மேதினம்- அண்ணலின் அடிச்சுவட்டில்.

தொழிலாளர்களின் வேலைநேரம் அவ்வளவு எளிதாகக் குறைக்கப்படவில்லை. இம்முழக்கம் ஒலித்த இடங்களிலெல்லாம் ரத்தம் கொட்டியது. தொழிலாளர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள். ரத்தக்கறையுடன்தான் பல இடங்களிலும் வேலைநேரம் குறைக்கப்பட்டது ஆனால் இந்தியாவில் தொழிலாளர்களுக்கான வேலை நேரம் எட்டு மணிநேரமாக சட்டமாக்கப்பட்டதன் பின்னணியில் ரத்தமில்லை, நரபலியில்லை. ஒரு மேதையின் கையெழுத்து இதை சாத்திய்மாக்கியது. அந்த மேதை அண்ணல் அம்பேத்கர்.

பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் 1942 லிருந்து 1946 வரை தொழிலாளர் அமைசராக இருந்தார் அண்ணல். இப்போதும் கூட சிலர் அவரை முதலாளித்துவ ஆதரவாளர் என்று உளறிக் கொட்டுவதுண்டு. ஆனால் அவர் தொழிலாளர்களின் மேல் எவ்வளவு அக்கறைக்கொண்டிருந்தார் என்பதை அவரின் வரலாற்றை அறிந்தவர்களே அறிவார்கள். அவர் தொழிலாளர் நல அமைச்சராக இருந்த போது, 1945 ஆம் ஆண்டு நவம்பர் 27 மற்றும் 28 தேதிகளில் நடந்த முத்தரப்பு மாநாட்டில் தொழிலாளர்களுக்கு எட்டு மணிநேரம் வேலை நேரத்தை சட்டமாக்கினார். 1946 பிப்ரவரி 26 இல் தொழிற்சங்கங்களுக்கு கட்டாய அங்கீகாரம் அளிக்கும் சட்டத்தை கொண்டுவந்தார்.

அவர் தீண்டப்படாதவர்களுக்கு மட்டுமே சிந்தித்தார், உழைத்தார் என்று சொல்லி அவரை நிராகரிக்கப் பார்ப்பவர்கள் இவ்வரலாற்றையெல்லாம் அறியாதவர்கள் அல்லது உண்மையான வரலாற்றை திரிப்பவர்கள்.
அண்ணலை ஜாதிப்பாராட்டும் தொழிலாளர்கள் விரும்பவாய்ப்பில்லை. ஆனால் அண்ணல் அவர்களுக்குமான உரிமையை கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்.

தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்துகள்.

நன்றி : ஸ்டாலின் தி