பிடல் காஸ்ரோ: மனித குல வாழ்விற்காக தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்த தோழன்

(சாகரன்)

பொது உடமைத் தத்துவத்தை தனது நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் அடிநாதமாக கொணடு செயற்பட்டவர். சர்வதேசம் எங்கும் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களுக்கு தனது தார்மீக ஆதரவை வழங்கியவர். மத்திய தென் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்ட ஏகாதிபத்திய எதிர்பு இடதுசாரிப் போராட்டங்களின் ஆதர்ச புருஷராக விளங்கியவர். தொடர்ந்த அங்கு கிடைத்த போராட்ட வெற்றிகளை ஏகாதிபத்திய சக்திகளிடம் இருந்து காப்பாற்ற இன்று வரை அயராது உழைத்தவர். இடதுசாரிகளிடம் காணப்படும் நாடுகளின் இறமையை அங்கீகரித்து அந்தந்த நாடுகளின் உள் நாட்டுப் பிரச்சனைகளை அந்த நாட்டு மக்களே போராடி, பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதன் அடிப்படையில் இறுதிவரை தெளிவாக செயற்பட்டவர். எந்த வகையிலும் ஆக்கிரமிப்பு அற்ற உதவிகளை விடுதலை வேண்டிப் போராடிய நாடுகளுக்கு வழங்கியவர் இதனை நாம் தென் ஆபிரிக்காவின் தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கு வழங்கிய ஆதரவில் இருந்து மற்றய எதனையும் விட அதிகம் அறியலாம்.

ஓபமாவின் முதலாவது ஆட்சிக்காலத்தில் நிலவி வந்த ஈரான் அமெரிக்க ஆணுவாயுதம் சம்மந்தமான முறுகல் நிலையில் அழிவு ஆயுதங்கள் பாவிகப்படலாம் என்று முழு உலகமே பயந்திரந்து வேளை ‘நீங்கள் நினைத்தால் இந்த அழிவு ஆயுதப் பாவனைக்கான நிலமை ஏற்படாமல் தடுக்க முடியும்’ என்று சர்வ தேசமக்களை அழிவிலிருந்து காப்பாற்றி உலக மக்களின் வாழ்வை உறுதிப்படுத்த உருக்கமான வேண்டுகோளை ஒபமாவிடம் விடுத்தவர்.

தனது நாட்டிற்குள் ஒரு நிறைவான வாழ்வை (அமெரிக்கா கூறுவதைப் போல் வசதியான வாழ்வை அல்ல) மக்களுக்கு ஏற்படுத்தும் பொறிமுறையை புரட்சியின் பின்பு உருவாக்க கிட்டத்தட்ட 50 வருடங்கள் ஆட்சியதிகாரம் செய்து அதனை இன்று வரை தொடர போதுமான கட்டமைப்புப் பொறி முறைகளை நிறுவியவர். உலகின் முதல் தரமான வைதிய சேவையை தனது நாட்டிற்குள்ளும் ஏன் வெளிநாடுகளிலும் செயற்படுத்திக்காட்டியவர் இதற்கு எபோலாவை ‘வென்றவர்’ என்பதும் கெயிட்டியில் சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட புயலால் ஏற்பட்ட அழிவிற்கு பின்னரான வாத்த பேதியை யாரும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் தனது மருத்துவக் குழுவை நிவாரணத்திற்கு அனுப்பி வெற்றிகண்டவர். இந்த மருத்துவ செயற்பாட்டை தனது நட்பு நாடுகள் எங்கும் செயற்படுத்தி பொருளாதார சமநிலையை தனது நாட்டிற்கும் ஏனைய நாடுகளுக்கும் இடையில் கையாண்டவர். உலகிலேயே தனது நாட்டில் இருந்த மிகப் பெரிய சிறைச் சாலையை (புரட்சிக்கு முன்னர் செயற்பாட்டில் இருந்த) உலகின் மினச் சிறந்த மருத்துவப் பல்கலைக் கழகமாக மாற்றி செயற்பாட்டாளன் இவர்.

புரட்சிக்கு பின்னரான நாட்டைக் கட்டியமைப்பதில் அன்றைய சோவியத்யூனியனின் பொருளாதார ஒத்துழைப்பு ரஷ்ய உருவாக்கத்தின் பின்பு குறைவடைந்த சூழ்நிலையில்; இனி கியூபா அவ்வளவுதான் என்று எதிர்பார்திருந்த சிலருக்கு தனது உள்நாட்டு உற்பத்தி முறையில் மாற்றங்களை துரிதகதியில் ஏற்படுத்தி வல்லாதிக சக்திகளிடம் பட்டினிச் சாவிலிருந்து தனது மக்களை காப்பாற்றி செயல்வீரன். தோடர்ந்த அமெரிக்காவினதும் அதன் கூட்டாளி நாடுகளினதும் மக்களைப் பட்டினி போட்டுச் சாகடிக்கும் பொருளாதாரத்தடை என்ற ‘மனித உரிமை’ச் செயற்பாட்டிலிருந்து தனது நாட்டையும் நேசநாடுகளையும் மண்டியிட வைக்காமல் தொடர்ந்தும் பொருளாதாரத் தடைகளைப்பற்றிய அம்பலப்படுத்தலுடன் தொடர்ந்தும் நிமிர்ந்து நின்ற செயற்பட்டவர்.

ஆமெரிக்க ஏகாதிபத்தியன் ஏவலால் தன்னைக் கொல்ல வந்தவர்களிடம் இருந்து தன்னைக் காப்பாற்றி மக்களுக்கு சேவை செய்வதற்காக 90 வயது வரை வாழ்ந்த சிறந்த மனிதர். இதில் ஒரு புரட்சியாளனுக்குரிய மிகவும் அவசியமான குணநலச் செயற்பாட்டை உலகிற்கு விட்டுச்சென்றிருப்பவர். தனது சிறந்த மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகள் மூலம் மக்களால் முன்னிலைப்படுத்தப்பட்ட தலைவராக உயர்ந்தவர். உலக மக்களின் பெரும்பான்மையினரால் புரட்சியின் அடையாளச் சின்னமாக வலம் வரும் சே யின் சக தோழன்.

நாம் வாழும் காலத்தில் இவருடன் நாமும் இவர் நம்பும் சித்தாந்தகள் செயற்பாடுகளுடன் பயணித்தோம் என்ற மனநிறைவுடன் இவரை வழியனுப்பி வைப்போம்…அவரின் சிந்தனைகளை மட்டும் எம்முடன் வைத்துக் கொண்டு