செல்வி நினைவாக….

(Maniam Shanmugam)

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியான வவுனியா – சேமமடு குடியேற்றத் திட்டத்தைச் சேர்ந்த ‘செல்வி’ என்று அழைக்கப்படும் செல்வநிதி தியாகராசா அவர்கள் 1990 ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு, பல மாதங்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழர் சமுதாயத்தின் துன்பமான பக்கங்களில் ஒன்றாகிவிட்டது.