அஹிம்சைப் பேராட்டத்தின் காற்றை இழுக்க முயன்ற தலைகீழ் ஆணிகள்

தென்னிலங்கையை மட்டுமன்றி, சர்வதேசத்தின் கண்களையும் ஒரு கணம் திரும்பிப் பார்க்கச் செய்திருக்கும், ‘பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை’யான பேரணி, சிறுப்பான்மை இனங்களின் ஒன்றுமையை எடுத்தியம்பி நிற்கின்றது. இது வெறுமனே, உரிமைப் போராட்டமாக மட்டுமன்றி, அரசாங்கத்துக்குப் பெரும் செய்தியையும் கூறியுள்ளது.