தோழர் . முகுந்தன்

ஒவ்வொருவருக்குமான தனித்த விசாரணையில் அவர்கள் முகுந்தனை அடையாளம் கண்டனர். அதுபற்றிய ஒப்புக்கான விசாரணைக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட சிறை கொலை முறைக்கும் பொறுப்பாயிருந்த வதைமுகாம் பொறுப்பாளன் சொன்னான் ,,; முகுந்தன் தங்களுக்குக் கிடைத்த முத்து.

சங்கிலிகளால் தறையப்பட்ட கை கால் விலங்குகளில் ஒரு பார மரக்குற்றியை எந்நேரமும் இழுத்துத் திரிந்தபடி துணுக்காய் வதைமுகாமில் தினமும் அடிவாங்கி சித்திரவதைப்பட்டு கொல்லப்பட்டார் முகுந்தன்.