கனடாவில் – தென்மராட்சி மக்கள்..!! பேசாத பார்க்காத கேட்காத இரகசியம்!

கனடாவில் – தென்மராட்சி மக்களிடையே விமர்சனங்களை உண்டுபண்ணியுள்ள தலைமைத்தெரிவு..!! மக்கள் என்ன பேசுகிறார்கள்..? கனடாவிலுள்ள யாழ் – தென்மராட்சி பிரதேச மக்கள் மத்தியில் குறிப்பாக தென்மராட்சி பிரமுகா்கள் வர்த்தகர்கள் பிரதேச நலன்விரும்பிகள் மற்றும் ஊர்ச்சங்கங்களது தலைவா்கள் மத்தியில் பெரும் குழப்பநிலை ஒன்று உருவாகியுள்ளது. இந்த குழப்பநிலைக்கான காரணம் அண்மையில் ஐரோப்பியநாடுகளில் இருந்து கனடா வந்திருந்த வைத்தியர் திரு-புவிநாதன் தலைமையிலான குழுவினரது நல்லெண்ண வருகையும் செயற்த்திட்டங்களும் என தெரியவருகிறது.

கனடாவில் – தென்மராட்சி மக்களிடையே விமர்சனங்களை உண்டுபண்ணியுள்ள தலைமைத்தெரிவு..!! மக்கள் என்ன பேசுகிறார்கள்..?

கனடாவிலுள்ள யாழ் – தென்மராட்சி பிரதேச மக்கள் மத்தியில் குறிப்பாக தென்மராட்சி பிரமுகா்கள் வர்த்தகர்கள் பிரதேச நலன்விரும்பிகள் மற்றும் ஊர்ச்சங்கங்களது தலைவா்கள் மத்தியில் பெரும் குழப்பநிலை ஒன்று உருவாகியுள்ளது. இந்த குழப்பநிலைக்கான காரணம் அண்மையில் ஐரோப்பியநாடுகளில் இருந்து கனடா வந்திருந்த வைத்தியர் திரு-புவிநாதன் தலைமையிலான குழுவினரது நல்லெண்ண வருகையும் செயற்த்திட்டங்களும் என தெரியவருகிறது.

தென்மராட்சி பிரதேச அபிவிருத்தி தொடர்ப்பிலான கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் நடைபெற்ற பலசுற்று சந்திப்புகளும் – அதனை மையமாகவைத்து கனடாவிலுள்ள சிலர் மேலெழுந்தவாரியாக தன்னிச்சையாக முடிவெடுத்து ஒட்டுமொத்த தென்மராட்சி பிரதேசம் சார்பாக சர்ச்சைக்குரிய ஒருவரை தலைவராக தெரிவுசெய்திருப்பதும் பெரும் அதிர்வலைகளை உண்டுபண்ணியுள்ளது –

பலதரப்பட்ட விமர்சனங்கள் குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் அகிலன் முத்துக்குமாரசுவாமி என்பவரே..!! அமைப்பின் தலைவர் என அவரை தலைவராக்கிய சிலரது விடாப்பிடிப் போக்கு நீடித்துவருகிறது.

தென்மராட்சி அபிவிருத்தி நிறுவனம் என அறியப்படும் ஒரு அமைப்பு கடந்த 15 வருடங்களாக செயலற்று கருமமாற்றுவாரற்று உள்ளக முரண்பாடுகளால் செலலிழந்து கிடந்த ஒரு அமைப்பாக அறியமுடிகிறது.. அதனது தலைவராக சாவகச்சேரி நுணாவிலைச்சோ்ந்த திரு-வி-எஸ்-துரைராசா என்பவர் இருந்துவந்துள்ளார் எனவும். அவ் அமைப்பின் திடீர் தலைவராக – புவிநாதன் வைத்தியா் குழுவினரது வருகையோடு திரு-அகிலன் முத்துக்குமாரசாமியை தனதும் தனது சாா்பான ஒருசிலரதும் விருப்பப்படியும் தலைவராக்கினார் திரு-வி.எஸ்.துரைராசா என்பது பலதரப்பட்ட சமூகநலன்விருப்பிகளது குற்றச்சாட்டாக உள்ளது.

அகிலன் முத்துக்குமாரசாமி என்பவரது தலைமைக்கு கீழ் ஒட்டு மொத்த தென்மராட்சி பிரதேசத்தையும் உள்ளடக்கிய சுமார் 10 க்கு மேற்ப்பட்ட சங்கங்கள் ஊர்களது ஒன்றியங்கள் பழையமாணவர்சங்கங்கள் என அனைத்தும் உள்ளடங்கியதாக ஒரு தென்மரைாட்சி அபிவிருத்தி நிறுவனம் ஒன்றை அமைப்பதில் சிலரது முயற்சிகள் சிலவாரங்களாக தொடரப்பட்ட நிலையில் அது முளுதாக நிறைவேறாதநிலையில்.. தலைமைமீது காணப்படும் பலவகைப்பட்ட சமூக விமர்சனங்கள் காரணமாக இழுபறிகள் தொடர்ந்தும் நீடித்துவருகிறது.

இதற்க்கு ஒரே ஒரு தீர்வு தென்மராட்சி பிரதேசத்திற்கு உட்பட்டு கனடாவில் இருக்கும் அனைத்து ஊர்களது சங்கங்களது சாா்பாகவும் தலா இருவரை இணைத்து – அவா்கள் எல்லோருமாக ஒரு தலைமையை தெரிவுசெய்வதே பயன்தரும் என பிரதேச நலன்விரும்பிகள் வேண்டி நிற்கிறார்கள்.

மேலெழுந்தவாரியாக எடுக்கப்பட்ட தலைமைத்திணிப்பு என பல ஊர்ச் சங்கங்களது பிரமுகா்கள் தமது அதிருப்தியை தெரிவித்தனர்.. இத்தலைமை எத்தகைய அடிப்படையில் எத்தனைபேருக்கு முன்னால் எத்தனை சங்க்கத் தலைவர்களுக்கு மத்தியில் தெரிவுசெய்யப்பட்டது என்ற கேள்வியோடு தலைவராக தெரிவு செய்யப்பட்டவர் பற்றிய சமூகப்பார்வை மற்றும் அவர் பற்றிய சமூகத்தில் உள்ள குற்றச்சாட்டுக்கள் விமர்சனங்களை வைத்தியர் புவிநாதன் தலைமையிலான குழுவினரிடம் பலரும் தெரிவித்து விசனமடைந்திருந்தனர். இதனைக்கேட்டறிந்த வைத்தியர் புவிநாதன் தலைமைத்தெரிவு முற்றிலும் பிழையானது என்பதை விளங்கிக்கொண்டதாக பலரிடமும் தெரிவித்துவந்தார் – மாற்றுவளி ஒன்றும் காண்பதாக தெரிவித்திருந்தார்.

ஒரு குடும்பத்தலைவரை அந்த குடும்பம் தீர்மானிக்கலாம் – ஒரு ஊரின் தலைவரை அந்த ஊர்மக்கள் தீர்மானிக்கலாம் – ஆனால் ஒரு மாபெரும் பிரதேசம் சார்பான பிரதேச சமூக மேம்பாட்டோடு சம்பந்தப்பட்ட அமைப்பு ஒன்றுக்கு பொறுப்பான தகமையுள்ள தலைவரை அந்த பிரதேசம் சார்ந்து இயங்கக்கூடிய ஊர் சங்கங்கள் மற்றும் ஊர் ஒன்றியங்கள் கல்லூரிகளது மாணவர்சங்கத் தலைவா்கள் கூடித்தீர்மானிப்பதும் தெரிவு செய்வதும்தான் பொருத்தமாகும் என்பது பலரது கருத்தாக உள்ளது.

அதுவும் தெரிவு செய்யப்படும் ஒருவர் எந்தவித மோசடிக் குற்றச்சாட்டுக்களுக்கும் உள்ளாகாதவராகவும் இலங்கை அரசியல் மற்றும் இராணுவசார்பு சலசலப்புகளுக்கும் விமர்சனங்கனுக்கும் உட்படாதவராகவும் நேர்மையுள்ளவராகவும் இருப்பது உருவாக எத்தனிக்கும் கட்டமைப்பின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது – கலை சலாச்சார தமிழ் இனப் பண்பாண்டு விழுமியங்களை பின்பற்றுபவராக தலைவரானவர் இருக்கவேண்டுமென்பது மிக மிக முக்கிமானது என தென்மராட்சிபிரதேச நலன் விரும்பிகளது வேண்டுதலாக காணப்படுகிறது.

இன்று புதன்கிமை கனடாவில் இரண்டாவது தடவையாக அழைக்கப்பட்ட சில ஊர்ச்சங்கங்களது பிரதிநிதிகளுடன் கூடும் கூட்டத்தில் என்ன நிலைப்பாட்டை எடுக்கப்போகிறார்கள் என்பதை பிரதேச நலன்விரும்பிகள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

கூட்டமானது சர்ச்சைக்குரிய தலைவரது – பிளாசான்ற் பாங்குவற் மண்டபத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மண்டபத்தில் இதற்க்கு முன்னர் நடைபெற்ற முதலாவது கூட்டத்தில் வைத்தியர் புவிநாதன் தலைமையிலான குழுவினரும் கலந்திருந்தனர். மேலும் கலந்துகொண்ட பலர் வெளிநடப்பு செய்திருந்தனர். அங்கு அழைப்பை ஏற்று சென்றிருந்த பிரமுகர்களுக்கு கருத்து தெரிவிக்கும் சந்தர்ப்பம்கூட தவிா்க்க்ப்பட்டடிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.. மாறாக அன்றையதினம் அங்கு வருகைதந்திருந்த சில சங்கத்தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் மௌனமாக அமர்ந்திருந்து – சொல்வதை கேட்டுவிட்டு தருவதை உண்டுவிட்டு – கொடுப்பதை குடித்துவிட்டு போகவேண்டும் என்ற நிலைப்பாடே காணப்பட்டதாக அங்கு சென்றிருந்தவா்கள் தெரிவித்தனர்.

ஏன் இதற்க்கும் அப்பால்..

முதலாவது நிகழ்வு பற்றிய செய்தியை தனது ஊடகத்தில் வெளியிட்ட சர்ச்சசைக்குரிய தலைவர் அகிலன் – அச் செய்திக்குறிப்பில்… கூட்டத்தில் கலந்துகொண்ட சங்கங்களது பெயா்களையும் – சங்க பிரதிநிதிகளது பெயர்களையும் குறிப்பிடுவதைகூட தவிர்த்து வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.. பிறிதொரு நிகழ்வில் தலைமை தெரிவுபற்றி விமர்சித்த ஊடகவியலாளர் ஒருவரை தற்போதைய தலைவர் அகிலன் – உங்க குடும்பத்தார் ஊரில் எங்கு உள்ளார்கள் என்பது எமக்குத்தெரியும் என எச்சரித்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான அச்சுறுத்தும் பாணி கண்டனத்திற்குரியது மட்டுமன்றி அவரது மனப்பாண்மையையும் எடுத்துக்காட்டுகிறது.

பிரதேச நலன்விரும்பிகளான எமது விருப்பம் யாதெனில் – பல வரலாறுகளைக்கொண்ட எமது தென்மராட்சிக்கு மாபெரும் உதவிநலத்திட்ட சங்கம் ஒன்று அமையவேண்டும் – அதை அந்த பிரதேசம் சார்பாக கனடாவில் இயங்கிவரும் அனைத்து ஊர்ச்சங்கங்களும் ஆதரித்து தாங்கி நிற்க்கவேண்டும்.. அதற்க்கு ஒரு பொருத்தமான தன்னலமற்ற தலைவரும் தெரிவாகவேண்டும் – அவர் எழில்மிகு தலைவராகவும் அறியப்படவும் வேண்டும் என்பதே!

இவ்வண்ணம்..

மாற்றங்களுடனான எதிர்பார்ப்புக்களுடன்.

தென்மராட்சி பிரதேச நலன் விரும்பிகள்.

(இதையும் சிலர் – தொழில் பேட்டி என்று கூறி தட்டிக்கழிக்கலாம்)

(Seithy.com)