ஆலங்குளம்: இடர்கள் தாண்டி வாழும் பூர்வீக கிராமம்


மட்டக்களப்பு – பொலன்னறுவ வீதியில், ஓட்டமாவடியைத் தாண்டி, நாவலடிச் சந்தியைக் கடந்தால் தென்படும் கிராமம் ஆலங்குளம். பிரதான வீதியில் இருந்து வடக்கே இரண்டரைக் கிலோ மீற்றருக்கு வீடுகள் கொண்ட கிராமம். இந்தப் பூர்வீகக் கிராமத்திற்கு, திருக்கொண்டியாமடு என்ற இன்னொரு பெயருமுண்டு. மட்டக்களப்பின் தொன்மை வாய்ந்த கிராமங்களில் ஆலங்குளமும் ஒன்று.