சர்வதேச நாணய நிதியம்: கலைய வேண்டிய மாயைகள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

சர்வதேச நாணய நிதியத்திடம் நாட்டை அடகு வைப்பது என்று, பலர் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள். இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, சர்வதேச நாணய நிதியம்தான் ஒரே வழி என்று, மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. சர்வதேச நாணய நிதியம் கடனை வழங்கி விட்டால், அனைத்துப் பிரச்சினைகளும் விரைவில் தீர்ந்து விடும் என்ற பிம்பம், தொடர்ச்சியாகவும் கவனமாகவும் கட்டமைக்கப்பட்டு வருகிறது.