செம்மணி கொலைகள் பற்றி பொய் பேசும் வித்தியாதரன்

ஆனால் செல்வி கிருசாந்தி குமாரசுவாமி படுகொலை குற்றவாளி சோமரத்தின ராஜபக்சே தனது வாக்குமூலத்தில் புலிகளுடன் எவ்விதத்திலும் தொடர்பற்ற பல நூறு அப்பாவி பொதுமக்களை இராணுவம் கொன்று புதைத்ததை உறுதிப்படுத்தியிருந்தார்

குறிப்பாக கல்வித் திணைக்களத்தில் கடமையாற்றிய திரு செல்வரத்தினம் என்பவரைக் கப்டன் லலித், கப்டன் ஸ்ரீ ஜெயவர்தன, லெப்டினன்ட், துடுகல்ல ஆகியோர் சேர்ந்து கைது செய்து புதைத்தத்தை உறுதி செய்திருக்கின்றார்

விசேடமாக திரு செல்வரத்தினம் அவர்களுக்கு புலிகளுடன் எந்த தொடர்பும் இருக்கவில்லை என சோமரத்தின ராஜபக்சேவே தனது வாக்குமூலத்தில் வெளிப்படுத்தியிருந்தார்

கடமை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட யோகேஸ்வரன் என்பவரை விடுவிக்க உத்தரவு வழங்கப்பட்ட போதும் கப்டன் ஸ்ரீ ஜெயவர்தனா, லெப்டினன்ட் துடுகல்ல, உதயமார ஆகியோர் அவரை சித்திரவதை செய்து கொன்று புதைத்தாக சொல்லியிருந்தார்

கைதடி சென்று வியாபாரம் செய்ய பாஸ் பெற்றுத் தருமாறு கேட்ட பார்த்தீபன், சுதாகரன் என்ற இரு இளைஞர்களை கப்டன் ஸ்ரீ ஜெயவர்தனா, லெட்டினன்ட் துடுகல்ல ஆகியோர் தலைகீழாகக் கட்டித் தாக்கி கொன்று புதைத்ததையும் பதிவு செய்திருந்தார்

அரியாலையில் வீடொன்றில் தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்த இளம் தம்பதிகளை எழுந்தமானமாக கைது செய்து கணவர் முன்னிலையில் பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி கப்டன் ஹேவகே, அப்துல் நஸார், ஹமீத், சமரசிங்க ஆகியோர் இருவரையும் பொல்லுகளால் அடித்து கொன்று புதைத்தையும் வாக்குமூலத்தில் பதிவு செய்திருந்தார்

இது மாத்திரமின்றி 1996 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி அரியாலை இயந்திர திருத்தகம் ஒன்றில் வேலை முடித்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த அப்பாவி இளைஞர்கள் இருவர் கூட இப் பகுதியில் கொன்று புதைக்கப்பட்டனர்

இவர்களின் எலும்புக்கூடுகள் செம்மணி புதைகுழி தோண்டாப்பட்ட போது அடையாளம் காணப்பட்டன

அதே போல செல்வராஜா பிரபாகரன் என்கின்ற அப்பாவி இளைஞர் தொழில் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது,செம்மணியில் உள்ள ஒரு இராணுவ சோதனைச் சாவடியில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டார்

இது போதாதென்று இப் பகுதிக்கு நெருக்கமாக நாவற்குழியில் 1996ஆம் ஆண்டு யூலை மாதம் 19ஆம் திகதி மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன தலைமையில் 23 அப்பாவி இளைஞர்களை கைது செய்யப்பட்டு காணாமலாக்கி இருக்கின்றார்கள்

இவர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு மனுவில் மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்னவிற்க்காக வாதாடிய சட்டமா அதிபர் திணைக்களம் கூட மேற்குறி ப்பிட்ட இளைஞர்களை புலி சந்தேகநபர்களாக அடையாளம் காட்டவில்லை

அதாவது இவர்கள் யாருமே புலிகளோடு தொடர்புபட்டவர்களாக எந்த தளத்திலும் அடையலாம் காணப்படவில்லை

ஆகவே புலிகள் இயக்கத்திற்கு உதவியர்களே இலக்கு வைக்கப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்டதாக திரு வித்தியாதரன் சொல்லுவதில் எந்த உண்மையுமில்லை

அதே போல பொதுமக்களுக்கு நெருக்கமாகவிருந்த இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதால் தான் மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா யாழ்ப்பாணத்திற்கு அனுப்பட்டதாக வித்தியாதரன் சொல்வதிலும் உண்மையில்லை

யாழ்ப்பாண படையெடுப்பிற்கு முன்னேற 53 வது பிரிவின் தளபதியாக திருமதி சந்திரிக்கா குமரத்துங்கா ஜனக பெரேரா அவர்களை நியமித்திருந்தார்

யாழ்ப்பாண நகரம் (டிசம்பர் 1995), தென்மராட்சி (ஏப்ரல் 1996) மற்றும் வடமராட்சி (மே 1996) ஆகியவற்றைக் இராணுவம் கைப்பற்ற ஆற்றிய பங்களிப்புக்காகவே ஏப்ரல் 15, 1996 அன்று அவர் மேஜர் ஜெனரல் பதவிக்கு பதவி உயர்வு பெற்றார்.

இது போதாதென்று இராணுவ புலனாய்வு பிரிவின் முதலாவது பணிப்பாளரும் ஜேவிபி தலைவர் திரு ரோஹண விஜேவீர அவர்களின் கைது மற்றும் விசாரணையோடு தொடர்புபட்டிருந்த முன்னாள் இராணுவ தளபதி லயனல் பலகல்லே அவர்களை ஏன் புகழுகின்றார் எனவும் தெரியவில்லை

Leave a Reply