உங்கள் எதிரிகள் இவர்கள்

இவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என வெளியுலகில் பேசப்பட்டாலும் இவர்களை இயக்குவது அரபு இஸ்லாமிய மக்களின் எதிரி நாடான இஸ்ரேல் என்றே அறியப்படுகிறது.இவர்களோடு அமெரிக்கா சவூதி அரேபியா ஆகிய நாடுகளும் உதவுவதாக நம்பப்படுகிறது.சிரியாவின் உள்நாட்டு சண்டையில் ஈடுபட்டுள்ள இந்தப் பயங்கரவாதிகள் காயமடைந்தால் இஸ்ரேல் வைத்தியசாலைகளிலேயே சிகிக்கை அளிக்கப்படுகிறது.

இஸ்லாத்தின் பெயரால் சிரியா ஈராக் நாடுகளில் சண்டைபோடும் இவர்கள் ஏன் பாலஸ்தீன மக்களுக்காக இஸ்ரேலுக்கு எதிராக போராடவில்லை.போராட்டம் எங்கு தேவையோ அங்கே போராட இவர்கள் தயாராக இல்லை.பர்மாவில் எவ்வளவு நடக்கும் கொடுமைகள் ஏராளம்.அவர்களுக்கு உதவ அண்டை நாடான வங்காளதேசம் கூட முன்வரவில்லை.மலேசியாவரவில்லை.அங்கே போய் போராட இவர்கள் தயாரில்லை.

சோமாலியா இஸ்லாமிய நாடு. பட்டினியால் மக்கள் சாகிறார்கள். இது இந்த பயங்கரவாதிகள் கண்ணுக்குத் தெரியவில்லை . அமைதியான மக்களின் வாழ்வைக் குலைத்து மக்களை மரணத்துள் தள்ளும் இவர்கள் மனிதர்களேஅல்ல.மதப் பற்றுள்ளவர்களும் அல்ல.

குர்திஸ் மொழிபேசும் மக்கள் அனைவரும் இஸ்லாமியர்களே.அவர்களுக்கு எதிராக ஈராக்,துருக்கி,சிரியா என பல நாடுகள் இழைக்கும் கொடுமைகள் வெளியே வரவில்லை.இன்று சிரியா அரசுஇந்தப் பயங்கரவாதிகள் கையில் விழாமல் தடுத்த பெருமை குர்திஷ் மக்களையே சாரும்.அந்தப் பயங்கரவாதிகளின் கொடுமைகளை வேடிக்கை பார்க்கும் துருக்கி அரசு குர்திஷ் மக்களை அழிக்க படை அனுப்புகிறது.

இந்த இஸ்லாத்தின் பெயரால் வளரும் பயங்கரவாதம் உலக அளவில் இஸ்லாமிய மக்களுக்கு அபகீர்த்தியை உருவாக்கி விட்டது.சந்தேகப்பார்வையைக் கொடுத்துவிட்டது.

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்புகளில் இறந்தது பிற மதத்தவர்கள் என்றாலும் மனதளவில் பாதிக்கப்பட்டவர்கள் இஸ்லாமிய மக்களே.மற்றவர்கள் விசத்தைக் கக்கும்போது அவர்களிடம் பேச மறுவார்த்தைகள் இன்றி தவிக்கிறார்கள் .இந்தப் பயங்கவாதிகள் சொந்த மக்களை உளவியல்ரீதியாக மன அழுத்தங்களுக்குள் தள்ளிவிட்டார்கள்.வாயிருந்தும் பேசமுடியாத ஊமைகளாக்கிவிட்டது இந்த பயங்கரவாத சம்பவங்கள்.

சொந்த மக்களுக்கே எதிரிகளாக மாறிவிட்ட இந்தப் பயங்கரவாதம் மேலும் வேரூன்றாமல் தடுக்க இஸ்லாமிய மக்களால் மட்டுமே முடியும்.மதம் என்ற பெயரால் நடக்கும் முட்டாள்தனங்களை அநியாய உயிரிழப்புகளை தடுக்க வேண்டிய கடமை எல்லோருக்கும் உண்டு.சொந்தக் குழந்தைகளின் உயிர்களில்கூட அக்கறை காட்டாத இந்தப் பயங்கரவாதம் தேவையில்லை.

புலிகள் ஒரு வெளிநாட்டவரையும் கொல்லவில்லை.- வடக்கு ஆளுனர் சுரேஷ் ராகவன்்.பலர் இந்த நேரத்தில் புலிகளோடு. ஒப்பிட்டு பேசுகிறார்கள்.இரண்டும் பயங்கரவாதம் என்பதை மறந்து இஸ்லாமிய மக்கள்மேல் சேறுபூசி மகிழ்கிறார்கள்.கவலைக்குரிய விசயம்.

இந்தப் பயங்கரவாதிகள் இஸ்லாமிய மக்களுக்கே எதிரி.உலகம் முழுவதும் அவர்களது நிம்மதியான வாழ்வைக் கெடுக்கிறார்கள்.உங்களுக்கே முதல் எதிரி .விழிப்பாக இருங்கள்.

(Vijay Baskaran)