விக்கினேஸ்வரன் அவர்களுக்கு

இப்போது உங்களுக்கும் பதவி ஆசை வந்துவிட்டது. மலினமான அரசியல் பேசுகிறீர்கள்.மதவாதம் இனவாதம் பேசுகிறீர்கள்.சட்டம் படித்த நீத்வான் மக்களைஏமாற்றுவதோ தகாத அரசியல் பேசுவதோ அழகல்ல.

கன்னியாவில் இந்து மதசாமிமீது ஒருவர் சுடுநீர் ஊற்றியதை இன மதவாதமாக சித்தரித்து அரசியல் ஆதாயம் தேடுவது நீங்கள் வகித்த பதவிக்கும் படித்த கல்விக்கும் கேவலமான விசயம்.இந்த மாதிரியான் விசயங்களுக்கு தமிழ் இந்துக்களே வழிகாட்டிகள்.

மாவிட்டபுர ஆலய பிரவேச போராட்டத்தின்போது உள்ளே இருந்து கொதிக்கும் எண்ணையை வெளியே வீசிய வரலாறு உண்டு. பேராசிரியர் சுந்தரலிங்கத்துக்கு கச்சேரியில் கூழ் முட்டை வீசிய கதையும் உண்டு.பல தேர்தல் கட்சிக் கூட்டங்களுக்கு கல் எறிந்த வரலாறு உண்டு.ஏன் ஜே.ஆர் அவர்களின் மேடையை சரித்த வரலாறும் உண்டு.விஜயவீரவின் மண்டையை பிளக்க கல் எறிந்ததும் தமிழர்களே.

ரெலோ போராளிகள்மீது மலம் வீச வைத்த புலிகளின் கோழைத்தனமான வரலாறும் உண்டு.உடுப்பிட்டியில் ஜே.வி.பி கூட்டம் ஒன்றில் புலிகளால் மலம் வீசி குழப்பிய கதைகளும் உண்டு.இத்தனை அசிங்கமான நடவடிக்கைகள் எல்லாம் யாழ் குடாநாட்டிலேயே நடந்தன.வேறு எங்கும் நடத்தவில்லை. தமிழ் பேசுபவர்களே செய்தார்கள்.

அரசியல் ஆதாயத்துக்காக இனவாதம் மதவாதம் பேசுவதை நிறுத்துங்கள்.முடிந்தால் வரணி சிமிழ் அம்மன் கோவில் பிரச்சினையை பேசுங்கள்.வீண் புரளி கிழப்பி நாட்டைக் கெடுக்க வேண்டாம்