‘விஸ்வரூபம் காட்டப்படுவதன்று; காணப்படுவது’ என்று புதுமையான வியாக்கியானம் அளித்தவர் ஜே.கே.

எங்கள் கிரேஸி குழு நண்பன் பார்த்தி மூலமாக ஜே.கே எனக்குப் பழக்கம்.

ஒரு விருது வாங்க ஜெயகாந்தன்
டெல்லிக்குச் சென்றபோது, இவரது எழுத்தை ஒரு அட்சரம்கூட படித்திராத சாமானியன் பார்த்தியும் இவரோடு துணைக்குச் சென்றான். ஜே.கேவுக்கு அவ்வளவு ஆத்மார்த்தத் தோழன் பார்த்தி.

என்னுடைய மகன் திருமணத்துக்கு வந்தது
ஜே.கே என்னும் ‘ஞானரதம்’!

என்னை அருகே கூப்பிட்டார்.
என்ன சொல்லப் போகிறாரோ என்று பயத்துடன் சென்றேன்.

என்னிடம் அவர் சொன்னது: ‘மோகன்… பார்த்தியைப் பார்த்துக் கொள்ளுங்கள்’.

எப்பேர்ப்பட்ட மனிதாபிமானம்!

ஜே.கே விரசம் இல்லாமல் சமூக அவலங்களைச் சொல்லவல்ல
‘சரஸ்வதி மைந்தன்’!

இவர் உள்ளங்கையில் நெல்லிக்கனியாக எப்போதும் மகாகவியின் கவிதைப் புத்தகம் இருக்கும்.

‘பாரீஸுக்குப் போ’, ‘விழுதுகள்’, ‘நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ’, ‘நந்தவனத்தில்
ஓர் ஆண்டி’ இப்படி பல சகாப்தங்கள்
படைத்த இவர்… தோழர்களுக்கு
‘சக ஆப்தனாக’ இருந்தார்!


க்ரேஸி மோகன்.