பொது மக்கள் மீதான தாக்குதலை முக்காலதிலும் யாரும் ஆதரிக்கவில்லை……வெறுக்கின்றனர்

1985 மே 14 அனுராதபுர புனித நகரத்தில் புனித வெள்ளரசு மரக்கிளையின் கீழ் துப்பாக்கி சூடும் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இத்தாக்குதலை செய்தவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்கான ஒரு தமிழர் அமைப்பு. தாக்குதலின் பின்பு இத்தாக்குதல் தமிழர்கள் முழுவதுமாக சிங்களவரகளுக்கு எதிராக செயற்பட்டதாக முழுச் சிங்கள மக்களாலும் உணரப்படவில்லை. இத்தாக்குதலை மிகப் பெரும்பான்மையான தமிழ் மக்கள் வெறுத்தனர்…..ஆதரிக்கவில்லை.

1990 ஆகஸ்ட் 3 காத்தான்குடி பள்ளி வாசலில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லீம் மக்களுக்கு எதிராக துப்பாக்க சூடு நடைபெற்றது பல நூறு மக்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலை செய்தவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்கான ஒரு தமிழர் அமைப்பு. தாக்குதலின் பின்பு முழு முஸ்லீம் மக்களும் இத்தாக்குதல் தமிழர்கள் முழுவதுமாக முஸ்லீம்களுக்கு எதிராக செயற்பட்டதாக முழு முஸ்லீம் மக்களாலும் உணரப்படவில்லை. இத்தாக்குதலை மிகப் பெரும்பான்மையான தமிழ் மக்கள் வெறுத்தனர்……ஆதரிக்கவில்லை.

இன்று 2019 ஏப்ரல் 21 ஈஸ்ரர் ஞாயிறு அன்று பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் நடைபெற்றது. இத் தாக்குதலை செய்தவர்கள் முஸ்லீம் மக்களிடையே உருவான முஸ்லீம் தீவிரவாத அமைப்பு. தாக்குதலின் பின்பு முழு இலங்கை மக்களும் இத்தாக்குதல் முஸ்லீம் தவிர்ந்த ஏனைய இலங்கை மக்களுக்கு எதிராக முழுவதுமாக இலங்கை மக்களுக்கு எதிராக செயற்பட்டதாக முழு இலங்கை மக்களாலும் உணரப்படவில்லை. இத்தாக்குதலை மிகப் பெரும்பான்மையான முஸலீம்மக்கள் மக்கள் வெறுத்தனர்…… ஆதரிக்கவில்லை.

இதுதான் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற குண்டுத்தாக்குதல் பற்றிய சரியான பார்வையாக இருக்க வேண்டும் என்று நாம் திடமாக நம்ப வேண்டும் ஏன் எனில் அதுதான் சரியானதாக இருப்பதினால்.