தமிழ்த் தேசிய அரசியலின் எதிர்நிலைப்பாடு

(லக்ஸ்மன் )

வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களின் தமிழ்த் தேசிய அரசியல் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) – தேசிய மக்கள் சக்தியின் மாற்றம் எனும் அலையில் அடிபட்டுப் போனதைப் பற்றி இன்னமும் சிந்திக்காத தமிழ்த் தேசிய அரசியல் கட்சியினர் இப்போதும் தமது வெறுப்புணர்வுகளையும், வெப்புசாரங்களையும் கோப தாபங்களையும், இறுமாப்புகளையும், வெட்டுக்குத்துக்களையுமே வெளிப்படுத்திவருகின்றனர். இது தமிழர்களின் அபிலாசை நிறைவேற்றத்துக்கு எதிரான நிலைமையையே மேலும் வலுப்படுத்தும் என்பதனை மறந்தும் விடுகிறார்கள்.