மலையகம் 200 நிகழ்வு நுவரெலியாவில் ஆரம்பம்.

மலையகம் 200 வரலாற்றை சிறப்பிக்கும் வகையில் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகம்,மலையக தமிழர் மரபு ஆகியவை நுவரெலியாவில் ஒழுங்கு செய்திருந்த மூன்று நாள் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு  இன்று (19) ஆரம்பமானது.

சிலி கம்யூனிஸ்ட் கட்சி

படத்திலிருப்பவர்: சிலி கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரும் தற்போது சிலி அரசாங்கத்தில் அமைச்சராக (Minister General Secretariat of Government) இருப்பவருமான, முப்பத்தைந்து வயதான தோழர் Camila Vallejo. சிலி கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களான இவரது பெற்றோர்கள் (Reinaldo Vallejo and Mariela) சர்வாதிகாரி பினோச்சே (Pinochet) இற்கு எதிராக தீவிரமாக போராடியவர்கள்.

(Thank you: Balasingam Balasooriyan)

ரூபாயின் பெறுமதி மேலும் வலுவடைந்தது

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (18) மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 299.21 ரூபாய் ஆகவும், விற்பனை விலை 312.37 ரூபாய் ஆகவும் பதிவாகி உள்ளது.

கடவுச்சீட்டு வழங்குவது குறித்த முக்கிய அறிவிப்பு

இன்று (18) முதல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு வரும் அனைவரும் உடனடியாக வளாகத்துக்குள் அழைக்கப்படுவார்கள்  என குடிவரவு – குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; கொழும்பில் பதற்றம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுக்கு இடையூறு விளைவிக்க சிலர் முயற்சித்ததால் கொழும்பில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு, பொரளையில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் போது ‘புலிகளின் நினைவேந்தல் வேண்டாம்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை காணமுடிந்தது. போராட்டம் காரணமாக பொரளை சுற்றுவட்டாரத்திற்கு அருகில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

(Jeeva Satha)

எங்கே போவேன் நான்

எங்கே போவேன்

முள்ளிவாய்க்கால் கஞ்சிக்கு

எங்கே போவேன் நான்

எங்கே போவேன்

எண்ணத்தில் பல வண்ணத்தில்

முதலில் என்கால் இடறியது

செட்டியின் பிண்டத்தில்

துரையப்பா

தார்போட்டெரித்த ரொலோ பிண்டங்கள்

காத்தான்குடி பள்ளிவாசல்

ஈறாக கேதீஸ்வரன்

முகமும் பெயரும் தெரியாத

வயித்துப் பிழைப்புக்காக

தினமுரசு வினியோகித்த பையன்

சிங்கள அரசியல்வாதிக்கு

திருநீறு பூசிவிட்ட ஐயர்

இவளவற்றையும் கடந்தும்

முள்ளிவாய்க்கால் போய்சேர்ந்தேன்

கஞ்சி

கள நிலவரம்💣 ஈழப்போரின் இறுதிக்காட்சிகள்

 என் சனம் படுகின்ற தொல்லைகளை நான் கண்டேன். அவர்களிடும் கூக் குரலை நான் கேட்டேன். அவர்கள் படும் வேதனையை நான் அறிவேன். பார்வோன் பிரபாகரனிடம் போய்ச் சொல் “என் சனத்தை போக விடு”

                                   – யாத்ராகமம்

By சிவராசா கருணாகரன் 

ஈழப்போரின் இறுதி நாட்களைப்பற்றி தமிழில் பக்கச்சார்பற்று எழுதப்பட்ட இதுவரையில்  ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோரால் படிக்கப்பட்ட மகத்தான கள ஆய்வறிக்கை👇

நாயிற் கடைப்பட்ட நம்மை                                                      இம்மை ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி      ஆடப்பொற்சுண்ணம் இடித்து நாமே                                                            – திருவாசகம்                                                  

யாழ். முன்னாள் முதல்வர் கைது

யாழ். மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் யாழ்ப்பாண பொலிஸாரினால் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு இமானுவேல் ஆனோல்ட் சென்றபோதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மூன்று புதிய ஆளுநர்கள் பதவிப்பிரமாணம்

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் ஆகிய மூன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, வடமாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.