள், வாலை தலை என தப்பபிப்பிராயம் கொண்டுள்ளானர்.

(“எம்மவர் பயணம் எவடம் எவடம் ? பு(லி)ளியடி பு(லி)ளியடி தானா ? (2)” தொடர்ந்து வாசிக்க…)

இணை அனுசரணை வழங்க இலங்கை எடுத்த முடிவுக்கு த.தே.கூட்டமைப்பு பாராட்டு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டிருக்கும் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்க இலங்கை அரசாங்கம் விருப்பம் தெரிவித்திருப்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராட்டியுள்ளது. பொதுநலவாய நீதிபதிகள், சட்டத்தரணிகள், விசாரணை யாளர்கள் மற்றும் எதிர்த்தரப்பு விசாரணையாளர்களை உள்ளடக்கிய நீதிப் பொறி முறையொன்றை இலங் கையில் உருவாக்கி சர்வதேச குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரிக்க வேண்டும் என பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இலங்கையின் நீதிக்கு கிடைத்த வெற்றியென்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. நல்லிணக்கம் என்ற நீண்டபயணத்தை ஆரம்பிப்பதற்கான பலமான சூழலை ஏற்படுத்தும் தொடக்கப் புள்ளியாக அமையும் என்ற நிலைப்பாட்டில் கூட்டமைப்பு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாரம் ஒரு ஆய்வாளர் பகுப்பாய்வு 4: தகைமிகு பேராசிரியர் கா. சிவத்தம்பி.

சிவத்தம்பி ஐயா என் அயலவர். என் முதற்கவிதை தொகுதி வெளியீட்டு விழாவில் பிரதம விருந்தினர். கொழும்பில் பல தடவைகள்
அவர் வீடுபோய் பேசியிருக்கிறேன்.  ஒரு நடிகனுக்குரிய Resonant குரல் அவருடையது. அவர் ஒரு நல்ல நாடக நடிகனும். அவரது மிகப்பெரும் பலமாக நான் கருதுவது அவரின் Resonant voice தான். ( U tube ல் அவரின் குரலை கேட்டு பாருங்கள் சொக்கிப்போய்விடுவீர்கள்.) ஐயா பாதி அப்பாவி, மீதி ராஜ தந்திரி. கைலாசபதி போல ஐயாவிடம் பொம்புளைக் களவுபோன்றவை இல்லை. ஐயாவுக்கு தனது பணக்கார மனைவி ருபா அம்மாவில் பயம்.

(“வாரம் ஒரு ஆய்வாளர் பகுப்பாய்வு 4: தகைமிகு பேராசிரியர் கா. சிவத்தம்பி.” தொடர்ந்து வாசிக்க…)

“நான் இடதுசாரி என்றால், ஏசு கிறிஸ்துவும் இடதுசாரி தான்!” – போப்பாண்டவர் பிரான்சிஸ்

“நான் இடதுசாரி என்றால், ஏசு கிறிஸ்துவும் இடதுசாரி தான்!”- அமெரிக்க வலதுசாரிகளுக்கு போப்பாண்டவர் பிரான்சிஸ் பதிலடி.
அமெரிக்காவுக்கு சென்றுள்ள போப்பாண்டவர் பிரான்சிஸ், பிரபல வலதுசாரி வார இதழான டைம்ஸ் நிருபரால் பேட்டி காணப்பட்டார். அப்போது, போப்பாண்டவரின் இடதுசாரி, மார்க்சியக் கருத்துக்கள் குறித்து, அமெரிக்க வலதுசாரிகளின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்கப் பட்டது. அமெரிக்காவில் உண்மையான இடதுசாரிக் கட்சி எதுவும் வெகுஜன அரசியலில் இல்லாத படியால், லிபரல்கள் இடதுசாரிகள் போன்று கருதப் படுகின்றனர். பிற உலக நாடுகளில் எல்லாம் “இடதுசாரி” என்ற சொற்பதம் பாவனையில் இருந்தாலும், அமெரிக்காவில் பொதுவாக “லிபரல்” என்று தான் அழைப்பார்கள்.

புலிகளே வன்முறைகளை ஆரம்பித்தனர் என்ற அடிப்படையிலேயே யுத்த குற்ற விசாரணைகள் !

விடுதலைப் புலிகளே வன்முறைகளை ஆரம்பித்தனர் என்ற அடிப்படையிலேயே யுத்த குற்ற விசாரணைகள் ஆரம்பமாகவேண்டும் என மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
யுத்த குற்றங்கள் குறித்து ஏற்கனவே நடைமுறையில் உள்ள நீதி முறைமையின் கீழ் விசாரணைகள் இடம்பெற வேண்டும் உள்நாட்டு நிபுணர்களாலேயே இந்த விசாரணைகள் இடம்பெற வேண்டும், படையினரின் கௌரவம் பாதுகாக்கப்படுகின்ற வகையிலும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்ற வகையிலும் இந்த விசாரணைகள் அமையவேண்டும், இந்த விடயம் குறித்து தேசிய கருத்தொற்றுமை ஏற்படுத்தப்பட வேண்டும், இறுதிமுடிவை பாராளுமன்றே எடுக்கவேண்டும், விடுதலைப் புலிகளே வன்முறைகளை ஆரம்பித்தனர் என்ற அடிப்படையிலேயே விசாரணைகள் இடம்பெற வேண்டும்,
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் முன்வைத்து கலப்புநீதிமன்றத்தை நாங்கள் முற்றாக எதிர்க்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.