வெளிச்சத்தை நோக்கிய இளைஞர்களின் பயணம்

2018ம் ஆண்டிற்கான வெளிச்சத்தை நோக்கிய இளைஞர்களின் பயணம் அமைப்பின் செயற்பாடுகள்

12/02/2018:- நிலாவெளி பிரதான வீதி இலுப்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள வடிகான் துப்பரவு செய்யப்பட்டது.

28/07/2018:- புளியங்குளம் நாகம்மாள் ஆலயத்தில் சரிந்து வீழ்ந்திருந்த மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டு புனரமைக்கப்பட்டது.

07/09/2018:- ஆத்திமோட்டை பாடசாலையில் பெதுமக்களுடனும், பிரதேசசபை ஊழியர்களுடனும் இணைந்து சிரமதானப்பணி மேற்கொண்டு அதில் அகற்றப்பட்ட கட்டிட கழிவுகளை கொண்டு சிதைவடைந்து காணப்பட்ட குறுக்கு வீதியில் கெட்டிநிரவப்பட்டது.

09/09/2018:- ஆத்திமோட்டை 10வீட்டுத்திட்டப்பகுதியில் அமைந்துள்ள பொதுக்கிணறு தூர்வாரப்பட்டு சுற்றுச்சூழலும் துப்பரவு செய்யப்பட்டது.

16/09/2018:- புவனேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி தினத்தை முன்னிட்டு சிரமதானப்பணி மேற்கெள்ளப்பட்டது.

24/09/2018:- சாம்பல்தீவு 6ம் வட்டார பகுதியில் அமைந்துள்ள பொதுக்கிணறு தூர்வாரப்பட்டதுடன் சுற்றுப்புரமும் துப்பரவு செய்யப்பட்டது.

30/09/2018:- சிறுப்பிட்டி கிராமத்தில் மேடுபள்ளமாக சிதைவடைந்து காணப்பட்ட குறுக்கு வீதி கிரவல் நிரவப்பட்டு செப்பனிடப்பட்டது.

08/10/2018:- சாம்பல்தீவு பகுதியில் அமைந்துள்ள பொதுக்கிணறு ஒன்று தூர்வாரப்பட்டது.

08/10/2018:- நவராத்திரி விரதாரம்பத்தை முன்னிட்டு சிறுப்பிட்டி ஊற்றங்கரைப்பிள்ளையார் ஆலயத்தில் சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது.

22/10/2018:- பற்றைக்காடுகளால் மூடப்பட்டிருந்த இலுப்பைக்குளம் கிராமத்தின் குறுக்கு வீதி ஒன்று துப்பரவு செய்யப்பட்டது.

இவை இவ்வருடத்தின் அபிவிருத்தி வேலைதிட்டங்களாகும்.
இவற்றிற்கு மேலாக:-

உயர்தரத்தில் கணிதப்பிரிவில் கற்கும் வருமை நிலையில் உள்ள மாணவி ஒருவர்க்கு மாதாந்தம் ரூபா2500 உதவித்தொகை வழங்கப்படுகின்றது.

புத்திசுயாதீனமற்ற யுவதி ஒருவர்க்கு ரூபா6000 பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பபட்டது.

வருமை நிலையுடைய ஒரு குடும்பத்தில் நோய்வாய்ப்பட்டு இறந்த சிறுமி ஒறுவரின் இறுதிக்கிரியைகளுக்காக ரூபா5000 பணம் வழங்கப்பட்டது.

சல்லி, இலுப்பைக்குளம் விளையாட்டுக்கழகங்களுக்கு தலா 5000ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

2019ம் ஆண்டிலும் இதை விட அதிகபடியான சேவைகளை வழங்க விரும்புகின்றோம். உதவி செய்ய விரும்புபவர்கள், எம்முடன் இணைந்து செயற்பட விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவும்.

இச் சேவைகளை சிறப்புடன் செயற்படுத்துவதற்கு உதவிய, உதவிக்கொண்டிருக்கின்ற நண்பர்கள், சகோதரர்கள், வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள். மற்றும் ஆலோசனைகளை வழங்கும் பெரியோர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

அமைய இருக்கும் ஆங்கில புதுவருடம் அனைவருக்கும் சாந்தியும், சமாதானமும், சுகஆரோக்கியமும், சுபீட்சமும் உடையதாக அமைய எல்லாம் வள்ள இறைவனை பிரார்த்திப்பதோடு எமது புதுவருட நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.