இரத்தக்களரி ஏற்படுத்தும் முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்!

(Maniam Shanmugam)


இலங்கையில் ‘பாரதீய ஜனதா கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை சில தமிழர்கள் ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தக் கட்சியின் ஊடக மாநாடு ஒன்று யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தக் கட்சியைத் தொடங்கியவர்கள் பாரம்பரிய தமிழ் பிரதேசங்களை வாழ்விடமாகக் கொண்டவர்கள் அல்லவென்றும், கொழும்பை வதிவிடமாகக் கொண்டு வர்த்தகம் செய்பவர்கள் என்றும் தெரிய வருகிறது. அத்துடன் இது இலங்கையிலுள்ள அனைத்து இனங்களுக்கான கட்சி அல்லவென்றும் தெரிய வருகிறது.