உலகளாவிய கோப்பி நெருக்கடி: எனது குருதியே, உனது கோப்பி

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

நாம் அன்றாடம் உண்ணும் உணவுகள், எவ்வாறு எம்மை வந்தடைகின்றன என்பதை, பெரும்பாலும் நாம் அறிந்திருப்பதில்லை. பெட்டிக்கடைகள் இருந்த காலம் போய், இன்று மாபெரும் பல்பொருள் அங்காடிகளில், பொருள்களை வகைவகையாகப் பிரித்து, அடுக்கி வைத்திருப்பவற்றில் இருந்து, தெரிந்து வாங்குவது வழக்கமாகிவிட்ட நிலையில், பொருள்கள் குறித்த சிந்தனைகளும் அது பற்றிய சிந்தனை முறைகளும் எம்மிடம் மாற்றமடைந்து விட்டன.