எம் மனதில் சிம்மாசனமிட்டிருக்கும் தோழர் குமாரின் 36வது நினைவுதினம்……

தோழர் குமார் என எம்மால் அழைக்கப்பட்ட யாழப்பாணம் குருநகரை சேர்ந்த போல்டன் உதயகுமார் எம்மை விட்டுப்பிரிந்து 36 வருடங்கள் கடந்திருக்கிறது. இன்று அவர் தமிழ் மக்களின் விடிவிற்கான போராட்டத்தில் தன் உயிரை அர்ப்பணித்த தினமாகும்.தோழர் குமார் ஈபிஆர்எல்எவ் இன் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவராவார்.