தமிழருக்கான சாத்தியமான வழிமுறைகள்

 

அடையவே முடியாத மகாதேவிக்காக வாளைத் தூக்கி வீசிக் கொண்டிருப்பதைவிடவும் அடைய முடிந்த ஸ்ரீதேவிக்காக கைகளை நீட்டலாம் என்பதைப் போல் சாத்தியமான வழிமுறைகளைக் குறித்துச் சிந்தியுங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் 2011களில் நாடு முழுவதும் பேசி வந்தார்.

‪‎எனக்கு‬ தெரிந்து நமது தமிழ் தரப்புக்கள் வந்த ஸ்ரீதேவியையே வரவேற்க தயாராக இருக்கவில்லை வரவேற்கவும் இல்லை. அதனால் தான் என்னவோ தமிழர் விடுதலை கூட்டணி, புலிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு என நமது நகர்வுகள் நகர்ந்தாலும் எந்த ஒரு இலக்கையும் அடையமுடியாது உள்ளது.

ஒரு காலத்தில் தமிழர் பிரச்சனை என்றால் அது விடுதலை கூட்டணி தான் தீர்த்துவைக்க வேண்டும் வேறு எவருக்கும் அந்த சந்தர்ப்பம் இல்லை என்றார்கள், பின் புலிகள் காலத்திலும் அதே தான் நடந்தது புலிகளின் ஊடாகவே தமிழர் பிரச்சனை தீர்க்கப்படவேண்டும் என்று கூறி வந்தனர், இப்பொழுது கூட்டமைப்புக்கே அந்த நிலை இருப்பதாகவும் வேறு எவருக்கும் அது வழங்கப்படாது என்றும் கூறி வருகிறார்கள்.

‪#‎அரசியல்வாதிகளின்‬ களம் மக்களின் என்னவலைகளை வைத்தே அச்சாரம் இடப்படும் அவர்கள் எப்படி பயணிக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது ஒவ்வரு தனி மனிதனுமேயாகும். நாம் முதலில் நமது பிரச்சனைகளை ஆராயவேண்டும் அதற்கான தீவுகளை காண வேண்டும் அதில் எதார்த்த தன்மைகளை இனம்கண்டு அதற்க்கு பிறகு இலக்குகளை வைத்து பயணிக்கவேண்டும் அப்பொழுது தான் நம் பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும்.