மூன்றாவது வேட்பாளர்

(என்.கே. அஷோக்பரன்)
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல்கள் எப்போதுமே இருதரப்புப் போட்டிகளாகவே அமைந்திருக்கின்றன. பல கட்சி முறைமை நடைமுறையிலிருக்கும் நாடாக இருந்தாலும், பிரதான கட்சிகளாக இரண்டு கட்சிகளே எந்தக் காலகட்டத்திலும் இருந்து வந்த போக்கைக் காணலாம். ஏனைய கட்சிகள் ஒன்றில் ஏதோவொரு பிரதான கட்சியோடு கூட்டணி வைத்திருக்கும் அல்லது, தனித்து எதிர்த்தரப்பிலிருக்கும் அரசியல் பாணியே இங்கு காணப்படுகிறது.