கோபானியின் புதல்விகள்: வீரம்மிகு பெண்களின் கதைகள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

பெண்விடுதலையை, சமூக விடுதலையின் கூறாகவும் சமூக மாற்றத்தின் தவிர்க்கவியலாத அம்சமாகவும் காணுவது அடிப்படையானது. பெண் ஒடுக்கு முறையின் சமூக அடித்தளத்தைத் தெளிவாக அடையாளப்படுத்திய உலகப் பார்வையைத் தரும் களங்கள், எம்முன்னே விரிந்து கிடக்கின்றன. அவற்றிலிருந்து கற்றுக் கொள்வதற்கும் பெற்றுக் கொள்வதற்கும் நிறையவே உண்டு.