சில தவறான, நேர்மையற்ற ஏதிர்வினைகள்

எமது கட்டுரைகளுக்கு வரும் சில ஏதிர்வினைகள் எம்மைப் பற்றி சில தவறான, நேர்மையற்ற கண்ணோட்டங்களைக் கொண்டிருக்கின்றன. நாம் மக்கள் விடுதலை முன்னணியின் (J V P) ஆதரவாளர்கள் அல்லது முன்னைய அங்கத்தவர்கள் என்னும் பொருள்பட சிலர் எழுதுகிறார்கள். நாம் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள், இந்நாள் ஆதரவாளர்கள் அல்ல. நாம் மக்கள் விடுதலை முன்னணியின் தவறுகளை விமர்சனமும் , அதில் தமது பாத்திரங்களை சுயவிமர்சனமும் செய்து கொண்டு வெளியேறிய முன்னிலை சோசலிச கட்சி, சமவுரிமை இயக்கம் என்னும் அமைப்புக்களின் ஆதரவாளர்களாகவே இருக்கிறோம்.