கேப்பாபுலவு

கேப்பா புலவு பிலக் குடியிருப்பு மக்களின் சொந்த நிலமீட்புக்கான அறவழிப் போராட்டத்திற்கு ஆதரவாக மல்லாவி வர்த்தகர் சங்கம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை திங்கட்கிழமை நடாத்தி இருந்தது. இது உண்மையில் வரவேற்கத்தக்க ஒரு விடயம். இப்படியான ஆதரவை தெரிவிக்க ஏனைய நம்முடைய மக்கள் மறந்து விட்டார்களே என்பது தான் வேதனை. ஜல்லிக்கட்டுக்காக வீதியில் இறங்கிய மக்களுக்கு கேப்பாபுலவு மக்களின் கண்ணீர் தெரிய வில்லையே.
தங்களுடைய காணிகளை தருமாறு கேட்டு மக்கள் வீதிகளிலே கிடக்கிறார்கள்.


இரவு பகல் பாராது நீதி வேண்டி போராடுகிறார்கள்.
மக்களுடைய போராட்டத்தை அரசியலாக்கி விட்டு தங்களுடைய வாக்கு களை தக்கவைக்க பார்க்கிறார்கள் எங்களுடைய அரசியல் வாதிகள்.
உண்மயில் பொது மக்களுடைய காணிகளை பொதுமக்களிடம் வழங்குவது அரசின் கடமை. தங்களுடைய பிறந்த மண்ணை தாங்கோ என்று கேட்பது மக்களின் உரிமை.
என்னை பொறுத்தவரை காணி விடுவிப்பது தொடர்பாக ஒரு இரவுக்குள் முடிவெடுக்க முடியும். ஆனால் அந்த மக்களுக்கான ஒரு நியாய மான பதிலை உரிய தரப்புகள் வழங்கியதாக தெரியவில்லை.
மக்களுடைய நிலைமையை பார்க்கும் போது மிகவும் கவலையாக தான் உள்ளது.
இங்கே மக்களால் தெரிவு செய்யப்பட்ட எதிர்கட்சியாகவும் இருக்கிற தமிழ்க்கூத்தமைப்பு என்ன செய்கிறது என்றொரு கேள்வி எழுகிறது 16, பாராளு மன்ற உறுப்பினர்! ஒரு எதிர் கட்சி தலைவர்!
என்று பலமாக இருக்கும் இவர்களால் எதுவும் செய்ய முடியாது என்று கூறுவதை ஏற்க முடியாது.
வெறுமனே பதவிச்சண்டைகளுக்காக கூடு கின்ற வடமாகாண கோமாளிகள் சபையும் உருப்படியான காரியங்கள் எதுவும் இதுவரை செய்யவில்லை. 41, மாகணசபை உறுப்பினர்கள் ஒரு முதலமைச்சர் இருக்கிறார்கள். ஆனால் வெறும் பூச்சிய செயற்பாடுகளே நடந்து கொண்டிருக்கின்றன.
மக்களின் போராட்டாத்திற்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க அனைத்த தமிழ் அரசியல் வாதிகளும் மக்களோடு மக்களாக வீதியில் இறங்கியிருக்க வேண்டும். உருப்படியான தீர்வை பெற்றுக்கொடுத்து அந்த மக்களை துன்பத்திலிருந்து மீட்க நடவடிக்கை எடுப்பது அனைவரினதும் கடமையாகும்..
இல்லாவிட்டால் உடனாடியாக தமிழ் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப் படுத்தும் தாங்கள் மக்கள் பிரதி நிதிகள் என்று சொல்லிக்கொள்ளும் அனைத்து பாரளுமன்ற மற்றும் மாகாண உறுப்பினர்களும் மக்களின் எதிர்காலத்திற்காக தங்களுடையை பதவி களை விட்டு விலகுவது தான் நல்லது.
வழமைபோல மக்களே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்கள்.