கல்முனை வடக்கு பற்றிய தவறான கருதுகோள்கள்! (சொல்லத் துணிந்தேன்—72)

(தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்)

வை.எல்.எஸ்.ஹமீட் எனும் முஸ்லீம் அன்பரொருவர் தனது முகநூலில் சாணக்கியன் உட்படத் தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கல்முனைப் பிரச்சனை குறித்த தனது கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார். சாராம்சத்தில் அவர் கூறியிருக்கும் பிரதான விடயங்கள் இரண்டு. ஒன்று, சாணக்கியன் உட்படத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கல்முனையின் வரலாறு சரிவரத் தெரியாது என்பது.