எழுந்து வர முயற்சிக்கும் இலங்கை (பகுதி 5)

அண்மைய காலங்களில் எகிப்து லிபியா உக்ரைன் போன்ற நாடுகளில் நடைபெற்ற மக்கள் பேரெழுச்சிகளின் பின்னால் அமெரிக்கா இருந்தது பரம இரகசியம்

முன்னாள் அமெரிக்க அதிபர் ரீகன் காலத்தில் அதிகம் தென் அமெரிக்க மத்திய அமெரிக்க நாடுகளில் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்வுகள் அமெரிக்க சார்பு பொம்மை அரசு உருவாக்கங்களில் பலவற்றை நாம் உதாரணமாக இங்கு கூற முடியும்

2015 ல் இலங்கையில் நடந்த ஆட்சிமாற்றத்தினால் உருவாக்கப்பட்ட நல்லாட்சியல் கூட வெளிச்சக்திகளின் கரம் இருந்தன.
தற்போது உலக அளவில் கொரனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நலிவுகளை காரணமாக்கி வேகப்படுதப்பட்ட அரசுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு பின்னால் பாகிஸ்தான், பெரு, இலங்கை போன்ற நாடுகளில் ஓரே கால நிகழ்வுகளின் பின்னால் மேற்கத்தியத்தின் கரங்கள் இருக்கலாம் என்பதுவும் இதன் தொடர்ச்சியாக தமது நலன்களை இலங்கையில் ஏற்படுத்த இன்னொரு கோத்தபாயாவை உருவாக்க முயலுகின்றார்கள் என்ற மறைமுக வேலைத்திட்டத்தையும் மறுதலிக்க முடியவில்லை

இந்த வெளி சக்திகளை முறியடித்து கியூபா, வெனிசுலா, உருகுவே நிகரகுவா, பொலிவியா போன்ற நாடுகள் எழுந்து நிற்கின்றன.
அண்மையில் சிலியில் இளம் தலைவர் பல்கலைக் கழக மாணவன் ஒருவர் தலமையில் நடைபெற்ற போராட்டங்களும் அமெரிக்காவின் சதியான வீழ்த்தப்பட்ட அலன் டேல் கனவு கண்ட மக்கள் ஆட்சியை தேர்தல் வெற்றி மூலம் நிறுவி நிற்கின்றன.

இதற்கான வாய்ப்புகள் இலங்கையில் ஏற்படுமா என்பதே தற்போதைய கேள்விகளாக இருக்கின்றன. இதற்கான தலமைத்துவம் ஏற்படுத்தப்பட வேண்டும் அவை ஒருங்கிணைக்கப்பட வேண்டும்

கொள்கை வகுக்கப்பட்டு வேலைத்திட்டங்களை அமைத்து அதன் பால் மக்கள் திரட்டப்பட வேண்டும். விடாப்பிடியாக போராட வேண்டும். இலங்கை பல் தேசிய இனங்களும் சம உரிமையுடன் வாழும் நாடாக மாற்றப்பட வேண்டும்

இதற்கிடையில் மக்களின் பசியும் பட்டினியும் மிகவும் அத்தியாவசிய சேவைகளும் நடைபெற்றாக வேண்டும்.

இதற்கு இருப்பவர்களில் சிறந்தவர்களைக் கொண்டு கடிவாளம் போடப்பட்ட இடைக்கால அரசு உருவாகப்பட வேண்டும். இதில் பெரும்பான்மையாக தற்போது பாராளுமன்றத்தில் இருக்கும் ஆளும் எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு தகுதிகள் இல்லை என்பது இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்

அரசியல் சாசனதிற்கு உட்பட்ட செயற்பாடாகவே இடைக்கால அரசு உருவாக்கக்கப்படலாம் என்பதை மறுத்துரைக்க முடியாவிட்டாலும் மக்கள் சக்தி மாபெரும் சகத்தியாக வரலாறு எமக்கு நிறுவி நிற்பதில் நாம் நம்பிக்கை வைத்தாக வேண்டும்

இப்போது நடந்து கொண்டிருக்கும் போராட்டம் பாராளுமன்ற முறைக்கு எதிரான போராட்டமல்ல ஆட்சி மாற்றத்துக்கான போராட்டம். அதனை தேர்தல் ஒன்றின் மூலம் மாத்திரமே செய்யமுடியும். ஆனால் இன்றைய சூழலில் அதுவரை காத்திருக்க முடியாது.

இருப்பவர்களில் சிறந்தவர்களைக் கொண்டு இடைக்கால அரசு அமைத்தல். இவற்களைக் கொண்டே ஜனாதிபதியிற்கு எதிரான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தல்

ஜனாதிபதியன் அதிகாரத்தை மட்டுப்படுத்தல் பாராளுமன்றத்திற்கான அதிகாரம் என்ற பரவலாக்கத்திற்கான அரசியல் அமைப்புத் திருத்தம் உருவாக்கப்பட வேண்டும்

புதிய அரசியல் அமைப்பொன்று இலங்கை வாழ் அனைத்து மக்களையும் ஒருக்கிணக்கும் சமத்துவமாக பாவிக்கும் வரையிலான அதிகாரப் பரவலாக்கலை உள்ளடக்கியதாக அமைத்தல் வேண்டும்

நீதித்துறை முழுமையாக சுதந்திரமான செயற்பாடுடைய அமைப்பாக மாற்றப்பட வேண்டும் நாட்டின் அதியுயர் பீடமாக இதுவே இருக்க முடியும் மாறாக சமய பீடங்கள் அல்ல

இவைகளை உருவாக்குவதற்கு அரசியல் கட்சிகளுக்கு அப்பால் உள்ள நிபுணர்கள் உள்ளடங்கியதாக குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதில் சந்திரிகா காலத்து முன்மொழிவை ஆதாரமாக கொண்டு ஆரம்பிக்கலாம் என்பது என் அறிவிற்கு எட்டிய பார்வையாக தற்போதும் எனக்குப் தெரிகின்றது.

குறுகிய காலத் தீர்வாக..
மக்களைத் திரட்டி உணவு உற்பத்தியை அதிகரித்தல் இது ஒரு வகையில் தற்சார்பு பொருளாதார அடிப்படையில் அமையும்

இதில் நம்பிகையற்ற கருத்துகளை சிலர் ஆஜன்ரீனாவில் அண்மைய ஆண்டுகளாக ஏற்பட்டுவரும் உணவுப் பற்றாக் குறையை காட்டினாலும் எனக்கு அதில் உடன்பாடு இல்லை

பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய சேதனப் பசளை அறிமுகப்படுத்தல் என்பதை படிப்படியாக அறிமுகப்படுத்தல் அதுவரை இரசாயன உரத்தை பாவிப்பதை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பாவிப்பதற்கு அனுமதித்தல் கூடவே எதிர் காலத்தின் சேதன பசளையை உருவாக்கும் திட்டத்திற்கான அத்திவாரங்களை அதிகரித்தல்

இதற்கு அப்பால் எம்மால் உற்பத்தி செய்ய முடியாத மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான எண்ணை மருந்து எமது உற்பத்திகளின் தேவைக்கு ஏற்ப மட்டும் இறக்குமதி செய்தல் என்பதில் கவனம் எடுத்து செயற்படுதல்

இங்கு ஒரு முக்கியமான விடயத்தை பேசியாக வேண்டும் ஐஎம்எவ் தடையற்ற இறக்குமதியை அனுதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடனான கடன் வழங்கலையே வலியுறுத்தும்.

ஏன் எனில் தனது வர்க்க நலன்சார்ந்த செயற்பாடுகளில் அது அவ்வாறே செயற்படும்.

பொருட்களுக்கான சந்தையை இலங்கையிலும் தேடுதல் என்பதில் கவனமாக இருக்கும். இதே விடயம் கடன் உதவி வழங்கும் இந்தியா சீனாவிடமும் காணப்படும் இதில் நாம் கவனமாக செயற்பட்டாக வேண்டும்
பொருட்களின் பதுக்கல் அதிக விலையில் விற்பனை செய்தல் என்பனவற்றை தடை செய்வதற்கு பொது விநியோகத் திட்டத்தை கூட்டுறவு சங்கம் மூலம் செயலூக்கத்துடன் செயற்படுத்துவதற்குரிய பொறிமுறையை வலுப்பலுத்த வேண்டும்

நீண்ட காலத்திட்டங்களாக

மலையக மக்களால் உற்பத்தி செய்யப்படும் தேயிலை கோப்பி றப்பர் கொக்கோ போன்றவற்றில் உற்பத்தி திறனை அதிகரிக்க முதலில் தொழிலாளர்களின் நலன்கள் வாழ்க்கை தரம் உயரத்தப்பட வேண்டும்.

இதன் மூலமே அதிக வினைத் திறன் மிக்க உழைப்பை தொழிலாளர்களிடம் இருந்து பெற்று உற்பத்தி அளவையும் தரமான பொருட்களை உருவாக்கி உலக சந்தையில் எமது விளை பொருட்களுக்கு அதிக அந்நிய செயலவாணியை பெற முடியும் தொழிலாளர் நலன்கள் சீர் செய்யப்படமல் இது சாத்தியம் அற்றது என்பது எனது வலுவான வாதம் ஆகும்.

உள்நாட்டு உல்லாப் பயணத்துறையில் வெளிநாட்டவர்கள் உள்ளுர் மக்கள் என்ற இருதரப்பினரும் பயன்படக் கூடியதான பொறிமுறை உருவாக்கக்கப்பட வேண்டும்

கியூபா போன்ற நாட்டில் உள்ளது போல் வேண்டுமானால் இருவகையிலான நாணயப் புழகத்தில் உருவாக்கலாம்
சொத்துகளின் அடிப்படையிலான வரி விதித்தல் என்பதை அறிமுகப்படுத்தலாம்

தங்கியிருக்கும் பொருளாதாரத்தில் இருந்து தன் நிறைவுப் பொருளாதாரம் என்ற உள்ளுர் உற்பத்திகளை அதிகரித்தல் என்பதாக பொருளாதாரக் கொள்கைகளை வகுத்து செயற்படுத்த வேண்டும்

தொடர்ந்தும் கல்வி சுகாதாரம் உணவிற்கான மானியம் ஓய்வூதியம் போன்ற சமூக நலத்திட்டங்கள் இனிமேலும் நிச்சயமாக தொடரப்பட வேண்டும்

வட மாகாணத்தில் தற்போது நடைபெற்று வரும் போராட்த்திற்கான மௌனம் ஏன் என்று காரணங்களை பலரும் பலவிதமாக கூறினாலும் அது ஏற்புடையதும் அல்ல இராஜதந்திர ரீதியில் சரியானதும் அல்ல.

இது வருத்தத்தை அளிக்கின்றது

உண்மையில்
சிலர் பெருமையாக சொல்லிக் கொள்வதைப் போல் இல்லாமல் யுத்த காலத்திலும் அது முடிவடைந்த கடந்த 13 வருடத்திலும் தற்போதும் மிகப் பெரும்பான்மையாக இருக்கும் விளிம்பு நிலை மக்கள் ஒரு வேளை சாப்பாட்டுடன் தமது உணவை முடித்துக் கொள்ளும் வறுமையில் இருக்கின்றனர் வடக்கில் கிழக்கில். இது புள்ளி விபரம் கூறும் செய்தி

இவர்கள் குரல் அற்றவர்களாக ஊடகம் அரசியலில் பிரதான நீரோட்டத்தில் உள்ளவர்களால மறைக்கப்படும் நிலைமையே யதார்த்தமாக இருக்கும் நிலையில் கொழும்பில் காலி முகத்திடலில் நடைபெறும் போராட்டத்திற்கு சமாந்தாரமாகவேனும் அதேயளவு எழுச்சியுடன் போராடுவதே சரியானது.

ஆனால் யுத்த காலத்திலும் ஈழவிடுதலை பேராட்ட காலத்திலும் அதன் பின்பும் தாம் வஞ்சிக்கப்பட்ட போது பெரும்பான்மை சிங்கள மக்கள் தமக்கான குரல்களை உயர்த்தவில்லை அனுதாபங்களை தெரிவிக்கவில்லை என்ற ஏமாற்றத்தின் வெளிப்பாடாக இது ஏற்பட்டதாக உணரப்பட்டாலும் இவர்களுக்கான ஆதரவுக் கரங்களும் குரல்களும் பெரும்பான்மை மக்களிடம் இருந்து சற்று அதிகமாக இன்று வெளிவருதல் எதிர் காலத்தில் நாம் யாவரும் இலங்கையராக பயணித்து பலமான சமூகமாக எமது நாட்டை கட்டியமைக்க உதவும்.

அதே வேளையும் தமிழ் தரப்பில் உள்ள சரியான சக்திகள் மக்களிடம் கரம் கோர்த்து செயற்பட வேண்டிய தேவையினை புரிதலை சகோதரத்துவத்தை இணைத்தலை ஏற்படுத்துவதற்கான அரசியல் வேலைகளை செய்தாக வேண்டும் இதற்கு எதிர் மறையான செயற்பாடுகளை போலித் தேசியம் பேசி வாக்கு பெறுபவர்கள் செயற்படுவார்கள் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

நன்றி