புதிய அரசமைப்பும் சிறுபான்மையினரின் எதிர்காலமும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

புதிய அரசமைப்பாக்க முயற்சிகள் இலங்கைக்குப் புதியனவல்ல. 1994ஆம் ஆண்டு தொட்டு, இதற்கான பலமுயற்சிகள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. ஆனால், இன்றுவரை முழுமையாகச் சாத்தியமாகவில்லை. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள், புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகளைச் சாத்தியமாக்கும் வல்லமையைக் கொண்டுள்ளன. அரசாங்கம், நாடாளுமன்றின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருப்பதும் வலுவற்ற எதிர்க்கட்சி ஆகிய இரண்டு காரணிகளும் இங்கு பிரதானமானவை.