‘மலைநாடு’ கண்ட முதல் பேராசிரியரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது!!!

கண்டி மாவட்டம் ரங்கல எனும் பிரதேசத்தில் பிறந்த அவர் அங்குள்ள தோட்டப்பாடசாலையில் ஆரம்பக் கல்வியைத்தொடர்ந்தார். தந்தை தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர். 1948ஆம் ஆண்டு குடும்பம் தலவாக்கலைக்கு இடம்பெயர்ந்தபோது அங்கு அரச சிரேஷ்ட பாடசாலையில் சாதாரண தரம் வரை பயின்றார். இப்பாடசாலை தற்போதுள்ள பொலிஸ் நிலைய கட்டிடத்துக்கு அருகில் அமைந்திருந்தது.
பின்பு 1959இல் தெல்லிப்பளை மகஜன கல்லூரியில் உயர்தரம் பயின்று 1961இல் பேராதணை பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி பொருளியலை விசேட பாடமாக தொடர்ந்த இவர் 1965இல் உதவி விரிவுரையாளராகும் பணியாற்ற ஆரம்பித்தார்.

இரண்டு வருடங்களில் நிரந்தர விரிவுரையாளராகி பின்பு 1969 இல் இங்கிலாந்தின் மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பொருளியல் முதுமாணி பட்டத்தைப் பெற்றார். 1974 ஆம் ஆண்டிலிருந்து பேராதணைப்பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராகி கடமையாற்றிவந்த இவர் 1993 இல் பொருளியல்துறை பேராசிரியராகவும் 1997 இல் துறைத்தலைவராகவும் தெரிவுசெய்யப்பட்டதுடன், 2006 இல் ஓய்வு பெற்றிருந்தார்.

நூல்கள், கட்டுரைகள், ஆக்கங்கள், ஆயு;வுகள் என் பல பரிமானங்களை தன்னகத்தே கொண்டிருந்தவர். “தேயிலையின் செலுமையும் தொழிலாளர்களின் ஏழ்iமையும்” என்ற இவரின் சமூக பொருளாதார ஆய்வு நூல் மலையக சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி நூலாகும். இலக்கிய ஆளுமை மிக்கவரான பேராசிரியர் சின்னதம்பி மலையகத் தமிழர்களுக்கு தனியான பல்கலைக்கழகமொன்று அவசியமென வலியுறுத்தியவருமாவார்.

இவர் மலையக சமூகத்துக்காக பல வழிகளிலும் சேவை செய்துள்ளார். பேராசிரியர் சின்னதம்பியின் இழப்பானது மலையக சமூகத்துக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது.

அன்னாரின் இறுதி கிரியைகள் நாளை (28) மாலை 4 மணிக்கு கொழும்பு – பொரளை கனத்தையில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரின் பூதவுடல் அஞ்சலிக்காக பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

(தரவுகள் – சிவலிங்கம் சிவகுமாரனின் அண்ணாவின் நேர்காணல்)