தமிழ் தலைவர்கள் முன்னிலையில் வெளிநாட்டு தூதரகத்தால் ஹக்கீமுக்கு ரொக்க பணம் வழங்கப்பட்டதாக பரபரப்பு தகவல்!

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகம் ஒன்றால் முக்கியமான தமிழ் தலைவர்கள் இருவர் முன்னிலையில் வைத்து கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது பல கோடி ரூபாய் ரொக்க பணம் வழங்கப்பட்டு உள்ளதாக அறிந்து உள்ளார் என்று கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜவாத் தெரிவித்து உள்ளார்.

(“தமிழ் தலைவர்கள் முன்னிலையில் வெளிநாட்டு தூதரகத்தால் ஹக்கீமுக்கு ரொக்க பணம் வழங்கப்பட்டதாக பரபரப்பு தகவல்!” தொடர்ந்து வாசிக்க…)

உடைகிறதா உதயசூரியன்?

உடைகிறது உதயசூரியன், தமிழ் தேசிய விடுதலை கூட்டணிக்குள்ளும் லடாய்’ என்று Tamil Page உள்ளிட்ட சில ஊடகங்களால் பரப்பப்படும் செய்தி இட்டுக் கட்டிய பொய் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி ஐயா தெரிவித்துள்ளார்.

(“உடைகிறதா உதயசூரியன்?” தொடர்ந்து வாசிக்க…)

அம்மாச்சி உணவகத்தை வைத்து நடக்கும் அரசியல்- துமிந்த கேட்பது ஹெல… விக்கி கேட்பது ஈழம்!

சாப்பாட்டுக்கு இத்தனை அக்கப்போரா என கேட்காதீர்கள்!


யாழ்ப்பாணத்தில் வடமாகாணசபை நிர்வாகத்தால் பெயரில்லாத- அனாமதேய உணவகமொன்று நடத்தப்படுகிறது. நிர்வாக பதிவேடுகளில் பெயரில்லாத உணவகமாக அது இருந்தாலும், பொதுமக்களால் அம்மாச்சி உணவகம் என்றுதான் அது அழைக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் அது அம்மாச்சி உணவகமல்ல. இன்னும் பெயரிடப்படாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. வடமாகாண நிர்வாகத்தால் அதற்கு பெயரிட முடியவில்லையென்பதே இன்றைய யதார்த்தம்.
ஏன் மாகாண நிர்வாகத்தால் அதற்கு பெயரிட முடியவில்லை?

(“அம்மாச்சி உணவகத்தை வைத்து நடக்கும் அரசியல்- துமிந்த கேட்பது ஹெல… விக்கி கேட்பது ஈழம்!” தொடர்ந்து வாசிக்க…)

ஒரு பொதுவுடைமையாளரின் சுயவிமர்சனம்

நாங்கள் எல்லாம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள்’ என்ற எண்ணம் கொண்டவர்கள் மத்தியில், சுயவிமர்சனம் செய்துகொள்ளும் கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவர் தா.பாண்டியன். அவரது சமீபத்திய நூல்களில், அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த அந்த விமர்சனம், இப்போது தனிநூலாகவே விரிந்திருக்கிறது. ‘பொதுவுடைமையரின் வருங்காலம்’ புத்தகத்தை இந்திய கம்யூனிஸ இயக்கம் பற்றிய, அதன் தவறுகளிலிருந்து கிடைத்த பாடங்கள் பற்றிய ஓர் ஆய்வு நூலாகவே கருதலாம். கம்யூனிஸ்ட் இயக்கம் ஒரு மிகப் பெரிய விவாதத்தை முன்னெடுத்து, தவறுகளைச் சரிசெய்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்ட நூல் இது.

(“ஒரு பொதுவுடைமையாளரின் சுயவிமர்சனம்” தொடர்ந்து வாசிக்க…)

ஜனாதிபதியின் நல்லெண்ண சமிக்ஞையும் மக்கள் எமக்கு வழங்கப்போகும் ஆணையும் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சியை உறுதி செய்வோம்

(டக்ளஸ் தேவானந்தா)

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன அவர்கள் எமக்கு அழைப்பு விடுத்தமை ஓர் நல்லெண்ண சமிக்ஞையாகும். அத்தோடு மக்கள் எமக்கு வழங்கப்போகும் ஆணையும் சேர்ந்து ‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி’ என்ற எமது அரசியல் இலக்கை வெற்றிபெறவைக்கும்.

(“ஜனாதிபதியின் நல்லெண்ண சமிக்ஞையும் மக்கள் எமக்கு வழங்கப்போகும் ஆணையும் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சியை உறுதி செய்வோம்” தொடர்ந்து வாசிக்க…)

காவிரிக் கரை ஓரத்தில் ஒரு பயணம்…..!

காவிரிக்கரை நெடுக சோழர்கள் எழுப்பிய அற்புதமான கோயில்களைத் தேடி பயணிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை, எல்லோரும் அடிக்கடி சென்று பார்க்கும் கோயில்களாக அவை இருக்கக்கூடாது, ஆனால் அற்புதம் நிறைந்ததவையாக இருக்க வேண்டும், இந்த திட்டத்தில் பயணிக்கத் துவங்கினோம், தெரியாத கோயில்கள் என்றால் அவை நிச்சயம் கிராமங்களுக்குள் தான் இருக்கும், அவற்றை தேட கார் சரிபடாது என்பதால் திருச்சியில் ரமேஷின் நண்பர் ஒருவருக்கு தொலை பேசி செய்து இருசக்கர வாகனம் வேண்டும் என்று கேட்டதும், திருச்சி பேருந்து நிலையத்திற்கு வந்து கொடுத்துவிட்டுச் சென்றார். (“காவிரிக் கரை ஓரத்தில் ஒரு பயணம்…..!” தொடர்ந்து வாசிக்க…)

இயற்கை விவசாய பயிற்சி பட்டறை

தமிழ்நாட்டிலிருந்தும் , கனடா , லண்டனிலிருந்தும் விவசாயிகள் மற்றும் சிறப்பு ஆய்வாளர்கள் பங்குபெற்று சிறப்பிக்கும் இயற்கை விவசாய பயிற்சி பட்டறை

யாழ்ப்பாணம். 04-01-2018

நேரம் :
காலை 9 மணி முதல் மாலை 4.30

இடங்கள் :
பண்பாட்டு மறுமலர்ச்சிக் கூடம், பழம் வீதி,
கந்தர்மடம்,

மானிடம் இயற்கை வேளாண் பண்ணை,
தெல்லிப்பளை வையித்தியசாலை அருகில்,

1. பாமயன் – – Soil and Water
தகுதி: 20 ஆண்டுகால அனுபவம், 25 நூல்கள், பயிற்றுநர் 5 ஏக்கர் பண்ணை
2. சுந்தரராமன் – – Crop Management
தகுதி: 25 ஆண்டுகால அனுபவம், பயிற்றுநர் 11 ஏக்கர் பண்ணை பிற
3. ராமகிருஷ்ணன்
தகுதி: 18 ஆண்டுகால அனுபவம், பயிற்றுநர், 30 ஏக்கர் பண்ணை, பிற
4.ரவி (vermicompost)
தகுதி: 25 ஆண்டுகால அனுபவம், பயிற்றுநர், 5 ஏக்கர் பண்ணை, பிற
5. சதுரகிரி (Integrated farming)
தகுதி: 10 ஆண்டுகால அனுபவம், பயிற்றுநர், 9 ஏக்கர் பண்ணை, பிற
6 கஜேந்தரமூர்த்தி ( Seeds)
தகுதி: 25 ஆண்டுகால அனுபவம்,11 ஏக்கர் பண்ணை பிற
7) ஹம்ஸா பத்மநாதன் – Master of Agriculture University Waterloo

வசீகரன் – 0773788795 ரஜிதன் – 0777906383.

1985 திம்புகோட்பாடு 2017 இல் இன்றைய தமிழ்த் தலைமைியனால் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. – சந்திரகுமார்

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக போராடிய இயக்கங்கள் 1985 ஆம் ஆண்டு திம்புவில் தமிழர் தேசியம், தமிழர் தாயகம், தன்னாட்சி உரிமை அடிப்படையிலான கோட்பாடுகளை கொண்ட திம்பு கோட்டுபாடு 2017 இல் தமிழ் மக்களின் இன்றையத் தலைமையினால் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார். (“1985 திம்புகோட்பாடு 2017 இல் இன்றைய தமிழ்த் தலைமைியனால் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. – சந்திரகுமார்” தொடர்ந்து வாசிக்க…)

நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!

தமிழரின் தொன்மையை அறிந்து கொள்ளும் ஆர்வம், நம்மில் பலருக்கு எழுவது இயல்பு. தமிழரின் பாரம்பரியம், கலைகள், மொழி போன்றவற்றை வளர்ப்பதுடன், தொன்மை பற்றிய அறிவும் தமிழர் என்ற தேசியத்தை கட்டமைப்பதற்கு பயன்படுத்தப் பட்டு வந்துள்ளது. இன்றைக்கு பலர், தேசியம் என்பதை, சமூக-பொருளாதார அடித்தளத்தைக் கொண்ட நாகரீகமாக புரிந்து கொள்வதில்லை. மாறாக, உலகின் பிற இனங்களில் இருந்து தனித்துவமான கூறுகளைக் கொண்ட, உன்னத இனமாக வரையறுப்பதற்கு தவறாக பயன்படுத்தப் படுகின்றது. (“நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!” தொடர்ந்து வாசிக்க…)

நனவிடை தோய்தல்: அழிக்கப்பட்ட யாழ். பல்லினப் பல்கலாச்சாரக் கட்டமைப்பு!

(ஜானகி கார்த்திகேசன் பாலக்கிருஷ்ணன்)

ஜானகி பாலகிருஷ்ணன்- – ஜானகி கார்த்திகேசன் பாலகிருஷ்ணன் – அவர்கள் கனடியத்தமிழர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர்களிலொருவர். மின்பொறியியலாளராகப் பல வருடங்கள் பணியாற்றிய இவர் தற்போது கனடாவின் மாநிலங்களிலொன்றான ‘நோர்த்வெஸ்ட் டெரிடொரி’ஸிலுள்ள ‘யெல்லோ நைஃப்’ என்னுமிடத்தில் சமூக அபிவிருத்தி மற்றும் அதற்கான நிபுணத்துவ சேவையினை வழங்கும் நிறுவனமொன்றின் முதல்வராகப் பணிபுரிந்து வருகின்றார். இவர் புதிய ஜனநாயகக் கட்சி சார்பில் டொராண்டோவின் ‘டொன்வலிப்பகுதியில் ஒண்டாரியோ மாநிலச் சட்டசபைக்கான தேர்தலிலும் நின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கையில் மார்க்சிய அறிஞர்கள், எழுத்தாளர்கள் அனைவரினதும் பெருமதிப்புக்குரியவராக விளங்கியவரும், யாழ் இந்துக்கல்லூரியின் அதிபர்களிலொருவராக விளங்கியவருமான அமரர் கார்த்திகேசு ‘மாஸ்ட்’டர் அவர்களின் புதல்விகளிலொருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(“நனவிடை தோய்தல்: அழிக்கப்பட்ட யாழ். பல்லினப் பல்கலாச்சாரக் கட்டமைப்பு!” தொடர்ந்து வாசிக்க…)