தோழர் றொபேட் என்ற சுபத்திரன்

குடும்ப வாழ்விற்குள் தன்னை இணைத்துக் கொள்ளாமல் தாய் தந்தையர் இருவரையும் தனது எதரிகளுக்கு இரையாக்கி எதிர் புரட்சிகர சக்திகளின் கொலை மிரட்டல்களையும் ஏதிர் கொண்ட வண்ணம் மக்களுக்கு சேவை செய்வதில் அவர் காட்டிய ஈடுபாடு அவரின் உயிரைக் காவு கொள்வதில் பெரும் பங்காற்றியது.

தமிழ் நாட்டு அகதிகள் முகாம்… தாயகத்திற்குள் இடம் பெயர்ந்து முகாங்களில் வாழ்ந்தவர்களின் வாழ்வியல் யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர்கள் ஒவ்வொருவராக சுட்டு எரிக்கப்பட்டிருந்த காலத்திலும் தைரியமாக தப்பியவர்களை…. எஞ்சியவர்களை வைத்து மக்களுக்கான சேவைகளை வழங்கியவர்.

இத்தனைக்கும் இவர் தனது அமைப்புச் சார்ந்து ஒரே ஒரு மாநாகர சபை உறுப்பினராக மட்டும் அக் காலத்தில் சபையில் இருந்தார்.எரிக்கப்பட்ட யாழ் பொது நூலகம் மீள் உருவாக்கம் திறப்பு என்று தமிழ் பேசும் மக்களின் அடையாளங்கள் இவரின் பங்களிப்பு உச்சமானது…முதன்மையானது.

அவரின் நினைவு தினமான இன்று அவர் பற்றி அவருடன் மரணம் வரை பயணித்த தோழன் என்ற வகையில் ஒரு நீண்ட பதிவை எழுத முனைந்தேன் நேரம் இடம் கொடுக்கவில்லை. ஆனாலும் அவருடன் சிறை என்றும் எங்கும் ஒன்றாக பயணித்த தோழர் சுகு திருநாவுக்கரசு என்ற என் தோழனின் பதிவை இத்துடன் இணைக்கின்றேன். அவருக்கு என் மரியாதை கலந்த அஞ்சலி.

அவரின் மரணத்திற்கு சில நாட்கள் முன்பு தாயகம் சென்று தோழர் றொபேட்டை சந்தித்து என்னை விமான நிலையத்திற்கு வழியனுப்பி விட்டு யாழ்ப்பாணம் சென்றவர் நான் புலம் பெயர் தேசத்திற்கு வந்து இரு தினங்களில் கொலை செய்யப்ட்டார் என்ற செய்தி அமெரிக்காவில் இருந்த போது இரவு கிடைத்த போது அதிர்ந்து விட்டேன். வேலை விடயமாக பயிற்சி வகுப்பிற்கு போன நான் எனது பயிற்சியை இடையில் நிறுத்திவிட்டு வீட திரும்பியும் விட்டேன்

பல இழப்புகள் போலவே இதுவும் தமிழ் பேசும் மக்களுக்கான பாரிய இழப்பாகும்.யாழ் பெரியாஸபத்திரியிற்கு மன்னால் உள்ள தமது அலுவலகத்தின் மொட்டை மாடியில் உடற் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளை யாழ் வேம்படி மகளிர் கல்லூரியின் இரண்டாம் மாடிக் கட்டம் ஒன்றில் இருந்து இயக்கிய தூர இலக்கை தாக்கும் துப்பாக்கியானல் இவர் சுட்டப்பட்டு கொல்லப்பட்டார்.

தனது சிறைக் காலத்தில் இவருடன் ஒன்றாக இருந்தவர்களின் கூற்றுப்படி பல்வேறு விடுதலை அமைப்புகளின் உறுப்பினர்கள் இடையே ஐக்கியத்தைiயும் புரிந்துணர்வையும் தோழமையையும் வளர்ப்பதில் என்றும் இவர் முன்னிலை வகித்தவர் என்பதை பலரும் அறிய முடியும்.மக்களுக்காக போராட புறபட்ட இவரை மக்களுக்காக போராடுகின்றோம் என்று சொன்னவர்கள் தமது ஏக போகத்திற்காக இவரை கொன்றொழித்தது

அவர்கள் மக்கள் விடுதலையை சரியான திசை வழியில் நகர்த்தவில்லை என்பதை எடுத்துக் கூறி நிற்கும் சம்பவமாக இதனையும் பார்க்க முடியும்.

இனி தோழர் சுகு திருநாவுக்கரசின் பார்வையில் தோழர் றொபேட்….

மானிடப்பெருங்கனவுடன் மறைந்த தோழர் தோழர் றொபேர்ட் ரஞ்சன் சுபத்திரன் அறவிழுமியங்களின் அடிப்படையிலான துணிச்சலைக் கொண்டவர். நாங்கள் நேர்மையாக இருக்கும்போது மற்றவர்கள் ஒன்றும் செய்யமுடியாது என உறுதியாக நம்பியவர்.சமூக இயக்க வாழ்விற்கு வரமுன்னரேயே யாழ் சமூக நிலப்பிரபுத்ததுவ மதிப்பீடுகளை நிராகரித்தவர்.

இயல்பாகவே பகுத்தறிவு சிந்தனை அவருள் குடி கொண்டிருந்தது.சமூக நடத்தைகள்பற்றிய கூருணர்வு அவரிடம் இருந்து.ஜெயகாந்தனை ஜோன் ரீட்டை இன்னும் பலரை இயக்க வாழ்விற்கு வரமுன்னரே வாசித்திருந்தார்சமூகம் கவிதை யதார்த்த மற்றும் சர்வதேச சினிமா பற்றிய பிரக்ஞை இருந்தது. அவற்றை எப்போதும் தரிசனம் போல் செய்வார்.

ஒருமுறை மண்டபம் முகாமிற்கு சென்று வரும் போது மதுரையில் கூத்து பட்டறை உட்பட ஆற்றுகை நிகழ்ந்து கொண்டிருந்தது. குளிப்பு முழுக்கு மாற்றுடை வசதிகள் இல்லா விட்டாலும் மெய்மறந்து அவ்விடத்தில் தரித்து விடுவார்.

தோழமைக்கு அப்பால் அலாதியான நட்பு பேணும் இயல்பு. உதவி என்று வருபவர்களுக்கு தன்னால் முடிந்ததை மானசீகமாக செய்தல்.குறுகிய கோஸ்டி வாத சிந்தனைகள் போலி விசுவாசம் தனிமனித வழிபாடு போன்றன அவரிடம் இருந்ததில்லை.

கொள்கை பொது நியாயங்களில் இருந்து தனது கருத்துக்களை உறுதியாக முன்வைப்பார்.பொது வாழ்வில் பொய் களவு பித்தலாட்டம் ஸ்துதி போன்றன அவரால் சகித்துக் கொள்ளப்பட்டதில்லை. இயக்க வாழ்விற்கு அப்பால் அவரது வாழிட சூழலில் இருந்து இளம் பிராய வாழ்வு அனுபவத்தில் இருந்து இயல்பாக வந்ததுஅவரது நண்பர்கள் பலர் பின்னர் தோழர்கள் ஆயினர்.

புலிகளால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட அவரது தந்தையார் தம்பிராசாவும் பின்னர் புலிகளால் நாடுகடத்தப்பட்டு புத்திர சோகத்துடன் மறைந்த அவரது தாயார் இரத்தினம்மாவும் மிகவும் கண்ணியமான மனிதர்கள்.

இயக்கத்தினுள் இருந்த குட்டிமுதலாளித்துவ பிரிவினர் ஒரு சிலர் எப்போதும் 1990 இற்கு பின்னர் முகாம்களில் இருக்கு தோழர்களை சந்திப்பதை தவிர்த்து வந்தனர்.அவர்கள் இயக்கத்தின் சார்பில் கனவான்களாக பிரமுகர்களாக வாழமுற்பட்டனர்.

தலைமையிடத்தின் பலவீனங்களை பயன்படுத்திக் கொண்டு பொருளாதார மற்றும் சவ்கரியங்களை அனுபவித்துக்கொண்டு வேசமிட்டு திரிந்தனர். இந்த வகையறாக்களால் நிகழ்ந்த விபரீதங்கள் பேரழிவுகள் கொஞ்ச நஞ்சமல்ல.

ஆனால் குறைந்த வளங்களுடன் அதிகாலையிலேயே முகாம்களுக்கு மண்டபம் திருச்சி சென்னை என அவர் ஓடித்திரிந்தார். தோழர்களின் விரக்தி கோபம் இன்பதுன்பம் எல்லாவற்றையும் எதிர் கொண்டார். பங்கு பற்றினார்.

1980 களின் முற்பகுதியில் தென்மராட்சி பகுதியில் இருந்து குறிப்பிடத்தகுந்த அளவில் தோழர்களை முற்போக்கு இடது பாரம்பரியங்களை சேர்ந்தவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் குறிப்பிடத் தகுந்த பங்காற்றினார்.

கட்சிக்கான நிதி ஆதாரங்களை திரட்டுவதிலும் அவர் சக தோழர்களுடன் இணைந்து பாரிய பங்களிப்பை வழங்கினார்.அரச வதைமுகாம்களிலும் சிறையிலும் இயக்கம்கடந்த தோழமை நட்பை சக கைதிகளான போராளிகளுடன் பேணியவர்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் பொதுமன்னிப்பில விடுதலையான பின்னரும் தனது சகாக்கள் பாதுகாப்பாக தமது இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று விரும்பினார்.அக்காலத்தில் சிறையிருந்த கைதிகளுக்காக கப்பிதாவத்தைபிள்ளையார் கோயில் அருகாமையில் தங்குவதற்கான இடமொன்றை ஏற்பாடு செய்து அவர்கள் பாதுகாப்பாக வீடு அல்லது வேறு இடங்களுக்கு செல்வதற்கு சக சிறைத்தோழர்கள்நண்பர்களுடன் இணைந்து பணியாற்றினார்.

புலிகளின் கோரத்தாண்டவத்தில் கிழக்கு வடக்கில் இருந்து தப்பிய தோழர்கள் சக இயக்க போராளிகளும்அங்கு தஞ்சம் புகுந்திருந்தனர்.அவர் இயக்க வாழ்விறிகு பிரவேசித்த காலத்திலிருந்து வடக்கு கிழக்கு தெற்கின் நீள அகலங்களில் அலுப்பு சலிப்பின்றி பயணப்பட்டார்.

பூச்சியத்தில் இருந்தும் நாம் எழலாம் என்ற நம்பிக்கையை எப்போதும் கொண்டிருந்தார்.அவர் தனது சமூக வாழ்வின் பெரும்பகுதி இயக்கத்தின் இருண்ட கடினமான பக்கங்களில் தான் வேலை செய்தார். சௌகரியமான பக்கங்கள் இருந்ததில்லை.சாவின் நிழலில் வடக்கு கிழக்கு தோழர்களை அணுகினார். மக்களை சந்தித்தார். நட்பைஉருவாக்கினார்.

யாழ் மாநகரசபை செயற்பாடுகளிலும் சரி ஒரு ஜனநாயக மாதிரியாக உருவாக்குவதில் சகோதர கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவதில் அர்பணித்திருந்தார்.சாவின் நிழலில் ஒவ்வொருமரணச்சடங்ககையும் கண்ணியமாக நடத்துவதில் இறந்தவர்களுக்கு உரிய மரியாதையை வழங்குவதில் சக தோழர்கள் சக நட்பு சக்திகளுடன் இணைந்து பணியாற்றினார்.

குருநகர் படைமுகமில் இரும்பு சங்கிலிகளால் பிணைக்கபட்டிருந்து பின்னர் வெலிகடை சிறை வாழ்ந்து இலங்கை இந்திய ஒப்பந்தத்தின பின்னர் விடுதலையானார். தமிழ் பாசிசத்தன் சாவின் நிழலில் அவர் பிணைக்கபட்டிருந்தார்.இந்த சங்கிலிகள் தெறிக்கும் .நாம் சுதந்திரமாகி விடுவோம் என்ற பெருநம்பிக்கை எப்போதும் அவரை ஆகர்சித்திருந்தது.

சமாதான காலம் என்று சொல்லப்பட்ட கொலையாளிகள் சுதந்திரமாக உலாவிய காலத்தில் கூட தெற்கில் இருந்து வந்த ஊடகவியலாளர்களையும் இன நல்லுறுவை அவாவியவர்களையும் யாழில் உபசரித்து பேணினார்.இன உணர்வுக்குள் ஆட்பாடாத மானிடத்தின் இன்பதுன்பம் பற்றிய பிரக்ஞை இருந்தது.

இடையறாத மானிட தரிசனம். தேடல் பெருங்கனவு. இவ்வாறு எப்பிரதிபலனும் பாராது மறைந்த தோழர்கள் முன்னுதாரணம். பின் பற்ற முயலவேண்டும். சுய விளம்பரத்திற்கும் பாசாங்கு பிரார்த்தனைகளுக்கும் தனிப்பட்ட பொய்யான அடையாளங்களுக்கும் பலியல்ல இவர்களின் வாழ்வும் மரணமும்