கல்வித் தகைமையும் அரசியலும்

(என்.கே. அஷோக்பரன்)

அரசியலில் மாற்றம் வேண்டும் என்போர் பலரினதும் எண்ணப்பகிரல், ‘படிச்சவன் அரசியலுக்கு வரவேண்டும்’ என்பதாக இருக்கிறது. ‘படிச்சவன்’ என்ற சொற்பதத்தின் பயன்பாடு, கொஞ்சம் மேலோட்டமானது. ஆனால், பெரும்பாலும் இந்தச் சொல் ஏதோ ஒரு துறையில் கற்று, பட்டம் பெற்று, குறித்த துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ளமையைச் சுட்டியே, பொதுவில் பயன்படுத்தப்படுவதை அவதானிக்கலாம்.