தியாகிகள் தினம்

அதுவும் சிறப்பாக ஆமெரிக் மேலாதிகத்தில் அதிகம் உள்ளாகப்பட்டிருந்த தென் அமெரிக்கஇ பல் வேறு பல மூன்றால் உலக நாடுகள் இந்த போராட்டத்தின் பொறி தட்டப்பட்டிருக்கும் கால தாமதங்கள் இன்றி. இதனாலும் மக்களும் சுரண்டல் அற்ற வாழ்வை நோக்கி பயணிக்க ஆரம்பித்து இருப்பர்.

கியூப புரட்சியும் அங்கு உருவான அரசும் சேய் இற்கு வழங்கிய அமைச்சர் பதவியும் அவரை பல நாடுகளு;கும் செல்வதற்கான வாய்ப்புக்களையும் அதனால் பல சந்திப்புகளை மேற் கொள்வதற்கும் வாய்புகளை ஏற்படுத்தியிருந்தது.

அதுவே அவரின் மரணத்தின் பின்பும் அவரை மரணத்தை; தொடர்ந்தும் இந்த உலகம் அவர் பற்றி பேசுவதற்கு வாய்பை ஏற்படுத்தி அவரின் செய்பாடுகளை மனிதாபிமானததை மக்கள் மீதான நேசிப்பை உருவாக்கும் மக்கள் புரட்சிகளுக்கான செயற்பாடுகளை இன்றுவரை ஊக்கிவித்துக் கொண்டும் இருக்க உதவுகின்றது.

கூடவே கியூபா நாடும் அதன் தலைர் பிடல் காஸ்ரோவும் சேய் மீதான் அமெரிக்க ஏகாதிபத்தியம் மேற்கொண்ட சூழ்ச்சிக் கொலையை அம்பலப்படுத்தி அவரின் மரணத்தின் பின்பும் அவருக்கு வாழ்வுண்டு என்பதை செய்வதில் கணிசமான பங்கை ஆற்றியிருக்கின்றது அதனை இன்னமும் செய்தும் கொணடிருக்கின்றது. அதனால் அவரின் கருத்து உலகம் எங்கும் உள்ள மக்கள் பற்றிக் கொள்வதற்கு வாய்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

எனக்கு அறிமுகமான காலத்தில் இருந்து அவரின் மரணம் வரை ஒன்றாக பயணி;த தோழர் நபாவின் வாழ்வும் கிட்டத்தட்ட சேயின் மரண வயதிலேயே அமெரிக்க சார்பு பாசித்தினால் அதே ஏகாதிபத்திய நலன்களினால் செயற்படுதப்பட்டது.

ஆனால் சேய்யிற்கு கிடைத்த தள்களைப் போல் புரட்சியல் விடுதலை அடைந்த நாடும் அதன் தலைவர் பிடல் போன்ற வாய்புகள் இல்லாமல் போனமையினால் சேய் போன்று ஒரு மகத்தான் மக்கள் தலைவரின் சிந்தனை பலமாக பரந்துபட்டு எழுந்து வர முடியவில்லை இதுவரை.

ஈழத்தில் ஒரு இடதுசாரிச் சிந்தனை செயற்பாடு அதனை ஒட்டி எதிர்காலத்தில் முழு இலங்கையும் ஒரு இடதுசாரி நாட்டிற்குரிய பண்பாட்டு மாற்றம் அல்லது புரட்சி ஏற்படுவதை தடுப்பதற்காக ஈழவிடுதலை அமைப்புகளின் இடதுசாரி சிந்தனை அழிப்பதற்காக கொல்லப்பட்வர்தான் தோழர் பத்மநாபா. தோழர் நாபாவின் சிந்தனையை அழிப்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்வர்தான் தோழர் நாபா.

அதுவும் தமிழக மண்ணில் தங்கும் இடமுமு; உண்ண உணவும் படிப்பதற்கு உதவிகளையும் செய்து கொடுத்து ஒரு இளம் மாணவனின் நம்பிக்கைத் துரோகம் அவனும் இணைந்து துப்பாக்குயுடன் அவரின் இருப்பிடம் தேடி வந்து பதின்மூவரை சுட்டுக் கொன்ற கொடூடமான நிகழ்வு நடைபெற்று 32 வருடங்கள் ஓடிவிட்டன. இந்தினத்தை அந்த சிந்தனை கொள்கையுடன் வாழ்பவரகள் ஆண்டு தோறும் பல்வேறு தளங்களிலும் தியாகிகள் தினமாக அனுஷ்டித்து வருகின்றனர்.

இவை ஒரு துருவத்தில் இருந்து மறு துருவம் வரை பல்வேறு நாடுகளில் தமிழகத்தில் இலங்கையின் பல பாகங்களிலும் நடைபெற்றும் வருகின்றது.

தோழர் நாபாவின் சிந்தனையை கருத்தியலை சமதர்ம வாழ்விற்கான பயணத்தை அழிப்பதற்கு தமிழீழ ஆயத அமைப்பு ஒன்றினால் கொல்லப்படுவதற்கு வகைகளை செய்து கொடுத்தது இந்த முதலாளித்துவ அமெரிக்க ஏகாதிபத்திய சிந்தனைதான் தத்துவாரத்;த ரீதியில் ஆழமாக பாரத்தால் இதனை புரிந்து கொள்ள முடியும்.

மனித நேயத்தின் விளை நிலமாக ஒரு பண்பாட்டு மாற்றத்தை தமிழர் தரப்பில் மட்டும் அல்ல அதனைத் தொடர்ந்து இலங்கைப் பெருபான்மை மக்கள் மத்தியிலும் எற்படுத்தும் செயற்பாட்டின் வேலைத் திட்டங்களை முன்னெடுக்கும் அரசியல் செயற்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்பாடாக பத்மநாhவின் கொலையை நாம் பார்க்க முடியும்.

இன்றுவரை அவரின் சிந்தனைகளை பலரும் காவித்திரிந்தாலும் அவை ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு பலமான அமைப்பாக ஸ்தாபன வடிவம் பெறுவதில் இதுரை வெற்றியடையவில்லை அவரின் மனிதாபிமான மக்கள் நலன் சார்ந்த சர்வதேசிய கருத்தியலை சமதர்மக் கருத்தியலை பாரியளவில் முன்னுக்கு கொண்டுவரவும் முடியவில்லை.

இதுவே இன்றைய 32 வது அவரது நினைவு தினத்தில் என் விமர்சனப் பார்வையாக இருக்கின்றது. இந்த விமர்சனப் என்னை நோக்கியதும்தான்.

அவரின் சிந்தனையை தாங்கியவர்கள் செயற்பாட்டாளர்கள் பல்வேறு தளங்களில் அமைப்புகளில் அரசியல் கட்சிகளில் உள்நாட்டிலும் சர்வதேச நாடுகளிலும் உள்ளனர். சிறப்பாக தமிழ் நாட்டு இந்தியவர்கள் பலர் இருக்கின்றனர்.

அவரின் இந்த சிந்தனையாளர்கள் ஒருங்கிணைகப்படவில்லை என்ற ஆதங்கங்கள் பலரிடமும் உண்டு. ஆனால் இதற்கான நடைமுறைச் சாத்தியமான செயற்பாட்டு முறை இதுவரை பாரியளவில் முன்னெடுக்கப்பட்டு வெற்றியை அடைய முடியவில்லை. இது இன்றைய வரலாற்றின் முக்கிய தேவையாகவும் இருக்கின்றது.

ஆனால் தேர்தல் அரசியலில் இவரின் பெயரை பாவித்தும் இதன் மறுவளமாக இவரின் கொலைக்கு காரணமான புலிகள் அமைப்பின் பிரபாகரனை காரணமாக்கியும் வாக்குகள் சேகரிக்கு அரசியலே அதிகம் நடைபெற்று வருகின்றது.

இருக்கும் அமைப்புகள் ஒன்றாவது ஐக்கியப்படுவதற்கு அப்பால் அவரின் கொள்கை சிந்தனை செய்பாடுகளில் அடிப்படையிலான இணைப்பு ஏற்படுத்தப்பட்டு ஒரு மித்த செயற்பாடுகள் முன்னெடுப்பதே சரியானதும் சாத்தியமானதும் கூட வரலாறு கூறி நிற்கும் பாடங்களும் இதுவே.

தமிழ் நாட்டிலும் ஏன் பலவேறு உலக நாடுகளிலும் ஒரு குறிப்பிட்ட தலைவரின் சிந்தனையை பல அமைப்புகள் வரிந்து கொண்டு உடன்பாட்டுடனும் முரண்பாட்டுனும தனித்துவமாக பயணிப்பது போல். உதாரணமாக தமிழ் நாட்டில் பெரியார் சிந்தனைiயுடன் பலரும் பயணிப்பது போல் செயற்பட்டாக வேண்டும்.

தமிழ் நாட்டில் பெரியாரின் கருத்துடன் பயணித்து அறிஞர் அண்ணாவும் அவரால் தொடங்கப்பட்ட திராவிடக் கட்சிகளும் ஆரம்பத்தில் தேர்தல் அரசியல் பற்றி பெரியாருடன் முரண்பாட்டை கொண்டிருந்தாலும் இன்றுவரை பெரியாரின் கருத்தை தூக்கிபிடித்து பகுத்தறிவு சமூக நீதிஇ சாதி மறுப்பு பெண்விடுதலை என்ற தளத்தில் அவரின் சிந்தனைகளை காவிச் செல்லும் செயற்பாட:டு வடிவங்கள் இதுவரை ஈழத்தில் பத்மநாபா போன்றவர்களின் கருத்தியலை காவிச் செல்வதற்குரிய சூழல் உருவாக்கப்படவிடலை.

மாறாக மனித நேயத்திற்கு எதிரான ஏகபோக சிந்தனைக் கருத்தியலும் குறும் தேசியவாதமும் சாதியக் கட்மைமைப்புக்களை நிறுவி நிற்கும் சமூக நீதியிற்கு எதிரான சிந்தனையும் பாசிசச் செயற்பாடுகளின் எச்சங்களையுமே நாம் அதிகம் நாம் காணக் கூடியதாக இருந்கின்றது.

தமிழ்நாட்டில் பெரியாரின கருத்தியலை அம்பேத்காரின் கருத்தியலை கியூபாவிலும் ஏனைய உலக நாடுகளிலும் சேயின் சிந்தனை செயற்பாடுகளை காவித்திரியும் நிலைகள் போல் தோழர் பத்மநாபாவின் கருத்தியலுக்கு செயற்பாட்டு நிலை இலங்கையில் ஏற்பட்டால் தமிழ் சமூகத்தில் மாத்திரம் இன்றி இலங்கையிலும் ஒரு சமூக மாற்றத்திற்கான வாய்ப்புகளை அதிகம் ஏற்படுத்தமுடியும்.

இதற்கு அவரின் செயற்பாடுகள் சிநதனைகள் பற்றி முழுமையான சரியான புரிதலை நாம் ஏற்படுத்தியாக வேண்டும்.

மாறாக துப்பாக்கியினால் மட்டும் அதிகாரம் கடைக்கின்றது என்ற ஏக போக சிந்தனையும் செயற்பாடும் தொடர்ந்த அனைத்து ஈழ விடுதலை அமைப்புகளின் தலைவர்களையும் ஒவ்வொன்றாக கொன்று குவித்தவர் எமது மீட்போன்…. அவரின் சிந்தனை எம்மை வாழ் வைக்கும் என்று நம்புவது எப்போது மீட்சி வாய்ப்புகளை ஏற்படுத்தாது.

தமிழ் நாட்டில் உள்ள இலங்கை அகதிகளுக்கான புழல் முகாமில் வருடா வருடம் தோழர் பத்தமநாபாவின் மரண தினமான ஜுன் 19 அன்று தியாகிகள் தினத்தை அனுஷ்டிக்கின்றார்கள் என்றால் இதிலிருந்து ஒரு வலுவான செய்தியை நாம் அறிந்து கொள்ள முடியும்….

ஈழவிடுதலைப் போராட்டம் ஆரம்பித்து 50 வருடங்கள் கடந்த நிலையிலும் இலங்கை தமிழர்கள் ஒரு அகதி முகாமில் அதுவும் தமிழ் நாட்டில் வாழ்வைத் தொடரும் அவலங்கள் இன்னமும் முடிவிற்கு வரவில்லை……!

இந்தப் போராட்டம் தமிழ் தலமைகளையும் முற்போக்காளர்களையும் அறிஞர்களையும் கொன்று குவித்ததே அதிகம். பல காரணங்களுக்கு அப்பால் எம்மை பலவீனமான நிலைக்குத் தள்ளி இந்த அகதி முகாம் வாழ்வில் இருந்து பலரும் மீளமுடியாமலும் செய்துவிட்டது.

இந்த செய்தி போராட்டத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமித்திருந்த இலங்கை தரப்பிற்கும் தமிழ் தரப்பிற்கும் ஏன் சர்வதேசத்திற்கும் சமர்பணம்.

இந்தப் போராட்டத்தின் இடையில் ஏற்பட்ட பேச்சுவார்த்தையும் இன்றுவரை அரசியல் அமைப்பு ரீதியாக கிடைத்த அதிகாரப்பரவலாக்கலான மகாணசபையும்தான் இன்றுவரை என்மால் பெற முடிந்தது.

அன்று அதனை இணைந்து பலமாக நின்று செயற்படுத்த முற்பட்டிருந்தால் இன்று இன்னும் அதிகாரங்களைப் பெற்ற பல மைல் கற்களை நாம் அடைந்திருக்கலாம்.

இதனை ஆரம்ப புள்ளியாக கொண்டு அதன் திசை வழியே பயணிப்பதே சரியான முடிவாக இருக்கும் என்பதை அன்று தோழர் நிறுவி நிற்பதே அவரின் தூர நோக்குப் பார்வையும் ஆகும். அதனை இன்று வரலாறு நிறுவியும் நிற்கின்றது.

பன்முகத் தன்மை கொண்ட அதிகாரப் பரவலாக்கத்தில் அனைத்துத் தரப்பு தமிழ் பேசும் மக்களும் இணைந்து பலமாகப் பயணிப்பதே சரியான பாதை. இதனை செயற்படுத்த முயல தோழர் நாபா எடுத்த அரசியல் முடிவுகள் தான் அவரைக் புலிகள் கொல்வதற்கான முதன்மைக் காரணமாகவும் அமைந்தது.

மக்களின் விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்த அனைத்து போராளிகள் பொதுமக்களுக்கும் தியாகிகள் என்ற கௌரவமான வரலாற்றுப் பாத்திரத்தின் அடிப்படையிலான மரியாதை கலந்த அஞ்சலி வணக்கங்கள்.

(June 19, 2022)