மே 19 போர் வீரர் நினைவஞ்சலி உரை: குளவிக் கூட்டுக்கு கல்லெறிந்திருக்கும் ஜனாதிபதி!


(Mlm Mansoor)

கடந்த 19 ஆந் திகதி தலைநகர் கொழும்பு போர் வீரர் நினைவுத் தூபிக்கு அருகில் இலங்கையின் உள்நாட்டுப் போரில் (1979 – 2009) உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் 16 ஆவது தேசிய நிகழ்வு இடம்பெற்றது. அதில் பங்கேற்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆற்றிய உரை தென்னிலங்கை அரசியலில் ஒரு பெரும் சூறாவளியை கிளப்பியிருப்பதுடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்களில் ஓரளவுக்கு பலவீனமடைந்திருந்த NPP இன் வாக்கு வங்கியில் அநேகமாக மேலும் ஒரு சரிவு ஏற்படுவதற்கு வழிகோலள முடியும்.