இலங்கையில் மாகாணசபைகள்: இருக்கின்றன….. ஆனால் இல்லை(தொடர் – 2)

(அ. வரதராஜா பெருமாள்)


புதிய தேர்தல் முறையைக் காட்டி
தேர்தலையே தள்ளிப் போட்டு விட்டார்கள்

2017ம்ஆண்டு வரை மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் விகிதாசார முறையின்படி நடப்பதே சட்டமாக இருந்தது. 2017ம் ஆண்டு தேர்தற் தொகுதி முறையும் விகிதார முறையும் கலந்த வகையான தேர்தல் முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டம் பாராளுமன்றத்தினால் ஆக்கப்பட்டது. முன்னர் எப்போதும் மாகாண சபைக்கான தொகுதிகள் என்பது இருக்கவில்லை. 2017ம் ஆண்டு புரட்டாசி 22ந் திகதி மாகாண சபைகளுக்கான தேர்தல் (திருத்த) சட்டம் பாராளுமன்றத்தினால் ஆக்கப்பட்டு சபாநாயகரினால் கைச்சாத்திடப்பட்டு வரத்தமானியில் பிரசுரிக்கப்பட்டது.