என்னதான் நடக்கின்றது…… உடுவில் மகளிர் கல்லூரியில்

(கட்டுரையாளரின் தகவல்கள் சரியானதா…? அல்லது தவறானதா….? என்ற கருத்துக்களை அறிவதற்கான களத்தை வாசகர்களிடம் விட்டுவிடுகின்றோம் – ஆசிரியர்)

உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி மில்ஸ் அவர்களது சேவை முடிவுறுத்தல் விடயம் பூதாகாரமாக்கப்பட்டுள்ளது.
பேராயரும் கல்லூரியின் ஆளுனர் சபைத் தலைவருமான பேரருட் கலாநிதி தியாகராசா அவரது அறிக்கையின் படி குறித்த அதிபர் 07 செப்ரெம்பர் 2016 அன்று 60 வயது பூர்த்தியுடன் இளைப்பாறுவார் என 2015 ஆவணிமாதம் 10ம் திகதி நடைபெற்ற ஆளுனர் சபைக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.


2016 மே மாதம் 27ம் திகதி புதிய அதிபர் தேர்வுக்கான விண்ணப்பம் அதிபர் திருமதி மில்ஸ் ஊடாக பாடசாலை அறிவித்தல் பலகையில் ஒட்டப்பட்டது அத்தோடு இரு வார சண்டே ரைம்ஸ் பத்திரிகையிலும் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. ஆளுனர் சபையின் கோரிக்கையின் அடிப்படையில் மேற்படி இரு விடயங்களும் தன்னால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக திருமதி மில்ஸ் அவர்களினால் பேராயருக்கு 02 யூன் 2016 கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விண்ணப்பங்களின் அடிப்படையில் மூவர் 14 ஆவணி 2016 நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.

திருமதி மில்ஸ் அவர்கள் தான் 60 வயதை கடந்தும் கடமையாற்ற விரும்புவதாக விண்ணப்பித்ததன் அடிப்படையில் மறுநாள் 15 ஆவணி 2016 பிரத்தியேகமாக நேர்முகத்தேர்வு நடைபெற்றது.
தென்இந்திய திருச்சபையின் யாழ்ப்பாண அத்தியட்சாதீனத்தின் செயற்குழு தெரிவு செய்திருந்த ஐவருடன் இந்தியாவிலிருந்து சென்னை கிறிஸ்தவ கல்லூரியின் அதிபர் டாக்டர் யேசுதாசன் வெளித்தேர்வாளராக பங்குபற்றியும் நேர்முகத்தேர்வு நடைபெற்றது
நேர்முக சபை தற்போதைய பிரதி அதிபர் பற்றீசியா சுனித்தா ஜெபரட்ணம் புதிய அதிபராக சிபார்சு செய்யப்பட்டமையை அத்தியட்சாதீனம் ஏகமனதாக ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் பற்றீசியா சுனித்தா புதிய அதிபராக அறிவிக்கப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து 06 செப்ரெம்பர் 2016 அதிபர் பொறுப்பை பிரதி அதிபரிடம் ஒப்படைக்குமாறு திருமதி மில்ஸ் கேட்கப்பட்டிருந்தார்
அத்தோடு 07 செப்ரெம்பர் 2016 ஆசியர்களிற்கான கூட்டமும் மறுநாள் 08 செப்ரெம்பர் 2016 மாணவர்களிற்கான கூட்டத்துடன் அன்றைய தினம் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என ஆளுனர் சபையினால் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

நிலமை இவ்வாறு இருக்கும் போது திருமதி மில்ஸ் மற்றும் அவரது நலன்விரும்பிகளது நியாயமற்ற குறுகிய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக திருச்சபை மீதும் திரு சுமந்திரன் மீதும் வீண் பழி சுமத்தி சில மாணவிகளாலும் அவர்தம் பெற்றோராலும் அநீதியான போராட்டம் நடைபெறுகிறது அதாவது நல்ல நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஏன் யாழ்ப்பாண சமூகம் இப்படி பொய்மையானதாகவும் தரந்தாழ்ந்தும் பொனது என்பதை ஜீரணிக்க முடியாதுள்ளது ஒரு தனிப்பட்ட ஒருவரது குறுகிய நோக்கத்தை குறுக்கு வழியில் அடைவதற்காக பெற்றார் இரவு பகலாக தமது பெண் பிள்ளைகளை போராட அனுமதித்திருப்பது துரதிஷ்ட வசமானது. அண்மை வரை அநீதிக்கு எதிராக ஆயதம் ஏந்திய வீரப்பெண்களை ஈன்றெடுத்த தமிழ் மண் நீதிபிறழ்ந்த சமூகத்தையும் நமக்குத் தந்துள்ளது

(Azhagan Kanagendiram)