சுமந்திரன் – கண் மூடி ஆதரவும் எதிர்ப்பும்

கடந்த இரு நாட்களும் சுமந்திரனின் பேச்சை அதுவும் நேற்றைய பேச்சை இரு தடவைகள் கேட்டேன் .ஒரு ஆசிரியராக இருந்தால் 90 மார்க்குகள் கொடுப்பேன். கேள்விகளுக்கே இடம் இல்லாமல் அனைத்து விடயங்களையும் மிக தெளிவாக அனைவருக்கும் விளங்கும் விதமாக புள்ளிவிபரங்களுடன் பேசினார்.

நீங்கள் என்ன திறமோ என்று யாரும் கேட்க முதல் கூட்டமைப்பை பற்றிய விமர்சனத்துடன் தான் உரையை தொடங்கினார். மிக துணிவான விக்கியை ,கஜேந்திரகுமாரை, புலிகளை கூட விமர்சிக்க தவறவில்லை . சுமந்திரனில் எனக்கு பிடித்தவிடயமே இதுதான். அரசியல் நேர்மை என்பது இதுதான் .

கை தட்டலுக்கோ , தன்னை அழைத்தவர்களுகாகவோ அல்லது அடுத்த தேர்தலில் வெல்வதற்காகவோ அவர் பேசவில்லை எதிர்ப்பு வந்தாலும் பரவாயில்லை என்று உண்மையை பேசினார் .(நேற்றைய கூட்டத்தில் பேசிய மற்றைய அனைவரும் மேடைக்கு ஏற்ப பேசுபவர்கள் ).

சுமந்திரன் அரசியலுக்கு வந்த நாட்கள் முதல் அவரது செயற்பாடுகள் வழமையான அரசியல்வாதிகள் போல போலியாக இல்லாமல் உண்மையாக இருந்ததால் தான் பல தரப்புகளுக்களினதும் எதிர்பை சம்பாதிக்க நேர்ந்தது , குறிப்பாக புலம் பெயர்ந்தவர்களிடம் மிக அதிக எதிர்ப்பை சம்பாதித்தார் .

வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் சுமந்திரன் போலொரு நிலைபாட்டில் தான் எமது அரசியலிற்குள் வந்தார் . பின்னர் புலம்பெயர் தமிழர்களின் போலி தேசிய அரசியலுக்குள் பலியானதை போல சுமந்திரனை அவர்களால் வாங்கமுடியவில்லை .

இடைகால அறிக்கை பற்றிய அவரது பேச்சு மிக நிதர்சனமாக சற்று நக்கலாக இடைகால அறிக்கை என்றால் என்னவென்று தெரியாது, அதன் உள்ளடக்கம் தெரியாது ஆனால் எதிர்கின்றார்கள் என்றார் .

தமிழ் ஈழம் என்ற மாயையில் இருந்தவர்களை எதுவும் செய்யமுடியாது . முள்ளிவாய்க்கால் முடிவே பிரபாகரனின் இராஜதந்திரம் தான் “சிங்களவனை எப்படி கொண்டுபோய் சர்வதேசத்திடம் மாட்டிவிட்டார் ” என்று அரசியல் பேசுபவர்களை கணக்கில் எடுக்க தேவையில்லை . நாட்டில் இருப்பவர்களுக்கு இன்று ஒரு தீர்வு வராவிட்டால் இன்னும் இருபத்திஐந்து வருடங்களின் பின் தமிழன் என்றொரு இனம் இலங்கையில் இருந்தது என்றுதான் வரலாறு இருக்கும் .

இதுதான் யதார்த்தமும் உண்மையும் கூட.

(எனக்கு இன்னமும் அவரிடமும் கேள்விகளும் கூட்டமைப்பின் செயற்பாடுகள் மீதும் விமர்சனங்கள் இருக்கத்தான் செய்கின்றது.

(Parathan Navaratnam)