அது அரசியல் ரீதியாகவும் ஆயுதப் செயற்பாடுகள் என்றாக மக்கள் போராட்டம் என்ற வகையிற்கு பரிணாமம் அடையக் கூடிய வகையிலான வளர்ச்சிப் போக்கிற்கான செறிவை தனக்குள் கருக் கொள்ள அதிகம் முனைப்பெடுத்தது என்று பார்க்க முடியும்.
இதில் பத்மநாபா தலமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ்(EPRLF), ஈரோஸ்(EROS), புளட்(PLOTE), விசுவானந்த தேவன் தலமையிலான என்.எல்.எவ்.ரி(NLFT) தமிழ் மக்கள் பேரவை, ரெலோ(TELO), தமிழீழ விடுதலைப் புலிகள்(LTTE) என்றாக பல்முனை செயலாக்கங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
இதில் சித்தாந்த அடிப்படையில் இடதுசாரிக் கருத்தியல் வலதுசாரிக் கருத்தியல் என்றான் எழுச்சிகளும் இவற்றிற்கு இடையிலான வாதப் பிரதிவாதங்களும் இந்தச் சொல்லாடல்களை முன்னிலையில் வெளிப்படையாக கூறாவிட்டாலும் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
இங்குதான் கருத்தை கருத்துகளால் எதிர் கொள்ளல் அதன் அடிப்படையில் மக்கள்தான் தீர்மானகரமான சக்தி என்பதை முன்னிறுத்தாது வலதுவாரித்தனத்தின் அடிப்படைக் கூறுகளில் ஒன்றான வெறுப்பு அரசியலும் அதுசார்ந்த ஜனநாக மறுப்பும் பன்முகத் தன்மையை மறுதலிக்கும் செயற்பாடுகளும் அதிகம் உருவாகத் தொடங்கியது.
வுpமர்சனம் என்பதை வெறுப்பு அரசியல் ஆக்கும் வலதுசாரிகளின் கூறுகள் அதிகம் தலையெடுகத் தொடங்கின.
இதனை அதிகம் அமைப்பு ரீதியலான கருத்தியலாக தமிழீழு விடுதலைப் புலிகளே செயற்படுத்தினர். ஏனைய விடுதலை அமைப்புக்குளக்குள் இதன் கூறுகள் நடைமுறைத் தவறுகளாகவும் இருந்தன என்பதும் உண்மையே.
இதனை தமிழ் அரசியல் பரபில் மேலாதிக்கம் செலுத்திய யாழ்ப்பாண மையவாதம் தனக்குள் உள்வாங்கி தூய்மையான செயற்பாடு என்றான கோசத்துடன் யாழ்ப்பாணத்தில் வெறுப்பு அரசியலை விதைத்தவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அன்றைய யாழ்ப்பாணத் தளபதி கிட்டு.
இது அவரின் கீழ் உள்ள சகல விடுதலைப் புலிகள் உறுப்பினர்களிடமும் நன்று ஆழமாகவே விதைக்கப்பட்டு வேறூன்றியும் இருந்ததுஏனைய விடுதலை அமைப்புகளின் போராளிகளை ஏளனமாக வெறுக்கத்தக்கவர்களாக முகத்தை மறுபக்கம் திருப்பிச் செல்லும் உறவுகளையும் அவர்கள் தமக்குள் வைத்திருந்தனர்.
‘நேற்று’ வரை பாடசாலை நண்பர்களாக இருந்தவர்கள் இன்று தமிழீழ விடுதலை புலிகளுடன் இணைத்த பிற்பாடு தனது நண்பர் வேறு ஒரு அமைப்பாக இருக்கும் பட்சத்தில் அவருடனான பேச்சு வழக்குகளை நட்பை வலிந்து தொலைத்தவர்களாக செயற்பட்டனர்.
அந்த அளவிற்கான வெறுப்பு அரசியலை அந்த அமைப்பின் தலமைத்துவம் ஒரு பண்பாட்டு ரீதியாக கலாச்சாரமாக்கியும் இருந்தது
அதே காலத்தில் கிட்டுவிற்கு நான் எந்த வகையிலும் சளைத்தவன் அல்ல என்றாக வன்னிப் பிரதேசம் எங்கும் செயற்பட்டார் மாத்தயா.
பிற்காலத்தில் இவரை இதே வலதுசாரிகள் மண்ணோடு மண்ணாகவும் போட்டுப் புதைத்தனர் என்பது வேறு கதை.
இவரைப் புதைக்க முன்பு அவரும் கிட்டுவும் பல மாற்று அமைப்பினரை நான்கு விடுதலை அமைப்புக்கள் ஜக்கிய முன்னணியாக செயற்பட்ட காலத்திலேயே புதைத்தும் விட்டனர்.
தமது உறுப்பினர் மத்தியில் ஒழுக்காற்று என்ற ‘தூய்மை’ நடவடிக்கை என்றாக பொது மக்களுக்கு சீன் காட்டி செயற்பாடுகள் பலவற்றை அரங்கேற்றியவர் கிட்டு.
ஆனால் அவர் காலின் தொடைப் பகுதிகள் முழுவதும் தெரியும் வகையிலாக கழிசான் அழிந்து யாழ் நகரில் வலம் வந்ததை அந்த காலத்தில் அங்கு வாழ்ந்தவர்கள் பலரும் அறிவர்.
சிறீ சபாரத்தினத்தின் கொலையில் நேரடியாகவும் பல நூறு ரெலோ போராளிகளை சுட்டுக் கொன்றும் உயிர் துடிக்க நெருப்பில் ரயர் போட்டுக் கொழுத்தியவர்.
இதன் உச்சமாக வெலிக்கடைச் சிறப் படுகொலையை விஞ்சும் விதமாக புலிகளின் சிறைச்சாலைப் படுகொலையாக கந்தன் கருணைப் படுகொலையில் புலிகளின் அருணாவை ஈடுபட வைப்பதற்குரிய வளர்ப்புகளைச் செய்தவர்.
இந்தப் படுகொலை ரணினுடன் சம்மந்தப்பட்ட படலந்தை படுகொலைக்கு எந்த வகையிலும் சளைத்ததும் அல்ல.
இதற்கு வழக்காடு மன்றம் நடாத்தும் இலங்கை நீதி மன்றம் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தும் இலங்கை அரசு என்பன நியாயமான செற்பாட்டைச் செய்வதாகவே நாமும் உணர்கின்றோம்….
அப்படியாயின் கிட்டுவின் பெயரை எவ்வாறு தமது தேர்தல் பிரச்சாரத்திற்கான இடத்தை அறிவிக்கும் சுவரொட்டியில் அந்த ‘கிட்டு’வை இணைத்து பிரசுரிப்பார்கள் என்பதே எம் கேள்வியாகி இருக்கின்றது.
இத்தனைக்கும் அந்த இடம் முத்திரைச் சந்தி… சங்கிலியன் சிலை அடி…. சங்கிலியன் தோப்பு (என்ன அழகான தோப்பு என்ற பூங்காவிற்கான சொல்லாடல்)…. என்று மக்களால் விருப்புடன் மிக நீண்டகாலமாக புழக்கத்தில் இருக்கும் சூழலில் சட்டத்திற்கு உட்படாத கிட்டு பூங்காவை எவ்வாறு ஒரு இடததின் அடையாளத்திற்கு தேசிய மக்கள் சக்தி உபயோகிக்கலாம்.
இது தற்செயலாக நிகழ்ந்த செயற்பாடாக கடந்து போக முடியவில்லை நீதி மன்றங்களும் மக்கள் சபைகளும் தேசிய மக்கள் சக்தியின் முன்னிலை உறுப்பினர்களும் இதற்கான தெளிவுபடுத்தகளை வருத்தம் தெரிவிப்பதாக வெளிப்படுத்தியாக வேண்டும்.
இது போன்ற தவறுகள் உடனடியாக திருத்தப்பட வேண்டும்
இப்படி யோசித்து பார்ப்போமா…? தயா பத்திரனா வின் பெயரைத் தாங்கி ஒரு பூங்காவை.. இடத்தை… நீங்கள் உங்கள் சுவரொட்டியில் இணைப்பதான விடயம் ஏற்பட்டால் அதனை எவ்வாறு கையாண்டு இருப்பீர்கள் என்பதாக.
பாசிசமாக வளர்ச்சியடைந்திருந்த ஹிட்டருக்கு சமமானவரை கிட்டு என்பதாக நீங்கள் உணர மாட்டீர்களா….?