கறுப்பினத்தவரின் உயிர்கள் முக்கியம்: ஒரு இயக்கத்தின் வரலாறு

கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணம் அமெரிக்காவையே உலுக்கிக்கொண்டி ருக்கிறது. அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. கடந்த மே 25 அன்று அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரத்தில் ஒரு வெள்ளையின போலீஸ்காரர் தனது முழங்காலால் ஜார்ஜ் ஃப்ளாய்டின் கழுத்தின் மேலே 8 நிமிடம் 46 நொடிகளுக்கு நின்றது அவரது உயிரைப் பறித்திருக்கிறது. இதனால், ‘கறுப்பினத்தவரின் உயிர்கள் முக்கியம்’ (Black Lives Matter – BLM) என்ற இயக்கம் மறுபடியும் தெருவில் இறங்கியும் சமூக வலைதளங்களிலும் போராட ஆரம்பித்திருக்கிறது. இனவெறியால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் 2013-ல் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் முழு வீச்சில் செயல்பட்ட பிறகு தொய்வுகொண்டது.