திருவிழா முடிந்தது… சோற்றுக்கு என்ன வழி?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

தேர்தல் திருவிழா முடிந்தது. தேர்தல் வாக்குறுதிகளும் இத்தோடு முடிந்துபோம். இனிக் கொஞ்சம் நிதானமாகச் சிந்திப்போம். கொவிட்-19 தொற்றுக் காலத்தில், இலங்கை பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்கிறது. கடந்த ஒருமாத கால தேர்தல் பிரசாரங்கள், நெருக்கடிகளை உருமறைப்புச் செய்து, மக்களின் கவனத்தைக் கச்சிதமாகத் திசைதிருப்பி இருக்கின்றன. ஆனால், அவை ஒவ்வொன்றாக, இலங்கையர்களைப் பாதிக்கும். அந்தப் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு, நாம் தயாராக இருக்கிறோமா?