மக்கத்துச் சால்வை Slm Hanifa பச்சோந்தியான கதை – 5

வடக்குகிழக்கு மாகாண சபையில் ஓர் உறுப்பினராகச் செயற்பட்டு வந்தேன். அந்தச் சபையில் எல்லா உறுப்பினர்களுக்கும் கிடைத்தது போல எனக்கும் ஒரு பஜிரோ ஜீப் கிடைத்தது. அதை நான் குறுகிய காலத்துக்குள் விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு அதை விற்று விட்டேன். அது இலங்கையில் ஒன்றும் புதினமான விஷயமோ பாரியதொரு குற்றமோ அல்ல. அப்படித் தங்களுக்குக் கிடைக்கும் வாகனங்களை விற்கும் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளில் நானும் ஒருவன், அவ்வளவுதான்.