இலங்கையின் பொருளாதரத்தை கிராமிய அடிப்படையில் எவ்வாறு முன்னேற்றலாம்.

கடந்த சில மாதங்களாக முகப்புத்தகத்தில் நீங்கள் கிராமிய பொருளாதாரம் பற்றியும், அதை கிராமிய மட்டத்தில் எவ்வாறு கொண்டு செல்லலாம் என்பது பற்றியும் எழுதி வருகின்றீர்கள். நீங்கள் யார், இது சம்பந்தமான உங்கள் அனுபவங்கள் என்ன ?

நான் அலியார் மவ்சூக் ( ரியால் ), எனது சொந்த ஊர் அக்கரைப்பற்று, கடந்த பதினைந்து வருடத்துக்கு மேலாக இங்கிலாந்தில் வசிக்கின்றேன்.
1979 முதல் 2001 வரை அடிக்கடி எனது சொந்த வியாபாரம் சம்பந்தமாக இந்தியா, பிலிப்பைன், பேங்காக், நைஜீரியா போன்ற நாடுகளுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் பிரயாணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. (“இலங்கையின் பொருளாதரத்தை கிராமிய அடிப்படையில் எவ்வாறு முன்னேற்றலாம்.” தொடர்ந்து வாசிக்க…)

2017: இதுவும் கடந்து போகும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

காலம், கடந்த காலத்தின் தொகுப்பல்ல; நிகழ்காலம் என்றென்றைக்குமானதல்ல; எதிர்காலம் எதிர்பாராத புதிர்களைத் தன்னுள் ஒளித்து வைத்துள்ளது. கடந்தகாலம் பற்றிய தெளிவு நிகழ்காலத்தை வடிவமைக்கப் பயனுள்ளது. அது எதிர்காலத்தைத் திட்டமிட உதவும். இதனாலேயே கடந்தகாலம் எப்போதும் முக்கியமான திசைவழிகளைக் காட்டுகிறது. கடந்து போகும் காலத்தைக் கணிப்பில் எடுப்பது எதிர்காலத்தைக் கணிக்க உதவும்.

(“2017: இதுவும் கடந்து போகும்” தொடர்ந்து வாசிக்க…)

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2018: தேவை ஒரு பூக்களம்

(முகம்மது தம்பி மரைக்கார்)

ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்தமைக்காக, 1994ஆம் ஆண்டு, அம்பாறை மாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் வியாபார நிலையம் அடித்து உடைத்து, தீ வைக்கப்பட்டது. தேர்தல் முடிவொன்றை அடுத்து கிளர்ந்தெழுந்த கட்சித் தொண்டர்கள், அந்த வன்செயலில் ஈடுபட்டார்கள். தனக்கு விருப்பமான அரசியல் கட்சியை அந்த வியாபார நிலையத்தின் உரிமையாளர் ஆதரித்தமைதான், தாக்கியவர்களின் கணக்கில் குற்றமாக இருந்தது.

(“உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2018: தேவை ஒரு பூக்களம்” தொடர்ந்து வாசிக்க…)

ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள்: எங்கு சறுக்கியது பலமான எதிர்க்கட்சி…?

(நீரை.மகேந்திரன்)

ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷ் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டதும், டெபாசிட் போகும் அளவுக்கு வாக்குகள் குறைந்ததும் பல அரசியல் தலைவர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தேர்தல் ஆணையத்தின் படுதோல்வி என்கிறார். விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனோ பணநாயகத்தின் பின்னால் செல்லாமல் ஜனநாயகத்தை மதித்ததால் இது திமுகவுக்கு கிடைத்த வெற்றி என்கிறார்.

(“ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள்: எங்கு சறுக்கியது பலமான எதிர்க்கட்சி…?” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை தேயிலை மீதான ரஷ்யாவின் தடை நீக்கம்

இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை உள்ளிட்ட விவசாய உற்பத்தி பொருட்கள் மீது ரஷ்ய அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்படவுள்ளதாக, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தர். அண்மையில் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலை பொதிகள் அடங்கிய கொள்கலனில் வண்டு ஒன்று காணப்பட்டதாக தெரிவித்து, இலங்கையின் தேயிலை உள்ளிட்ட விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு, ரஷ்யா தடை விதிப்பதாக அறிவித்திருந்தது.

(“இலங்கை தேயிலை மீதான ரஷ்யாவின் தடை நீக்கம்” தொடர்ந்து வாசிக்க…)

ஐ.நா வாக்கெடுப்பு: மாறுபட்டுப்போகும் வெளிவிவகாரக் கொள்கைகள்

(ஜனகன் முத்துக்குமார்)

கடந்த வியாழக்கிழமை அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அங்கத்துவ நாடுகள், ஐக்கிய அமெரிக்காவின் நேரடியான அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இஸ்‌ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அங்கிகரிப்பதற்கான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முடிவை எதிர்ப்பதாக, மிகப்பெருமளவில் வாக்களித்திருந்தனர்.

(“ஐ.நா வாக்கெடுப்பு: மாறுபட்டுப்போகும் வெளிவிவகாரக் கொள்கைகள்” தொடர்ந்து வாசிக்க…)

கல்முனை மாநகரம் இம்முறை மக்கள் காங்கிரஸ் வசம்,

(ரி. தர்மேந்திரன்

பல்லாண்டு காலமாக வினை திறன் அற்றவர்களிடம் சிக்கி சீரழிந்து வீழ்ச்சி அடைந்திருக்கும் கல்முனை மாநகரத்தை வினை திறன் உள்ளவர்களின் கைகளில் கொடுத்து அழகுற பார்க்க வேண்டும் என்று ஆதங்கப்பட்டு கொண்டிருக்கும் மக்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களித்து கல்முனை மாநகரத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸிடம் மனம் உவந்து தருவார்கள் என்று கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஜவாத் தெரிவித்தார்.

(“கல்முனை மாநகரம் இம்முறை மக்கள் காங்கிரஸ் வசம்,” தொடர்ந்து வாசிக்க…)

ஆர்.கே.நகரில் தினகரன் சாதித்தது எப்படி?

(நீரை.மகேந்திரன்)

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின் முடிவுகள் டிடிவி தினகரனுக்கு சாதகமாக வீசத் தொடங்கியதும் அரசியலில் கணிக்க முடியா குழப்பம் உருவாகிவிட்டது. எம்ஜிஆர் நினைவு நாளை அனுசரிக்க வெற்றிமாலையோடு யார் செல்வார்கள் என்று இன்று காலை வரை நிலவிய குழப்பத்துக்கு முடிவு கிடைத்துவிட்டது. ஆனால் அதிமுகவில் அடுத்த கட்ட போக்குகள் எப்படி இருக்கும், அதிமுக ஆட்சியில் நிலைத்தன்மை இருக்குமா என்பதற்கான கேள்விகளுக்கு இப்போது முடிவு கிடைக்கப் போவதில்லை. டிடிவி தினகரனின் இந்த வெற்றிக்கு காரணம் இதுதான் என்று அரசியல் நோக்கர்களாலும் அறுதியிட்டுச் சொல்லமுடியவில்லை. வெற்றி வெற்றிதான் வேறொன்றும் சொல்வதிற்கில்லை.

(“ஆர்.கே.நகரில் தினகரன் சாதித்தது எப்படி?” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் கவிஞர் சுபத்திரன்

(தோழர் ஜேம்ஸ்)
 
(சம உரிமை இயக்கம் நடாத்தும் வருடாந்த ஒன்று கூடல் வழமை போல் இவ்வருடமும் கனடாவில் டிசம்பர் 22 மாலை 6 மணிக்கு ரொரன்ரோவில் நடைபெறுகின்றது. இந் நிகழ்வின் ஒரு அங்கமாக கவிஞர் சுபத்திரனின் கவிதைகளில் சிலவற்றை தேர்தெடுத்து அவற்றின் சில பகுதிகளை இணைத்து இசையமைத்து பாடலாக பாடுகின்றனர். இந்த நிகழ்விற்கு கவிஞர் சுபத்திரன் பற்றிய என் முகவுரை. இதனைத் தயாரிப்பதற்கு எனக்கு தகவல்கள் தந்துதவிய தோழர் மணியம் அவர்களுக்கு எனது நன்றிகள்)

(“தோழர் கவிஞர் சுபத்திரன்” தொடர்ந்து வாசிக்க…)