இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வென்று ஜனாதபதியாக அனுர குமார திசநாயக்கா பதவி ஏற்றதும் தேர்தலுககாக நாடாளுமன்றத்தை கலைத்ததால் தேர்தல்வரை ஆட்சியை நடாத்துவதற்கு தன்னுடன் இணைந்து மொத்தம் மூவராக ஒரு மந்திரி சபையை அமைத்தார்.
அதில் நாட்டின் பிரதம மந்திரியாக ஹரிணி அமரசூரியாவை நியமித்தார். விஜித ஹேரத் வெளிவிகார அமைச்சராக பொறுப்பெடுத்தார்
மூவர் கொண்ட அமைசர் அவை நாட்டை பாராளுமன்றத் தேர்தல் வரை மிகச் சிறப்பாக ஆளுமை செலுத்தியதை இலங்கை மக்கள் அறிவர்.
பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் அபார வெற்றியிற்கு இந்த மூவர் குழு அரசாங்கமும் மிக முக்கிய காரணம்.
அதிலும் பிரமராக பொறுப்பெற்ற ஹரிணி அமரசூரியாவின் செயற்பாடுகள் ஜனாதிபதி அனுராவிற்கு மிக அண்மையாக மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்ததும் காரணாக அமைந்தன.
அவரின் புலமை, அதனை தன் அடக்கத்துடன் வெளிப்படுத்திய பண்பு, எளிய மக்களுடன் மிக சகஜமாக பழகியது, விடயங்கள் தெளிவாக கையாண்டது. நுpர்வாக விடயங்களில் ஆளுமையாக அதிகார அகங்காரம் அற்று செயற்பட்டது என்றாக அவரைப் பற்றி பலதையும் கூறலாம்.
சிறப்பாக இம் மாதிரியான உயர் அடுக்கு பதவிகளில் அமர்ந்தவுடன் நடை உடை பாவனை பழகுதல் அதிகாரம் என்பனவற்றில் ஏற்படும் ஒரு வகை செயற்கைத் தன்மையை மமதை ஆடம்பரம் ஏதும் இன்றி மிக இயல்பாக அவர் நடந்து கொண்டார்… செயற்பட்டார்…. செயற்படுகின்றார்…
அதனைத்தான் இன்று வரை தொடர்கின்றார்
எவ்விடங்களிலும் இயல்பாக கொண்டுள்ளார்
ஒரு நாட்டின் வளர்ச்சியிற்கு முன்னேறி சமூக அமைப்பிற்கு அந்த நாட்டின் கல்வி அறிவு மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கும் என்பது உண்மை.
அதுவும் ஆசியாவில் அதிகளவு எழுத்தறிவுகளை கொண்டிருக்கும் சமூகமாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் மக்களின் கல்வித் தரத்தை மேலும் உயர்த்துவதற்கான சீர்திருத்தங்கள் என்றாக அவர் அத்துறை சார்ந்தவர்களை சந்தித்து பாடசாலைகளுக்கு விஜயம் செய்து என்றான நம்பிக்கைகளை தொடர்ந்தும் விடாப்பிடியாக செய்தார் செய்து வருகின்றார்.
அப்போது எல்லாம் பொதுமக்களால், மாணவர்களால், குழந்தைகளால் பெண்களால் அவர் வரவேற்கப்படும் போது காட்டும் தாய்மையான பாங்கு எல்லோராலும் விரும்பப்படும் அடுத்த வீட்டுப் பெண் போல் தோன்றும் அந்த பாங்கு எல்லாத் தரப்பினராலும் விருபப்பட்டது.
நம்பிக்கையுடன் அவருக்கு அருகாக அழைத்துச் சென்று உறவாக பார்க்கப்பட்டது அதனைத்தான் கடந்த ஒரு வருடம் கடந்து பல மாதங்களாக கடைப்பிடித்தும் வருகின்றார்.
அதே வேளை வெளிநாட்டுத் தலைவர்கள் என்றாக இராஜதந்திரிகள் பிரமுகர்களை சந்திக்கும் போது அவர் காட்டும் மாண்பு புலமை மிடுக்கு இலங்கையின் தரம்பற்றி மதிபீட்டை உயர்த்தியும் வந்திருக்கின்றது
அது அவர் கற்ற கல்வியினால் வந்தது மட்டும் அல்ல அவரின் பண்பினாலும் வந்ததுதான்.
அண்மையில் ஏற்பட்ட அனர்தங்களின் போது தனது காற் சட்டையை மடித்துவிட்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த அந்த பாங்கு அவர் எவ்வளவு இயல்பானர் என்பதை காட்டி நின்றது. மக்களை அரவணைத்த அவரை மக்களும் அணைத்துக் கொண்டனர்.
இது வயது வேறுபாடுகள் இன்றி பால் இன வேறுபாடுகள் இன்றி அனைவருமாக அவருடன் இணைந்ததை பார்க்க முடிந்தது.
பாராளுமன்றத்திலும், வெளியிலும், கல்வி சீர்திருத்தம் பற்றி அவரின் முன்மொழிவு தீர்மானம் இலங்கையை முன்னோக்கி நகர்த்தும் என்றாக நம்பவும் வைத்து.
இதற்கும் அப்பால் பராளுமன்றத்தின் தலைவர் என்றாக பாராளுமன்ற அமர்வுகளில் அவர் கலந்து கொள்ளும் போது விவாதங்களில் கலந்து கொண்ட போது அவர் கையாண்ட பொறுமைகள், பொறுப்புகள், பதிலளிப்புகள், பாராளுமன்றத்திற்குள்ளும், வெளியிலும் பலரை அவர் மீதும் இலங்கை அரசு மீதும் நம்பிக்களை வலுப்படுத்தியது.
எதிர் கட்சிகள் அது தமிழ், சிங்கள தரப்பு என்றாக தேசிய மக்கள் சக்தியைத் தவிர மற்றை எல்லோராலும் என்ன செய்தும் அரசிற்கு தவறுகளை சுட்டிக் காட்டி கெட்ட பெயரை ஏற்படுத்த முடியாத போனது.
இந்த அரசை எப்படியாவது வீழ்த்தி தம் மீதான கடந்த காலக் குற்றங்களுக்கு விசாரணை என்றான நீதி செயற்பாட்டில் இருந்து அரசியல் செல்வாக்கால் கடந்த காலங்களைப் போல் எவ்வாறு தப்பலாம் என்றதற்கான முஸ்திபுகளை இந்த எதிர் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. அதற்கு எதிர் கட்சிகளுக்கு இந்த அரசை ஆட்டம் காண வைக்க வேண்டும் என்பது நம்பிக்கைச் செயற்பாடுகள்.
அரசின் செயற்பாடுகளை வைத்து இதனை செய்ய முடியாத போது அரசிற்குள் முரண்பாடுகள் குழப்பங்கள் என்றாக அரசு அமைந்த முதல் நாளில் இருந்து குறிவைக்கப்படுபவர் ஹரிணி அமரசூரியா.
இதற்கு ஒரு காரணமும் உண்டு அவர் ஜேவிபி இன் உறுப்பினர் இல்லை.
ஆரம்பத்தில் அவரை வேறு ஒரு பதவியிற்கு மாற்றுதல் என்றாகவும் முயன்றனர்.
இதில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களின் ஒரு சிலரும் வரிந்து கட்டிக் கொண்டு செயற்படுவதை தொடர்ந்தும் சமூக ஊடகங்களில் காண முடிகின்றது.
இது அதிர்சிகரமான செயற்பாடு ஆகும்.
இதற்கு எதிர் கட்சியினர் எடுத்திருக்கும் ஆயுதம் …
ஹரிணியை மையமாகக் கொண்டு எழுந்திருக்கும் ‘ஸம-லிங்கிக’ என் விளக்கம் அற்ற சர்ச்சை
இன்று ‘ஸம-லிங்கிக’ சிங்கள சமூக ஊடகங்களில் அதிகமாக முஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் சொல்லாக இது மாற்றப்பட்டிருக்கின்றது.
‘ஸம – லிங்கிக(සමලිංගිකත්වය)’ என்பது தன்பால் ஈர்ப்பை (Homosexuality) ஐ குறிப்பதற்கு பாவிக்கப்படும் சிங்களச் சொல்.
ஆண்கள் பெண்களை விரும்புவதும் பெண்கள் ஆண்களை விரும்புவதும் (எதிர்ப்பால் ஈர்ப்பு – Hetero sexual) இயல்பானது.
ஆனால் ஆண் – ஆண் மற்றும் பெண் – பெண் என்ற விதத்தில் ஏற்படும் பாலியல் ஈர்ப்பு இயற்கைக்கு மாறானது தவறானது என்றான பொதுப் பார்வை நிலவி வருவதும் உண்மை.
ஆனால் இந்த ஈர்ப்பும் இயல்பானது என்பது உயிரியல் விஞ்ஞானம் ஏற்றுக் கொண்ட உண்மை.
ஆனால், எதிர்ப்பால் ஈர்ப்புக்கு அப்பால் பல்வேறு வினோதமான பாலியல் நாட்டங்களுடன் கூடிய ஒரு பிரிவினர் சமூகத்தில் வாழ்ந்து வருகிறார்கள் என்ற இந்த உயிரியல் ரீதியான யதார்த்தத்தை நாம் மறுக்க முடியாது.
அந்த மாற்றுப் பால் ஈர்ப்பாளர்களை நாங்கள் அங்கீகரிக்க வேண்டும் என்பதும், அவர்கள் தொடர்பாக சகிப்புத் தன்மையுடன் கூடிய ஒரு அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்பதும் ஹரிணி அமரசூரிய போன்றவர்களின் கருத்து.
இது தற்போது பல நாடுகளினால் அங்கீகரகப்பட்டு பொது மக்களில் பெரும்பான்மையினால் புரிந்து கொள்ளப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமும் ஆகும்.
இந்த கருத்தை பழமைவாத சிந்தனையாளர்கள், மத நம்பிக்கைகளுடன் இணைந்து திரிபு படுத்தி ஹரிணி அமரசூரியாவிற்கு எதிராக திருப்ப முயலுகின்றனர்.
இதுவே இன்றை நம்பிக்கையில்லாப் பிரேரணையிற்கான உசுப்பேத்தல் காரணமாக முன்னிலைப்பட்டும் நிற்கின்றது.
இன்று இறுதியாக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில் தீர்மானம் என்றாக புறப்பட்ட எதிர் கட்சியினர் நுகேகொடவில் கிடைத்த புஸ்வாணங்கள் மீண்டும் சந்திப்பர் என்பது உறுதி.
இதன் மூலம் அரசிற்கான ஆதரவு மக்கள் மத்தியில் மேலும் அதிகரிகவே செய்யும். இதில் பிரதமர் கல்வி அமைச்சர் பெண் என்றாக இன்னும் எழுந்து நிற்றலாக எமது பிரதம மந்திரி ஹரிணி அமரசூரியா விளங்கப் போகின்றார்.
சோசலிச சமூகத்தை கட்டியமைக்கும் சமூக நலத் திட்டங்கள் என்றான நகர்வை விரும்பாத முதலாளித்து சக்திகள் உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் இதற்கான காய்களை நகர்த்தினாலும் இலங்கையில் (இது சற்று அதிகமான ஒப்பீடாக இருந்தாலும்) ஒரு வெனிசுலாவை ஏற்படுத்த முடியாது .
எமது பிரதமர் ஹரிணி அமரசூரியாவின் பக்கம் நின்று மக்கள் சக்தியாக எதிர் கட்சிகளாக இருக்கும் எதிரியின் செயற்பாடாக செயற்படும் அவர்களை வீழ்த்துவோம்.