மகிந்தவின் பேச்சின் சாரம்சம்.

ஒரு அரசுக்கு தனது நிதி நிலமை பற்றி முன்கூட்டியே அறிந்திருக்க வேண்டும். கோவிட்டை மட்டும் காரணத்துக்கு அழைப்பது பொய்யானது. தனியே ஏனைய அரசுகளில் கடன் வாங்கி பாதுகாப்பு செலவிற்கு பாரிய நிதியை ஒதுக்கி தம்மால் ஊதிப்பெருக்கிய இராணுவத்திற்கு இறைத்து விட்டு மக்களை ஏமாற்றுகின்றார்.

இவர்களை இலங்கை மக்கள் வீட்டிற்கு அனுப்புவதன் மூலம்.எதிர் கால அரசியல்வாதிகளிற்கு பாடமாக அமையும். இலங்கையில் இப்படியான அரசியல்வாதிகள் இருக்கும்வரைக்கும் சிறுபான்மை மக்களின் உரிமைகள் எப்பவும் மறுதலிக்கப்படும்.

நடை பெறும் போராட்டங்களில் வன்முறையை திணித்து இராணுவத்தின் மூலம் போராட்டங்களை ஒடுக்கலாம் என இராஜபக்சகள் ஏங்கி தவிர்க்கின்றனர். உலகில் மிக அதிகமான விடுமுறை நாட்களை கொண்ட நாடுகளில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது. எப்படி நாட்டில் உற்பத்தி திறன் இருக்கும்?

கோவிட் காலத்தில் பல நாட்கள் நாட்டை முழுமையாக முடக்கி பெருமிதம் கொண்டது. உற்பத்தியில் அக்கறை கொண்ட நாடுகள் மிக கவனமாக செயற்பட்டன.

சீனாவிடம் கடன் வாங்கி தனது கட்சி சின்னத்தில் ஒரு கோபுரம், இராஜபக்சாக்களின் அம்பாந்தோட்டையில் பறவைகள் சரணாலயத்தில் பயணிகள் அற்ற விமான நிலையம், துறைமுகம்? இவைகள் அனைத்தும் இலங்கை பொருளாதாரத்தினை முன்னுக்கு தள்ளியதா?

இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் முதுகெலும்பாக இருக்கின்ற மலையக மக்களிற்கு ஆயிரம் வழங்க மனமற்று வஞ்சித்த அரசு. தமிழ் மக்களிற்கான குறைந்த பட்ச உரிமைகளை வழங்காமல் அடம்பிடித்த அரசு.

சிங்கள மக்களிற்கு யுத்தவெற்றியை காட்டி இனவாதம்தினை தூண்டிய அரசு. இஸ்லாமிய தமிழர்களின் ஜனசாக்களை அவர்களின் மார்கக்ம் சார்ந்து அடக்கத்தினை செய்யமறுத்த அரசு.

இவற்றை எல்லாவற்றினையும் பார்த்த சில தன்னைத்தானே புத்திஜீவிகள் என நினைக்கும் இலங்கை புலத்து வாழ் தமிழர்கள் நடைபெறும் போராட்டங்கள் மூலம் எதுவும் சாதிக்கமுடியாது என கருதி மறைமுகமாக இராஜபக்ச இருப்பிற்கு ஆதரவாக கைகாட்டுகின்றனர்.

போராட்டங்கள் வெற்றி அளிக்குமோ அளிக்காது என்பதுக்கு அப்பால் மக்களின் சிந்தனையிலும் எதிர்கால அரசியலிலும் மாற்றம் ஏற்படும்.

தமிழ்மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டால் இராஜபக்சாக்கள் வன்முறை போராட்டமாக மாற்றுவார்கள் என்ற அச்சம் பல தமிழர்களிடம் உள்ளது. ஆனால் இணைந்து போராடுவதால் இன ஒற்றுமையும் மற்றும் சிறுபான்மை சமூகத்தின் நியாயமான கோரிக்கைகளை பெரும்பான்மையினர் புரிந்து கொள்ள ஓர் வாய்ப்பாக அமையும்.

இந்த நெருக்கடிகள் சிங்கள மக்களை மட்டுமே தாக்கும். அவர்களால் உருவாக்கபட்ட அரசினை அவர்களே தூக்கி எறியட்டும் என கருதுவது முழு முட்டால் தனமானது.

ஒரு நாட்டின் பொருளாதார நெருக்கடி அந்நாட்டில் வாழும் அனைத்து பிரஜைகளுக்கும் பொதுவானது என்பதனை மறப்பது முட்டாள்தனமானது.

எப்பவும் தமிழ் தரப்பு சரியான திசை நோக்கி பயணம் செய்யாது என்ற அவநம்பிக்கையும் மேலும் இராஜபக்சாவின் பேச்சு சிங்கள மக்களை இனவாத மாயைக்குள்ளா தொடர்ச்சியாக வைத்திருக்க போகின்றார்களா என்ற அச்சம் நீடிக்கின்றது

(சுதாகரன்) 11.04.2022